புதன், 12 ஜனவரி, 2011

வீரவணக்கம்

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் சோலையார்பேட்டை .மகேந்திரன் அவர்கள் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி இயற்கை அடைந்தார் .மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன் அவர்கள் தலைமையில் எராளமான கழக தோழர்கள் அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர் .அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவிப்பதுடன் அவருக்கு மாவட்ட கழகம் வீரவணக்கத்தை செலுத்துகிறது !

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கா.மகேந்திரன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் கா.மகேந்திரன் (வயது 57) மறைவுற்றார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகின்றோம். மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் மூலம் செய்தி அறிந்த திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பினர்.
கழகம் நடத்திய பல்வேறு போராட்டங் களில் பங்கேற்றவர். அனைத்துக் கட்சிக்காரர் களின் பாராட்டைப் பெற்றவர். சமீபத்தில் நடைபெற்ற திருப்பத்தூர் கழக மாநாட்டை மாவட்ட தலைவருடன் இணைந்து, முன்னின்று நடத்தியவர்.  தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழக துணைத் தலைவர், வேலூர் மாவட்ட பூப் பந்தாட்டக் கழக செயலாளர், அரிமா சங்கத்தில் முக்கிய பொறுப்பாளர், என பல்வேறு பொறுப்புகளை ஏற்று மனிதநேயத்துடன் செயல்பட்டவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் தேறி அய்.சி.யூவிலிருந்து ஜெனரல் வார்டுக்குத் திரும்பினார். அங்கு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மீண்டும் அய்.சி.யூ. யூனிட்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மறுபடியும் மாரடைப்பு ஏற்பட்டதால் இயற்கை எய்தினார்.
மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இன்று மாலை 5மணிக்கு திராவிடர் கழகத் தோழர்கள் முன்னின்று சோலையார்பேட்டையில் அவரது இல்லத்திலிருந்து உடலை  ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
மறைந்த மாவட்டச் செயலாளர் கா.மகேந்தி ரனின் வாழ்விணையர் ம.யசோதா திருப்பத்தூர் நகர கழக மகளிரணி தலைவராக உள்ளார். மகேந்திரன்-யசோதா ஆகியோரின் மகன் ம.அன்பழகன் தி.மு.க நகர துணைச் செயலாள ராகவும், நகர்மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக