திங்கள், 7 பிப்ரவரி, 2011

திருப்பத்தூர் எல்லையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு


திருப்பத்தூர் ஊர் எல்லையில் திருப்பத்தூர் மாவட்ட தி.க. தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் அண்ணா அருணகிரி ரொட்டேரியன் பரந்தாமன் ஆகிய முக்கிய பிரமுகர்களும், திராவிடர் கழக தோழர்களும், மகளிரும், இன உணர்வாளர்களும் திரண்டு நின்று தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர் (திருப்பத்தூர், 6.2.2011)

மத்தூரில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

மத்தூர், பிப்.8- மத் தூரில் நடைபெற்ற ஜானகிராமன்-கலை மணி மணவிழா, மற் றும் அரங்க இரவி-ஜான்சிராணி ஆகி யோரின் பெரியார் இல்லத்திறப்பு நிகழ்ச் சிக்கு தமிழர் தலைவர் வருகைதந்தமைக்கு மத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து திருமண மண்டபம் வரை, திருமண மண்ட பத்திலிருந்து இரவி இல்லம் வரை கழக கொடிகளும், தோரணங்களும் பதாகைகளுமாக ஒரு மாநாடு போல கொடிக் காடாய் ஆனதுடன், கழகக் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்வாகவும் அமைந்தது.

இரு சக்கர வாகன அணிவகுப்பு

தமிழர் தலைவரை வரவேற்க கழக இளை ஞரணி தோழர்கள் இருசக்கர வாகனங் களில் அணிவகுத்துச் சென்று தமிழர் தலை வரை வரவேற்றனர்.

இருபெரும் இந் நிகழ்ச்சியில்  மோக னம்பாள், கமலா அம் மாள், திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப் பாளர்கள் இளங் கோவன், இளங்கோ, அகிலா, கவிதா, தமிழ்ச் செல்வன், மா.சி.பாலன், அசோகன், சோலை, தலைமைச்செயற்குழு உறுப்பினர் பழனி.புள் ளையண்ணன், கிருஷ் ணகிரி மாவட்ட தலைவர் தா.திராவிடமணி, 

சேலம் மண்டல செயலாளர் மு.தியாகராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மாவட்ட தலைவர் விடு தலை தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கதிர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஊமை. ஜெயராமன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பாளர் கதிர்செந் தில், தமிழ்பிரபாகரன், ஊற்றங்கரை பழ.பிரபு, ம.இரவி, கருணாநிதி, சித.அருள், துக்காராம், இரு.கிருஷ்ணன், வெங்கடேசன், அன்பு, சி.சாமிநாதன், புலவர் வேங்கடம், ஊராட்சி மன்ற தலைவர் ஆறு முகம், மூர்த்தி, சீனி வாசன், வண்டி ஆறு முகம், வசந்தி கணேசன், மற்றும் நடுப்பட்டி, மத்தூர், ஊற்றங்கரை, தருமபுரி, திருப்பத்தூர் சூளகரை, போன்ற பகுதி களிலிருந்தும் ஏராள மான கழகத் தோழர்கள் வருகை தந்தனர். 

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கல்லூரி தோழர் கள் ரமேஷ், ராகுல் ஆகியோர் தமிழர் தலை வர் தலைமையில் இயக் கத்தில் இணைந்தனர் அவர்களுக்கு தமிழர் தலைவர் இயக்கப் புத் தகங்களை வழங்கினார்.


திருப்பத்தூருக்கு அருகில் உள்ள மத்தூரில் 6.2.2011 அன்று







காலை சே. ஜானகிராமன், இர. கலைமணி ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். அருகில் திருமதி மோகனா வீரமணி, மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் ஆகியோர் உள்ளனர்
 

மத்தூர் சே.ஜானகிராமன்-இர.கலைமணி மணவிழா

தமிழர் தலைவர் நடத்தி வைத்துப் பாராட்டு

தருமபுரி, பிப்.8- மத்தூர் ஜானகிராமன்- இர.கலைமணி ஆகி யோரின் மணவிழாவை நடத்தி வைத்து நூற் றுக்கு நூறு மதிப் பெண் பெற்ற திரும ணம் என தமிழர் தலை வர் பாராட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் பள்ளி வட்டம், கருங் காலிப்பட்டி சேட்டு-அஞ்சலா ஆகியோரின் மகன் ஆசிரியர் சே. ஜானகிராமன் (பகுத் தறிவாளர் கழகம்)-கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி வட்டம், பாளேத் தோட்டம் ரத்தினம்-ரத்தினம்மாள் ஆகி யோரின் இளைய மகள் இர.கலைமணி (ஆசிரியர் பயிற்றுநர்) ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 6.2.2011 ஞாயிற் றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மத் தூர் சரவண மகால் திருமண மண்டபத் தில் திருப்பத்தூர் மாவட்ட கழக தலை வர் கே.கே.சி.எழிலர சன் தலைமையில், வேலூர் மண்டல செய லாளர் பழ.வெங்கடா சலம், மாநில பகுத்தறி வாளர் கழக துணைச் செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோரின் முன்னிலையில் நடை பெற்றது. 

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மாவட்ட பகுத்தறிவா ளர் கழக அமைப் பாளர் சித.வீரமணி வரவேற்று பேசினார். இறுதியாக சே.ஜானகி ராமன்-இர.கலைமணி ஆகியோரின் மண விழாவை உறுதிமொழி கூறி நடத்தி வைத்து தமிழர் தலைவர் பேசிய தாவது:

நான் மத்தூர் பகு திக்கு புதியவன் அல் லன். அய்யா அவர்களே போச்சம்பள்ளி, நாக ரசம்பட்டி, மத்தூர் போன்ற பகுதிகளுக் கெல்லாம் வந்து பல நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டவர். அவ ரோடு நாங்கள் எல் லாம் வந்திருக்கிறோம். அதேபோல அதன் பிறகும் இப்பகுதியில் நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக் கிறேன்.

தோழர் ஜானகிரா மன்-கலைமணி ஆகி யோரின் திருமணத்தை நடத்தி வைப்பதிலே மிக்க மகிழ்ச்சியடை கிறோம். இந்த வாய்ப் பைத் தந்த உங்களுக்கு நன்றியை கூற கடமைப் பட்டுள்ளேன். இந்தத் திருமண விழாவினைப் பாராட்டப்பட வேண் டியவர்கள் யார் என்று சொன்னால் மணமக் களின் பெற்றோரைத் தான் முதலில் பாராட் டப்பட வேண்டும். எனவே மணமக்களின் பெற்றோரை இயக்கத் தின் சார்பில் பாராட்டு கிறேன்.

பெரியாரின் கொள்கை எந்த அள வுக்கு வெற்றிபெற்றிருக் கிறது என்பதற்கு இந்த மணவிழாவே ஓர் எடுத் துக்காட்டாகும். இதற் கெல்லாம் காரணம், தந்தை பெரியார் அவர் கள் தோற்றி வைத்த கொள்கை இயக்கம். அதுதான் சுயமரியாதை இயக்கம். அந்த இயக் கத்தை யாராலும் அழிக்கமுடியாது. அதே சமயம் வெற்றி பெற்று வருகிற ஓர் இயக்கம்.

மணமகன் ஜானகி ராமன் ஆசிரியராக இருக்கிறார். எம்.எஸ்ஸி., பிஎட்., படித்திருக்கிறார். மணமகள் கலைமணி எம்.ஏ.,பி.எட்., படித்தி ருக்கின்றார். படித்த தோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கு பயிற் றுநராகவும் இருக்கிறார் என்பதுதான் சிறப்பு. இங்கேதான் பெரியார் இருக்கிறார்.

இவர்களுடைய மணவிழா அழைப்பி தழைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக் கிறது. அழைப்பில் மகி ழும் என்று நல்ல தமி ழில் போட்டு, குடும் பத்தில் உள்ளவர்களை யெல்லாம் போட்டுள் ளார்கள். அனைவரும் பி.இ. எம்.எஸ்ஸி., பி.ஏ., எம்.ஏ., என்று நன்கு படித்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இதே ஒரு கல்லூரி மாதிரி தான் இருக்கிறது. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதற்கு அடை யாளமாகும். நல்ல படித்த குடும்பமாக இருக்கிறார் கள்.

ஒரு காலத்தில் நம்மை எல்லாம் படிக்கக் கூடாத வர்கள் என்று ஒதுக்கி வைத்திருந்த நிலை தந்தை பெரியார் அவர் களால் மாற்றமடைந் துள்ளது.

நம் பிள்ளைகளுக்கு எதைக் கொடுக்கி றோமோ இல்லையோ நல்ல கல்வியை, படிப் பைத் தர வேண்டும். நான் வரும்போது பெண்கள் எல்லாம் நல்ல முறையில் வணக்கம் சொல்லி வர வேற்றார்கள். அவர்கள் எல்லாம் மெத்த படித் திருக்கிறார்கள்.

அரங்கத்தில் உள்ள வர்கள் எல்லாம் கிராமத் தில் இருந்து வந்திருக் கிறார்கள். இருக்கிற நாற்காலிகளில் எல்லாம் பெண்கள் எல்லாம் உட் கார்ந்து இருக்கிறார்கள். ஆண்கள் எல்லாம் இடம் கொடுத்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் 50 ஆண்டு களுக்கு முன் ஆண்க ளுக்கு முன் பெண்கள் சமமாக நாற்காலிகளில் அமர்ந்திருக்க முடியாது. அந்த நிலை இன்று மாறியதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர் கள் (கைதட்டல்).

இந்தத் திருமணத் திலே ஜாதி இல்லை, மதம் இல்லை, தேவை யில்லாத சடங்குகள் இல்லை, அம்மிக்கல் லும், ஆட்டுக்கல்லும், சட்டியும் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறது. இங்கு அதற்கு வேலை இல்லை. மணமக்கள் இருவரும் சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.

மணமகன் ஜானகி ராமன் எவ்வளவு துணிச் சலுடன் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு மணமகனாக உட்காந்திருக்கிறார். கொள்கையுடன் இருக் கிறார். எனவே இத்திரு மணம் 100-க்கு 100 மதிப்பெண் வாங்குகிற திருமணமாகும். இதைப் பார்க்கும்போது பெரி யார் வெற்றி பெற்றி ருக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்.

மணமக்கள் ஒருவ ருக்கு ஒருவர் அறிந்த வர்களாக ஒருவருக்கு ஒருவர் புரிந்தவர்களாக, ஒருவருக்கு ஒருவர் விட் டுக்கொடுக்க வேண்டும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போனதில்லை. கெட்டுப்போனவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை. அதனால் மணமக்கள் விட்டுக்கொடுத்து சிறப் பாக வாழ வேண்டும்.

பெரியார் வழியில் இத்திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கி றீர்கள். இத்திருமணச் சட்டத்தை அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்டது. எனவே அய்யாவையும், அண் ணாவையும் நினைத்து மக்கள் வாழ வேண்டும். உங்களைப் பெற்று வளர்த்து இந்நிலைக்கு ஆளாக்கிய பெற்றோ ருக்கு அன்புகாட்டுங் கள். 

உறவுக்கு உதவுங் கள், சமுதாயத்திற்கு நல்லவை செய்யுங்கள் என்று மணவிழாவை நடத்தி வைத்து பேசி னார்.


இல்லத் திறப்பு

கலை டிஜிட்டல் ஸ்டுடியோ உரிமையாளர் அரங்க ரவி - ஜான்சிராணி ஆகியோரின் பெரி








யார் இல்லத்தினை 6.2.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். அருகில் திருமதி மோகனா வீரமணி, திருப்பத்தூர் மாவட்ட தி.க. தலைவர் கே.சி.எழிலரசன் ஆகியோர் உள்ளனர்.

அரங்க இரவி-ஜான்சிராணி பெரியார் இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து கொள்கை முழக்கம்

தருமபுரி, பிப்.8- மத்தூர் அரங்க.இரவி-ஜான்சிராணி ஆகியோ ரின் இல்லமான பெரி யார் இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட் டம், மாவட்ட திராவி டர் கழக இணைச் செயலாளர் அரங்க. இரவி-ம.ஜான்சிராணி ஆகியோரின் பெரியார் இல்லத்தை 6.2.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிக்கு திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப் பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் தலைமை தாங்கினார். 

மத்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் பொன். குணசேரன் முன்னிலை யில், சேலம் மண்டல தலைவர் பழனி. புள்ளையண்ணன், வேலூர் மண்டல திராவிடர் கழக செய லாளர் பழ.வெங்கடா சலம், வட்டார வளர்ச்சி அலுவலர் செய்ருதீன் ஆகியோரின் அறிமுகவு ரையுடன் நடைபெற் றது.
பெரியார் இல் லத்தை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் கள் திறந்து வைத்து பேசும்போது குறிப் பிட்டதாவது:

திராவிடர் கழக மாவட்ட இணைச் செயலாளரும், சிறந்த புகைப்பட கலைஞரு மான அரங்க.இரவி-ஜான்சிராணி ஆகி யோரின் பெரியார் இல் லத்தைத் திறந்து வைப் பதிலே அனைவரும் மகிழ்ச்சிகொள்கிறோம். இந்த நிகழ்வானது கொள்கையின் வெற்றிக் கான அடையாளம், அரங்க. இரவியின் இல் லத்திறப்பு விழா எந்த வித சடங்கில்லாமல் சிறப்பாக நடந்திருக் கிறது.

அண்ணாசரவணன்- இந்திரா ஆகியோரின் இல்லத்திறப்பு விழா விற்குப் பிறகு மத்தூ ருக்கு இப்போது வந்தி ருக்கிறேன். இங்கே மத் தூரில் ஜானகிராமன் திருமணமும் இரவி இல்லத்திறப்பு விழாவும் மாநாடுபோல் பெரிய அளவில் நடந்துள்ளது. ரவி ஒரு நல்ல புகைப் பட கலைஞர். இப் போது  புகைப்படம் என்பதுகூட சொல் லாமல் ஒளிப்படம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகை யில் அவர் ஒரு ஒளிப் பட கலைஞர். ஒளிப் படம் என்று சொல்லும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. 

கேமராவில் பல போட் டிகள் வந்துவிட்டது. அதே போலத்தான் செல்போன்களிலும் பல போட்டிகள் வந்து விட்டன. விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே போகிறது. இதற்கெல் லாம் காரணம் அடிப் படையில் கல்வி.

ஒழுக்கத்துடனும், நாயணத்துடனும், நம்பிக்கையுடனும், அன் புடனும் வாழ்ந்ததால் தான் பெரியார் கொள் கையோடு வாழ்ந்திருக் கிறேன் என்பதற்கு அடை யாளமாக கட்டப்பட்ட இல்லம். கடவுளை மற, மனிதனை நினை! என்று சொல்லக்கூடிய வாய்ப் பாக வளர்ந்திருக்கிறார் கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். அதைவிட இல்லத்திற்கு பெரியார் இல்லமென்று வைத்திருக்கிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சிக் குரியதாகும்.

கல்யாணம் செய்து பார். வீட்டைக் கட்டிப் பார் என்று நம்மை முன்னோர் பயமுறுத்தி னார்கள். ஆனால் இன்று வீடு கட்டுவது எளிதாக் கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தலை எழுத்து என்று சொல்வார்களே அந் தத்தலை எழுத்தையே மாற்றிக் காட்டி இருக் கிறார்கள்.

வீடு கட்டுபவர்க ளுக்கு வாஸ்து என்று சொன்னால், 15, 20 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று படித்த வர்களாக இன்ஜினீயர் களாகவும், டாக்டர்க ளாகவும் இருந்து பகுத் தறிவாளர்களாக இல் லாத காரணத்தால் வாஸ்து பார்க்கிறார்கள். வீட்டை வாசலை மாற்றிக் கட்டுகிறார்கள். வேறு வண்ணம் பூசுகிறார்கள்.

என்னிடம் கொத்த னார்கள் வந்து, வாஸ்து சாஸ்திரத்தைக் கண்டிக் காதீர்கள் என்று சொன் னார்கள். ஏன் என்றால் வாஸ்துவால் வீடுகளை மாற்றி மாற்றி இடித்துக் கட்டுவதால் எங்களுக்கு வேலை கிடைக்கிறது. அதனால் வாழ்கிறோம் என்றார்.

அதேபோலத்தான் சகோதர பாசத்தைக் காட்ட பச்சை சேலையை பரப்பிவிட்ட ர்கள். அதற்குக் கார ணம் நீண்ட நாள் இடுப் பில் இருந்த பச்சை புடவை வியாபாரம் செய்வதற்காக.

நோய்க்கிருமி பரவு வதைப் போல மூட நம்பிக்கை பரவிக் கொண்டிருக்கிறது. பூச னிக்காய் சத்தான உணவு அதை உண்ணாமல் அதை ஸ்கூட்டருக்கும், காருக்கும் உடைக் கிறார்கள். பூசனிக்காய் அல்வா செய்வதை விட்டு விட்டு அதை நடுரோட்டில் உடைத்து அதன் மீது வாகனத்தை ஏற்றி விழுந்து மருத்துவ மனையில் படுத்துக் கிடக்கிறார்கள்.

எனவே மூட நம் பிக்கை ஒழிக்க நீங்கள் எல்லாம் முன் வர வேண்டும். இங்கே வீட்டை மட்டும் நாம் திறக்கவில்லை. மூளை யில் போட்ட விலங் கைத் திறந்திருக்கிறோம்.

அந்த வகையில் உழைப்பால் கட்டப் பட்ட வீடு, சிந்தனைப் பணணை-எல்லோர் இல்லமும் பெரியார் இல்லம், பகுத்தறிவு இல்லம், அந்த வகையில் ஏராளமான இளை ஞர்கள் வந்துள்ளீர்கள் அனைவரும் பகுத்தறி வுப்பாதையில் செல்ல வேண்டும் என்று பேசி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக