புதன், 12 ஜனவரி, 2011

திருப்பத்தூரில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு கட்டுக்கடங்கா கூட்டம் - ஏராளமானோர் சால்வை


திருப்பத்தூர், அக். 23- சென்னையிலிருந்து வேன் மூலம் இன்று காலை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் புறப்பட்டார்.
இன்று காலை 9 மணிக்கு தமிழர் தலைவர் அவர்களுடைய வாகனம் சோலையார்பேட்டை தந்தை பெரியார் சிலையை அடைந்தது.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை வர வேற்று அழைத்துச் செல்ல திருப்பத்தூர் மாவட்ட தி.க. தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் 250 வாகனங்கள், மற்றும் 50 மோட்டார் சைக்கிள்களில் தயாராகக் காத்திருந்தனர்.
தமிழர் தலைவர் அவர்களுடைய வாகனத்தைக் கண்டதும் பட்டாசு வெடித்து, தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்க! என்ற வாழ்த்தொலி முழக்கங்கள் விண்ணைப் பிளந்திட முழக்கமிட்டு வரவேற்றனர். பின்னர் கே.சி.எழிலர சன் மற்றும் பல்வேறு கட்சியினர், தொண்டு நிறு வனங்கள், மனித நேய மய்யம் போன்ற அமைப்புகள் சார்பாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சால்வைகளை அணி வித்து உற்சாகமாக வரவேற்றனர்.
காமராஜர் நூற் றாண்டு நினைவு அறக் கட்டளை தலைவர் பி. கணேஷ்மல், மாவட்ட கவுன்சிலர் ஏலகிரி செல் வம், தொழிலதிபர்கள் டி.வி.மாதவன், அண்ணா அருணகிரி, விஜயா கேலக்ஸி மதியழகன், மனோ பிரிண்டர்ஸ் பரந் தாமன்.
கழகப் பொறுப்பாளர்கள்:
துணை பொதுச் செய லாளர் உரத்தநாடு குண சேகரன், மாவட்ட செய லாளர் மகேந்திரன், பெரி யார் சமூக காப்பணி இயக் குநர் பெரியார் செல்வன், மாநில இளைஞரணி தலைவர் ஜெயக்குமார், மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் கள் தகடூர் தமிழ்செல்வி, அண்ணா சரவணன், மாநில பெரியாரணி துணை இயக்குநர் வீர மணி, மாவட்ட மகளி ரணி தலைவர் அகிலா எழிலரசன், வேலூர் மாவட்ட தலைவர் சட கோபன், கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் தா. திருப்பதி, மாவட்ட செய லாளர் கோ.திராவிடமணி,
மண்டல செயலாளர் கள்: பழ.வெங்கடாசலம், மு.தியாகராசன், மாநில பெரியார் வீரவிளையாட்டு கழகச் செயலாளர் இராம கிருட்டிணன், திண்டுக் கல் மாவட்ட தலைவர் வீரபாண்டி, தருமபுரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஊமை. ஜெய ராமன், பழனி மாவட்ட தலைவர் வீர.கலாநிதி, மாவட்ட செயலாளர் அழகிரிசாமி, ஆவடி மாவட்ட செயலாளர் பா.தட்சிணாமூர்த்தி, மாநில மாணவரணி செய லாளர் ரஞ்சித்குமார், தருமபுரி செயலாளர் டி.சிவாஜி, முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, மாவட்ட இளை ஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, மா.து.செ. இளங் கோவன்,
மாவட்ட தலைவர் எழிலரசன் தலைமையில் ஜோலார்பேட்டையிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரம் ஒரு மணி நேரம் ஊர் வலமாக தமிழர் தலைவர் அழைத்துவரப்பட்டார். இருமருங்கிலும் வர வேற்பு பதாகைகள், துணிக் கொடி, காகிதக் கொடி கள் கட்டப்பட்டிருந்தன. இடையில் ஒன்றிய கவுன்சிலர் கண்ணதாசன் சால்வை அணிவித்து வர வேற்றார். திருப்பத்தூரை வந்தடைந்தவுடன் தலைமை நிலையச் செய லாளர் வீ.அன்புராஜ் காமராஜர் சிலை அரு கில் நின்று வாகனங் களில் வந்தவர்களையும், தமிழர் தலைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் சிறிது நேரம் அமர்ந்து விட்டு ஆதியூர் ஆனந்தன் காந்தி சிலை அருகில் ஏற்பாடு செய்திருந்த கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பின்பு ஊர் வலமாக அழைத்து வரப் பட்ட தமிழர் தலைவர் பொதுக் குழு நடக்கும் இடத்தினை அடைந் தார். சாலையின் இரு மருங்கிலும் ஏராளமான மக்கள் நின்று தமிழர் தலைவரை ஆவலுடன் பார்த்து வணக்கம் செலுத்தினர். தமிழர் தலைவர் அன்போடு வணக்கம் தெரிவித்த வண்ணம் வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக