செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சிங்காரப்பேட்டையில்பெரியார் வீர விளையாட்டுக்கழகத்தின் சார்பில் மாபெரும் கபாடி போட்டி




                                                                    கோலகோலத்துடன் வான வேடிக்கையோடு  மின்னொளியில் தொடங்கியது

கொட்டும் பனியிலும்  பல்வேறு கிராமங்களில் இருந்து திரண்டு வந்து
          மக்கள் கண்டு களித்தனர்!

திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் சிங்காரப்பேட்டையில் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் ஜனவரி 29 ,30 ஆகிய இரு நாட்கள் அம்பேத்கார் திடலில் நடைப்பெற்றது .விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை மாலை 8 மணி அளவில் தொடங்கியது .

மேளதாளத்துடன் தொடங்கிய ஊர்வலம்










 முன்னதாக மாவட்ட தி.க தலைவர் கே.கே.சி.எழிலரசன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா சந்திரன் ,மு.ஊராட்சி மன்ற துணை தலைவர் கரும்பாயிரம்   தி .க. முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் ஜி.கருணாநிதி, இந்திய தேசிய காங்கிரஸ் இர.திருநாவுக்கரசு திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வ.க.அசோக் ஆகியோர் முன்னிலை வகிக்க பேரறிஞர் அண்ணா சிலைக்கு ஒலி முழக்கங்கள் விண்ணதிர மாலை அணிவிக்கப்பட்டது .அந்த இடத்தில்இருந்து பட்டாசுகள் வெடிக்க மேளதாளத்துடன்  பெரியார் வீர விளையாட்டுக் கழகம் என்னும் பதாகை தாங்கியபடி எராளமான கழக தோழர்கள் அணி வகுக்க ஊர்வலம் புறப்பட்டது .ஊர்வல பாதை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தன .பட்டாசுகளின் வெடி சத்தமும் தோழர்களின் உற்சாக ஒலி முழக்கமும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுவதாக இருந்தது .ஊர்வலப் பாதையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் பெயர் பலகையில் இருந்த அம்பேத்கார் படத்திற்கு மாவட்ட தி.க தலைவர் கே.கே.சி எழிலரசன் மாலை அணிவித்தார் .

கழக கொடி ஏற்றல்

விளையாட்டு மைதானத்தில் அமைக்கபட்டிருந்த கொடிக்கம்பத்தில் தந்தை பெரியார் வாழ்க !திராவிடர் கழகம் வெல்க ! என்ற ஒலி முழக்கங்கள் எழுப்ப மாவட்ட திக தலைவர் கே.சி.எழிலரசன் கழக கொடியை ஏற்றினார் .கண் கொள்ள வாணவேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது

விருந்தினர்களுக்கு சிறப்பு 















சுயமரியாதை சுடரொளி மானமிகுகே.கே.சின்னராசு அவர்களின் நினைவாக  முதல் பரிசுக்கான தொகை அளித்து விழாவில் தலைமை தாங்கிய மாவட்ட தலைவர் கே.சி .எழிலரசன் அவர்களுக்கும் ,சுயமரியாதை சுடரொளி மானமிகு அ.பழனியப்பன் அவர்களின் நினைவாக இரண்டாம் பரிசு வழங்கிய முன்னால் மாவட்ட செயலாளர்  பழ.பிரபு அவர்களுக்கும் முன்னிலை வகித்த ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா சந்திரன் ,மூன்றாம் பரிசு தொகை வழங்கிய திமுக மாவட்ட துணை செயலளர் ஏ .என்.ராஜா ,திக மண்டல செயலாளர் பழ .வெங்கடாசலம் ,முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கரும்பையிரம் மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் ஜி.கருணாநிதி, இந்திய தேசிய காங்கிரஸ் இர.திருநாவுக்கரசு, திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வ.க.அசோக்,மாநில ப.க துணை தலைவர் அண்ணா .சரவணன் ஆகியோர்களுக்கும் ஆறாம் பரிசாக ரூ.1000 அதிமுக ஊராட்சி மன்ற செயலாளர் ம.சத்தியநாராயணமூர்த்தி,டிஜிட்டல் பேனர்களுக்கு அன்பளிப்பு வழங்கியஎஸ்.எ.தியாகராசன்  அண்ணா அப்பாசாமி பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம் அண்ணா அப்பாசாமி மற்றும் காய்கறி வியாபாரி ஒருங் கிணைப்பாளர் விஜய் ஆகியோர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது .
செப்-17 க்குள் தந்தை பெரியார் சிலை
















பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தோழர் திருமுகம் வரவேற்புரை ஆற்றினார் முன்னால் மாவட்ட செயலாளர் பழ .பிரபு அறிமுக உரையாற்றினார் முன்னிலை வகித்த மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் ஜி.கருணாநிதி அவர்கள் வருகிற செப்டம்பர் 17 க்குள் சிங்காரப்பேட்டையில் பெரியார் அம்பேத்கார் சிலை நிறுவப் படவேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடமும் மாவட்ட திமுக துணை செயலாளரிடமும் வேண்டுகோள் வைத்ததுடன் தாமே பெரியார் சிலையை அன்பளிப்பாக அளிப்பதாக பலத்த கரவொலிகளுக்கு இடையே அறிவித்தார். முன்னிலை வகித்த இயக்கப் பொறுப்பாளர்கள் பல்வேறு இயக்கங்களை சார்ந்த பொறுப்பாளர்கள் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தை  வாழ்த்தியும் புதிய தோழர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் குறித்து உரையாற்றினர் இறுதியாக மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தமது உரையில் தமிழ் மொழிக்கு எப்படி வரலாறு உண்டோ, அதேபோன்று ஆதிகாலத் திலிருந்தே தமிழர்களின் வீர விளையாட்டான கபாடிக்கும் வரலாறு உண்டு என்றால், அது மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில், பல்வேறு விளையாட்டுகள் இளைஞர்களை ரசிகர்களாக கவர்ந்து கெடுக்கின்றன என்று கூறி பெரியார் வீர விளையாட்டுக் கழத்தின் நோக்கம் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்
சிங்காரபேட்டைகாவல் ஆய்வாளர் திரு.எல்லப்பன் அவர்கள் வீரர்களுக்கு கைகொடுத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்
விடிய விடிய நடந்த போட்டிகள்
இரவு 9 மணிக்கு தொடங்கிய போட்டிகள் விடிய விடிய நடைபெற்றன.ஜனவரி மாத பனி பொழிவும் குளிர் அதிகம் இருந்த போதும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றதால் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆட்டத்தை காண மக்கள் குவிந்திருந்தனர் .22 க்கும் மேற்ப்பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டன போட்டியில் பங்கேற்ற அணைத்து அணிகளுக்கும் அரசியல் ,ஜாதி ,கட்சி பேதமின்றி பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தில் இணைவீர் என்கிற தமிழர் தலைவரின் அறிக்கை துண்டறிக்கையாக கொடுக்கப்பட்டது
இரண்டாம் நாள் நிகழ்வு












பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாம் நாள் போட்டி காலை 9 மணி அளவில் இருந்தே தொடங்கியது .பல்வேறு அணிகளுக்கு இடையே நடந்த கடும் போட்டிக்கு பிறகு அண்ணாமலைப்பட்டி அணி முதல் பரிசினை வென்றது s .புதூர் அணி இரண்டாம் பரிசினையும் சூளகிரி அணி மூன்றாம் பரிசினையும்,சிங்காரப்பேட்டைBRA அணி நான்காம் பரிசினையும் வென்றது .அய்ந்து
,ஆறு,ஆறுதல் பரிசுகள் முறையே சிங்காரப்பேட்டை டூ(ஆர்)டை அணி ,சிங்காரபேட்டை அ.மே.நி.பள்ளி ,பெரியார் இளைஞர் அணி ஆகியன வென்றது .
       ஒய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்க சிங்காரபேட்டை காவல் துணை ஆய்வாளர்கள் பரிசுகளை வழங்கினர்.நடுவர்களாக இருந்து சிறப்பாக பணியாற்றிய புருஷோத்தமன் ,பாலன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்
 இந் நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞ்சரணி தலைவர் இளங்கோ ,மா.சி.பாலன் ,ஆனந்தன்,மகளிரணி தோழர்கள் அழகுமணி ,வித்யா,இரு.கிருட்டிணன்..த.சந்திரசேகரன் ,திருப்பதி.பாண்டியன் ,ரமேஷ் உள்ளிட்ட எராளமான தோழர்களும் சிங்காரபேட்டை பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தை சார்ந்த
அ.முரளி, க .ஆனந்த் , எல்.பி. சிவக்குமார், எஸ்.பி.ஜி.எஸ்.பிரபு, கே.அருள், பி.கவ்ரமணி, வி.சக்திவேல், ராம்கி, கே.வேலாயுதம், ஆர்.கார்த்தி, ஜெ.தண்ட பாணி, நீலகண்டன், சங்கர், அருண், அசோக், இராமச்சந்திரன், பரசுராமன் , ஆளப்பன் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

1 கருத்து: