சனி, 12 பிப்ரவரி, 2011

சுயமரியாதைச் சுடரொளி கா.மகேந்திரன் படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கலுரை



வேலூர், பிப்.12- வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டை புதுஓட்டல் தெருவில் 6.2.2011 அன்று மாலை நான்கு மணிக்கு மறைந்த சுயமரியாதை சுடரொளி முன்னாள் மாவட்ட செயலாளர் கா.மகேந்திரன் படத் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

சோலையார்பேட் டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு அருகே, மறைந்த மகேந்திரனின் நினைவு கல்வெட்டினை திறந்து வைத்து கழக கொடியினையேற்றினார். மகேந்திரன் இல்லம் சென்று அவரது படத் திற்கு மாலை அணி வித்து அவரது துணை வியார் மற்றும் இல்லத் தவர்க்கு ஆறுதல் கூறி னார்.

உரையாற்றியோர்

நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அண்ணாசரவணன் தொடக்கவுரை யாற்றினார். மேடையில் தமிழ்நாடு மாநில பூப்பந் தாட்ட கழக துணைத் தலைவரும், சோலை யார்பேட்டை லயன்ஸ் சங்க செயலாளரும் வேலூர் மாவட்ட செய லாளருமான மறைந்த கா.மகேந்திரன் படத் தினை தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத் தார்.

சோலையார்பேட்டை நகர்மன்ற உறுப்பினர் மா.அன்பழகன் வரவேற்புரைக்குப் பின் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் தலைமை யுரையாற்றினார். அவர் தமதுரையில் மறைந்த மகேந்திரன், மாவட் டத்தில் நடைபெற்ற பல் வேறு நிகழ்ச்சிகள் ஏற் பாட்டில் பெருமளவு ஒத்துழைப்பு கொடுத்து விழா சிறக்க உதவியவர். ஆனால் தன்னை முன் னிலைப்படுத்தகூடிய வகையில் மேடையில் கூட ஏறி அமர மாட் டார்.

அந்தளவுக்கு தன் னடக்கம் மிக்கவர் என்று குறிப்பிட்டார். முன்னாள் ஒன்றிய சேர்மன் கே.சி.எஅழகிரி, மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம், திமுகவைச் சேர்ந்த காளி யப்பன் நகர திமுக செய லாளர் துளசி, வேலூர் மாவட்ட தலைவர் சட கோபன்,  ஆகியோரின் உரைக்குப் பின்னர் தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் நினை வேந்தல் உரையாற்றி னார். 

அவர் தமதுரை யில், மறைந்த மகேந்தி ரன் இந்தப் பகுதியில் கழக பிரச்சாரத் திட்டங் களை கொள்கை உணர் வோடு ஏற்பாடு செய் தவர். திருப்பத்தூரில் நடைபெற்ற கபாடிப் போட்டி, தலைமை செயற்குழு போன்ற வைகளுக்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலர சனுடன் இணைந்து மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். பல ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கை களை பின் தொடர்ந் தவர். இந்தப் பகுதியிலே பல்வேறு இயக்க நிகழ்ச் சிகளை மகிழ்ச்சியோடு பங்கேற்று இருக்கிறேன்.

இந்த படத்திறப்பு நிகழ்ச் சியில் பங்கேற்பதில் மன திற்கு மிகுந்த வேத னையாக இருக்கிறது. அவர் மறைவு குடும்பத் தாருக்கு மட்டும் அல்ல இயக்கத்திற்கும் பேரி ழப்பாகும். ஆண்டுதோ றும் அவருடைய நினை வைப் போற்றும் வகை யில் அவரது நினைவு நாள் கருத்தரங்கம், பல் வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அவரிடம் உதவி கேட்டு வரக்கூடிய பல பேருக்கு வழி காட்டி உதவியுள்ளார் என்பது பாராட்டக் கூடியது  என மேலும் அவருடைய உழைப்பு களை சுட்டிக்காட்டிப் பேசினார்.

இந்நிகழ்ச் சியில் திருமதி மோகனா வீரமணி, திருமதி அகிலா, வேலூர் இளங் கோவன், ஃபாதர் மரிய ஆண்டனி ராஜ், பிரதர் மெரில், ஓவிய ஆசிரியர் தா.திருப்பதி, ஓசூர் துக் காராம், இளங்கோவன், இளங்கோ, தமிழ்ச்செல் வன், தங்க.அசோகன், பெரியார்தாசன், நரசிம் மன், கே.கே.மூர்த்தி, எ.சிற் றரசு, பழ.பிரபு, தியாக ராசன், நகரச் செயலாளர் திமு.க எஸ்.ராஜேந்திரன், நந்தியம்மாள் மலர் வாணன், காமராஜ் நூற் றாண்டு நினைவு அறக் கட்டளை (தொழில திபர்) பி.கணேஷ்மல் எ.அண்ணாதுரை (திருப் பத்தூர் ஒன்றிய சேர்மன்),  ஆலங்காயம் ஒன்றிய சேர்மன் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ராஜா, எஸ்.நடராசன்,  வி.செல் வம், ஜி.பொன்னுசாமி, எஸ்.குட்டிமணி, வ.கண்ணதாசன், இரா. காளியப்பன், எல்.கண் ணன், ஜி.விஜயாமணி, சி.பெரியசாமி திமுக, எம். நடராஜன், ஆகியோர் பங்கேற்றனர். எஸ்.பி. பூபாலன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக