
பல்வேறு மருத்துவ தகவல்களை திரட்டி தந்த
ஊற்றங்கரையில் சிறப்புடன் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்டத்தின்
இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்
பிப் 13 ,
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டத்தில் நடைபெற்றது .இந் நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய காங்கிரெஸ்பொறுப்பாளரும் விடுதலை வாசகர் வட்டதின் துணை செயலாளருமான திரு.சு.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்
மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளருமான திரு.தணிகை .ஜி .கருணாநிதி,
முன்னதாக விடுதலை வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா.அப்பாசாமி அவர்கள் மாத அறிக்கை வாசித்தார்
42 வருட விடுதலை முகவருக்கு பாராட்டு




42 வருடமாக பத்திரிக்கை துறையிலிலும் விடுதலை முகவராகவும் செயல்பட்டு வரும் திரு .V .R .ரகோத்தமன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .விடுதலை வாசகர் வட்டதின் அமைப்பாளரும் திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளருமான பழ.வெங்கடாசலம் அவர்கள் பாராட்டுரையாற்றினார் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் மற்றும் மாவட்ட திட்டகுழு தலைவருமான எம்.ஆர்.இராஜேந்திரன் அவர்கள் நினைவு பரிசினை வழங்கி பாராட்டினார் இறுதியாக திரு .ரகோத்தமன் அவர்கள் ஏற்புரையாற்றினார்
பெரியார் மருத்துவமனைக்கு மருந்துகள் அன்பளிப்பு
பேறிஞர் அண்ணா படத்திறப்பு
மருத்துவர் உரை
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவர் எழுதிய ''மாரடைப்பு வரு முன் காக்க இதோ ஓர் எளிய வழி'' என்னும் வாழ்வியல் சிந்தனை கட்டுரை நகல் அனைவருக்கும் அளிக்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,இயற்கையின் நண்பன் என்கிற சுற்று சூழல் சிறு இதழ் அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற மருத்துவ கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக