சனி, 29 ஜனவரி, 2011

வீரவணக்கம் !

முன்னால் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.கே.சி எழிலரசன் அவர்களின் தந்தையும் தந்தை பெரியார் காலம் தொட்டு அன்னை மணியம்மையார் ,தமிழர் தலைவரின் நம்பிக்கைக்குரிய கழகத்தின் தளபதியாக வாழ்ந்த சுயமரியாதை சுடரொளி மானமிகு.அய்யா.கே.கே.சின்னராசு அவர்களுக்குதிருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் தன் வீர வணக்கத்தை செலுத்துகிறது !

சிங்கரப்பேட்டையில் மாபெரும் கபாடி போட்டி

பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பில் மாபெரும் கபாடி போட்டி ஜனவரி 29 ,30 ஆகிய தேதிகளில் சிங்காரப்பெடையில் நடைபெற உள்ளது.தொடக்க நிகழ்ச்சியாக சனிகிழமை மாலை 8 மணி அளவில் அம்பேத்கார் திடலில் நடைபெறும்   நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.கே.சி.எழிலரசன் தலைமை தாங்குகிறார் .ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா சந்திரன் ,திமுக மாவட்ட துணை செயலளர் ஏ .என்.ராஜா திக மண்டல செயலாளர் பழ .வெங்கடாசலம் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கரும்பையிரம் ,ஊராட்சி மன்ற துணை தலைவர் து.சண்முகம் ஆகியோர் முன்னிலை யில் சிங்கரப்பேட்டை காவல் ஆய்வாளர் எல்லப்பன் தொடங்கி வைக்கிறார் 

தி .க. முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் ஜி.கருணாநிதி, இந்திய தேசிய காங்கிரஸ் இர.திருநாவுக்கரசு திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வ.க.அசோக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் கீழ்க்கண்டவர்கள் அழைக்கப்படுகிறார்கள். முன்னாள் மாவட்ட பிரதிநிதி கே.கமல நாதன், சிங்காரப்பேட்டை கவுன்சிலர் பஷீர், கவுன்சிலர் அகமத் பாஷா, அ.தி.மு.க மகளிர் அணி துணைத் தலைவர் சத்தியவாணி, மாநில ப.க துணை தலைவர் அண்ணா .சரவணன்

பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தை சார்ந்த பிரசாத் நன்றி கூறுகிறார்.

நன்கொடையளிப்பவர்கள்

முதல் பரிசு: ரூ.10,000-த்தை வழங்குபவர் தி.க மாவட்ட தலைவர் மற்றும் மாநில பெரியார் வீரவிளையாட்டு துணைத் தலைவர் கே.சி.எழிலசரன், 

இரண்டாம் பரிசு ரூ.7500-அய் சுயமரியாதைச் சுடரொளி அ.பழனியப்பன் நினைவாக தி.க முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு வழங்குகிறார். 

மூன்றாம் பரிசாக ரூ.5000-த்தை திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஏ.என்.ராஜா வழங்குகிறார். 

நான்காம் பரிசாக ரூ.2,500அய் தே.மு.தி.க மாவட்ட நிருவாகி ஆர்.எஸ்.ரமேஷ் வழங்குகிறார். 

அய்ந்தாம் பரிசாக ரூ.1500அய் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர்.கருப்பாயிரம் வழங்குகிறார். 

ஆறாம் பரிசாக ரூ.1000 அதிமுக ஊராட்சி மன்ற செயலாளர் ம.சத்தியநாராயணமூர்த்தி வழங்குகிறார். 

ஆறுதல் பரிசு ரூ.700அய் தேமுதிக ஜி.ராமன் வழங்குகிறார்.

சிறந்த அணிக்கான பரிசு ரூ.2000 ஆர்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் ஊற்றங்கரை ஆர்.எஸ்.பார்த்திபன் வழங்குகிறார்.

சிறந்த வீரர்களுக்கான பரிசு ரூ.2000 அதிமுக மகளிர் அணி துணைத் தலைவர் சத்தியவாணி வழங்குகிறார். 

குளிர்பான அன்பளிப்பாக ரூ.2000 மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் ஜி.கருணாநிதி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இர. திருநாவுக்கரசு ஆகியோர் வழங்கு கின்றனர்.

ஒலி-ஒளி அமைத்துத் தருபவர்கள் அதிமுக கட்டமடுவு பாஷ்பன் மற்றும் திருகிரேனிட்ஸ் சென்னை த.ராஜேஷ்.

நடுவருக்கான சிறப்பு செய்தல்

சிறீ வினாயக ஏஜென்சீஸ் சிங்காரப் பேட்டை இக்பால் பீப் ஸ்டால், சிங்காரப் பேட்டை, 

உணவுக்கான அன்பளிப்பு வழங்கியவர்: ஊராட்சி மன்ற தலைவர் பிரேமாசந்திரன். 

டிஜிட்டல் பேனர்களுக்கு அன்பளிப்பு வழங்கியவர்கள் ஆசிரியர் (பணி நிறைவு) எம்.ஏ. காந்தன் பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம் அண்ணா அப்பாசாமி ஊற்றங்கரை ஷார்ப் டிஜிட்டல் ஜெகன் மற்றும் காய்கறி வியாபாரி ஒருங் கிணைப்பாளர் விஜய் ரசிகர் மன்றம் விஜய், சிக்னல் டிரவெல்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் வே.ஆறுமுகம் சக்கரவர்த்தி குடக்ஸ் டைல்ஸ் எ.பி.சக்கரவர்த்தி துண்ட றிக்கைகாக அன்பளிப்பு வழங்கியுள்ளார். 

நடுவர்களாக கலந்துகொள்பவர்கள் ந.புருஷோத்தமன், ஆனந்தன், கே.என். நடராசன் மற்றும் சி.அழகுமணி 

அ.முரளி, கே.ஆனந்தன், எல்.பி. சிவக்குமார், எஸ்.பி.ஜி.எஸ்.பிரபு, கே.அருள், பி.கவ்ரமணி, வி.சக்திவேல், ராம்கி, கே.வேலாயுதம், ஆர்.கார்த்தி, ஜெ.தண்ட பாணி, நீலகண்டன், சங்கர், அருண், அசோக், இராமச்சந்திரன், பரசுராமன் மற்றும் ஆளப்பன் ஆகியோர் விழாக் குழுவினராவர்.

-பெரியார் வீரவிளையாட்டுக் கழகம், டாக்டர் அம்பேத்கர் இளைஞரணி நற்பணி ஆகியோர் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றனர்

புதன், 12 ஜனவரி, 2011

வீரவணக்கம்

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் சோலையார்பேட்டை .மகேந்திரன் அவர்கள் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி இயற்கை அடைந்தார் .மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன் அவர்கள் தலைமையில் எராளமான கழக தோழர்கள் அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர் .அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவிப்பதுடன் அவருக்கு மாவட்ட கழகம் வீரவணக்கத்தை செலுத்துகிறது !

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கா.மகேந்திரன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் கா.மகேந்திரன் (வயது 57) மறைவுற்றார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகின்றோம். மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் மூலம் செய்தி அறிந்த திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பினர்.
கழகம் நடத்திய பல்வேறு போராட்டங் களில் பங்கேற்றவர். அனைத்துக் கட்சிக்காரர் களின் பாராட்டைப் பெற்றவர். சமீபத்தில் நடைபெற்ற திருப்பத்தூர் கழக மாநாட்டை மாவட்ட தலைவருடன் இணைந்து, முன்னின்று நடத்தியவர்.  தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழக துணைத் தலைவர், வேலூர் மாவட்ட பூப் பந்தாட்டக் கழக செயலாளர், அரிமா சங்கத்தில் முக்கிய பொறுப்பாளர், என பல்வேறு பொறுப்புகளை ஏற்று மனிதநேயத்துடன் செயல்பட்டவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் தேறி அய்.சி.யூவிலிருந்து ஜெனரல் வார்டுக்குத் திரும்பினார். அங்கு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மீண்டும் அய்.சி.யூ. யூனிட்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மறுபடியும் மாரடைப்பு ஏற்பட்டதால் இயற்கை எய்தினார்.
மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இன்று மாலை 5மணிக்கு திராவிடர் கழகத் தோழர்கள் முன்னின்று சோலையார்பேட்டையில் அவரது இல்லத்திலிருந்து உடலை  ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
மறைந்த மாவட்டச் செயலாளர் கா.மகேந்தி ரனின் வாழ்விணையர் ம.யசோதா திருப்பத்தூர் நகர கழக மகளிரணி தலைவராக உள்ளார். மகேந்திரன்-யசோதா ஆகியோரின் மகன் ம.அன்பழகன் தி.மு.க நகர துணைச் செயலாள ராகவும், நகர்மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

திராவிடர் எழுச்சி மாநாட்டுக் காட்சிகள்

திராவிடர் எழுச்சி மாநாட்டுக் காட்சிகள்

திராவிடர் கழகம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இரத்த தான முகாம்














மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை என்ன ?திராவிடர் கழக பொதுக்கூட்டம்





    
ஊற்றங்கரை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில்ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை என்ன ?   என்னும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .இக் கூட்டத்திற்கு திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் மானமிகு  இர.அன்பு வரவேற்புரையற்றினார் திராவிடர் கழக மண்டல செயலாளர் மானமிகு  பழ.வெங்கடாசலம் தலைமை வகித்தார் .கிருட்டினகிரி மாவட்ட தி.க தலைவர்  மானமிகு.தா.திருப்பதி,   கிருட்டினகிரி மாவட்ட  தி.க  செயலாளர் மானமிகு .கோ .திராவிடமணி ,மாநில ப.க.துணை தலைவர்   மானமிகு .அண்ணா.சரவணன்  கிருட்டினகிரிமண்டல செயலாளர் மானமிகு .மு.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பருகூர்சட்ட மன்ற உறுப்பினர்மானமிகு.கே.ஆர்.கே.நரசிம்மன் திமுக   மாவட்ட துணை செயலாளர் மானமிகு .எ.என் .ராஜா திமுக ஒன்றிய செயலாளர் மானமிகு .எக்கூர்.த.செல்வம்   திமுக நகர செயலாளர் மானமிகு.பாபுசிவக்குமார் திமுக   நகர அவைத் தலைவர் மானமிகு.பா.அமானுல்லா மாவட்ட தி.மு.க.இலக்கிய அணி செயலாளர் மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி  ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் திமுக மாவட்ட செயலாளர் மானமிகு .டி.செங்குட்டுவன்  கலந்து கொண்டு சிறப்பித்தார் .திராவிடர்  கழக துணை பொதுசெயலாளர் மானமிகு.துரை.சந்திரசேகரன் ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை குறித்தும்  திமுக அரசின் சாதனைகள் குறித்தும் மிக சிறப்பான உரையாற்றினார் இந் நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர்   அரங்க.இரவி மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் மாவட்ட இலஞ்சரணி தலைவர்வி.ஜி .இளங்கோ மாவட்டப.க.அமைப்பாளர்சித.வீரமணி ஒன்றிய ப.க தலைவர்சித.அருள்  ஒன்றிய திக தலைவர்மானமிகு மா.ரவிச்சந்திரன்  ஒன்றிய ப.க தலைவர் இராம.சகாதேவன் ஒன்றிய ப.க.செயலாளர் இரு .கிருட்டிணன் நகர தலைவர் இர.வேங்கடம் நகர செயலாளர் முனி. வெங்கடேசன் சி.சாமிநாதன் ,க.துரை ,தீ.பொன்னுசாமி .வே.காவேரி ,பொன்.குப்புசாமி ,ஜெ.சிவலிங்கம் ,கணபதி கி .ஆ கோபாலன் ,புயல் ,மாயகண்ணன்,ஜெயராமன் ,தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னால் மாவட்ட செயலர் பழ .பிரபு நன்றி கூறினார் ஒன்றிய நகர திராவிடர் கழகம இந் நிகச்சியை ஏற்பாடு செய்தது ,

ஊற்றங்கரையில் அய்யா நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள்








தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது
ஊத்தங்கரையில் பெரியார் நினைவு நாளையொட்டி தி.மு.க ,திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது .பருகூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.கே.நரசிம்மன் தலைமையில் ஊத்தங்கரை நகர தி.மு.க செயலாளர் பாபு சிவகுமார் ,மாவட்ட துணை செயலாளர் ராஜா ,மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் தணிகை .ஜி .கருணாநிதி ,திராவிடர் கழக முன்னால் திராவிடர் கழக மாவட்ட செயலளர் பழ.பிரபு ,ஊற்றங்கரை திராவிடர் கழக நகர தலைவர் இரா .வேங்கடம் ,விடுதலை வாசகர் வட்ட துணை தலைவர் சாமிநாதன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சித. அருள்,மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சித .வீரமணி.,பகுத்தறிவாளர்கழக பொறுப்பாளர்கள் சகாதேவன்,கிருட்டிணன்,அண்ணா.அப்பாசாமி,இந்திய தேசிய காங்கிரெஸ் பொறுப்பாளர் விவேகாநந்தன் ,நகர திராவிடர் கழக பொறுப்பாளர் சந்திரசேகரன் .பெரியார் பெருந்தொண்டர் நடராசன் ,நகர தி.மு.க.பொருபளர்கள் பொன்னுசாமிஜோக்கர் (எ )அகமத் பாஷா ,வேடியப்பன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.,திராவிடர் கழக தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட நிகழ்ச்சி

தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம் மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா







































  ஊற்றங்கரையில் வெகு சிறப்புடன் நடைப்பெற்ற

 தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம்  மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

ஜனவரி 2

கடந்த ஞாயிற்றுகிழமை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டத்தில் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம்  மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா மிக சிறப்புடன் நடைப்பெற்றது .இந் நிகழ்ச்சிக்கு மானமிகு;சி.சாமிநாதன் துணை தலைவர் விடுதலை வாசகர் வட்டம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மானமிகு .அண்ணா.அப்பாசாமி .பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம் அவர்கள் மாத அறிக்கை வாசித்தார் மானமிகு .பழ.பிரபு செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்

மானமிகு ;கே .ஆர்.கே .நரசிம்மன் சட்ட மன்ற உறுப்பினர் பருகூர் அவர்கள் தலைமை தாங்கினார் மானமிகு ;ஜெ.எஸ்..ஆறுமுகம் ஊரரட்சிக் குழு தலைவர் ஊற்றங்கரை மானமிகு .முருகேசன் மாவட்ட கல்வி அதிகாரி (ஓய்வு) மானமிகு பழ.வெங்கடாசலம் மண்டல செயலாளர் மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி மாவட்ட தி.மு.க.இலக்கிய
அணி செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறந்து மானமிகு ;கே.கே.சி எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம் அவர்கள் உரையாற்றினார்


 மானமிகு .வே.சந்திரசேகரன் தாளாளர் வித்யா மந்திர் கல்வி நிறுவனகள் அவர்களை  பாராட்டி இரா .வேங்கடம் ,அழகுமணி வெங்கடாசலம் ,விவேகானந்தன் ஆகியோர் நினைவு பரிசினை வழங்கினர்
''நற்றமிழர் வாழ்வில் தை திங்களும் தை புத்தாண்டும் ''என்னும் தலைப்பில்
மானமிகு .முனைவர் .துரை.சந்திரசேகரன் துணை பொது செயலாளர் திராவிடர் கழகம் அவர்கள் சிறப்பான கருத்துரையை வழங்கினார் மானமிகு.வே.சந்திரசேகரன் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்
மானமிகு.த.சந்திரசேகர்  செயற் குழு உறுப்பினர் விடுதலை வாசகர் வட்டம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
நிகழ்ச்சி அரங்கில் விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்திய தமிழர் தலைவர்,தலைமை நிலைய செயலாளர் ,கழக பொருளாளர் ஆகியோரின் கடிதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன .
அனைவருக்கும் பிஸ்கட் ,எழுதுகோல் ,குறிப்பேடு,அடுத்தமாத நிகழ்வு துண்டறிக்கை ,நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டன.விழா முடிந்த உடன் அனைவருக்கும் புலால் உணவு வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டன .