பொதுவாக மண்டல மாநாடுகள் திறந்த வெளியில் மாலை நேரத்தில்தான் நடைபெறும். ஆனால், மாநில மாநாடு போல வேலைப்பாட மைந்த பந்தல் போடப்பட்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இம்மாநாட்டின் நுழைவு வாயிலுக்கு சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் பெயர் சூட்டப்பட்டது.
60 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்திற்காக உழைத்த அந்தப் பெருமகனாரின் பெயர் சூட்டப் பட்டது மிகவும் பொருத்தமானது.
சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு அவர்களின் பெயர் மாநாட்டு அரங்குக்குச் சூட்டப் பட்டதும் சிறப்பானதே. அவருடைய மகன்தான் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன்.
மாநாட்டுத் தொடக்கத்தில் பல்சுவைக் கலைஞர் எஸ்.பி.பாஸ்கரனின் இசை நிகழ்ச்சி மாநாட்டைக் களைகட்டச் செய்தது-தொடர்ந்து தெற்கு நத்தம் சித்தார்த்தன்-பி.பெரியார்நேசன் குழுவினரின் வீதி நாடகங்கள் கருத்தாழம் கொண்டவை. சிரிப்பு-சிந்தனை இரண்டும் மனிதனுக்குத் தேவை என்பதை நினைவூட்டின.
மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கா. மகேந்திரன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். மாநாட்டுத் தலைவர் வேலூர் மண்டல கழகச் செயலாளர் ஊற்றங்கரை ஆசிரியர் பழ.வெங்கடாசலம் உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா சரவணன் வழிமொழிந்தார்.
இன்றைக்குத் தமிழர்கள் மானத்தோடும், அறிவோடும் பல உரிமைகளைப் பெற்று வாழ் கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியாரும் இந்த இயக்கமுமேயாகும்.

நடைமுறையில் பார்த்தால் தி.மு.க. பார்ப் பனர்களை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. பார்ப்பன ஊடகங்கள் கட்டுப்பாடாக திட்டமிட்டு தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புரளிகளைக் கிளப்பி வருவதை பொதுச்செயலாளர் எடுத்து விளக்கினார்.
தமிழ்நாட்டில் புத்தரின் கருத்துகளை எடுத்து ரைத்தவர் தந்தை பெரியார். புத்தரா-கண்ணனா? என்று வரும் போது புத்தர் மனித சமூகத்தின் சமத்துவத்தைப் போதித்தார்.
கண்ணனோ, பிறப்பிலேயே பேதம் எனும் வருண தருமத்தைப் போதித்தார் என்பதை ஒப்பிட்டுப் பேசினார் அருள்மொழி.
திராவிடர் என்பதைக் கொச்சைப்படுத்த சிலர் கிளம்பியுள்ளனர். திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்பதற்கு ஆய்வுகள் தேவையில்லை. இந்த ஊரில் உள்ள தொடர் வண்டி நிலையத்திற்குச் சென்று பாருங்கள். ஊர்ப் பெயர் தமிழில் முதல் இடத்தில் இருக்கிறதே-இதற்கு போராடியவர்கள் யார்? இந்தி தானே முதல் இடத்தில் இருந்தது. இந்த மாற்றத்திற்குக் காரணம் திராவிடர் கழகம் அல்லவா? திராவிடர் இயக்கம் அல்லவா? என்ற நியாயமான வினாவை எழுப்பினார் முனைவர் துரை.சந்திரசேகரன்.

தி.மு.க. என்பது 1949ஆம் ஆண்டில் தோற்று விக்கப்பட்ட கட்சி என்றாலும், அதற்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. நீதிக்கட்சியின் தொடக் கத்திலிருந்து அதற்கான பாரம்பரியம் உண்டு.
மாநிலங்களவையில் அண்ணா முதன் முதலாகப் பேசும்பொழுது கூட, தனது திராவிடப் பாரம் பரியத்தை எடுத்துக்கூறிதான் தன் பேச்சையே தொடங்கினார்.
சென்னையில் பார்ப்பனர் அல்லாதார் பார்ப் பனர்களின் கடைகளுக்குச் சென்று அமர்ந்து சாப்பிட முடியாத ஒரு காலம் உண்டு. எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்துதான் சாப்பிட முடியும். அந்தக் காலகட்டத்திலும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்காக விடுதியைக் ஏற்படுத்தியவர். டாக்டர் சி.நடேசனார். அந்த விடுதியில் படித் தவர்கள்தாம்-பிற்காலத்தில் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி பிள்ளையும், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக விளங்கிய சிவ.சுப்பிரமணிய நாடாரும் என்ற வரலாற்று செய்தியினை இளைஞர்களுக்கு விளங்கும்படிக் கூறினார் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு.
தந்தை பெரியார் காஞ்சிபுரம் மாநாட்டை விட்டு 1925இல் வெளியேறினார். வகுப்புரிமையை நிலை நாட்டியே தீருவேன் என்று ஆவேசமாகக் குரல் கொடுத்து வெளியேறினார்.
அப்பொழுது சி.ஆர். (ராஜாஜி) சொன்னார். நாயக்கரே! காங்கிரஸ் மலை! என்றார். மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன். வந்தால் மலை; போனால் மயிர்! என்று கூறினார் தந்தை பெரியார். பெரியார் வென்றாரா? இல்லையா? இளைஞர்கள் சிந்திக்க வேண்டு என்றார் பொருளாளர்.
இறுதியாக திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங் கோவன் நன்றி கூறினார். மாலை 5மணிக்குத் தொடங்கப்பட்ட மாநாடு இரவு 10 மணிக்கு நிறைவுற்றது.
மாநாட்டின் மக்கள்திரள் பந்தல் நிரம்பி வழிந்தது. வெளியே ஏராளமாக பொதுமக்கள் நின்று உரைகளைச் செவிமடுத்தனர். வெளியில் வெகுதூரம் வரை, உரைகளைக் கேட்கும் வண்ணம் ஒலிபெருக்கி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. சாலைகளின் இருமருங்கிலும் ஒளி விளக்குகள் இரவைப் பகலாக்கின.
குறிப்பாக எல்லா வகையிலும் சிறப்புத் தகுதி மாநாடாக திருப்பத்தூர் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது என்றால் மிகையல்ல.
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நிகழ்ச்சிகளை ஒருங் கிணைத்தார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்திற்காக உழைத்த அந்தப் பெருமகனாரின் பெயர் சூட்டப் பட்டது மிகவும் பொருத்தமானது.
சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு அவர்களின் பெயர் மாநாட்டு அரங்குக்குச் சூட்டப் பட்டதும் சிறப்பானதே. அவருடைய மகன்தான் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன்.
மாநாட்டுத் தொடக்கத்தில் பல்சுவைக் கலைஞர் எஸ்.பி.பாஸ்கரனின் இசை நிகழ்ச்சி மாநாட்டைக் களைகட்டச் செய்தது-தொடர்ந்து தெற்கு நத்தம் சித்தார்த்தன்-பி.பெரியார்நேசன் குழுவினரின் வீதி நாடகங்கள் கருத்தாழம் கொண்டவை. சிரிப்பு-சிந்தனை இரண்டும் மனிதனுக்குத் தேவை என்பதை நினைவூட்டின.
மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கா. மகேந்திரன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். மாநாட்டுத் தலைவர் வேலூர் மண்டல கழகச் செயலாளர் ஊற்றங்கரை ஆசிரியர் பழ.வெங்கடாசலம் உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா சரவணன் வழிமொழிந்தார்.
கே.சி.எழிலரசன்
மாநாட்டுக்கு திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை தாங் கினார். மாநாட்டையும், பொதுக்குழுவையும் திருப்பத் தூரில் நடத்திட அனுமதி கொடுத்த தமிழர் தலைவ ருக்கு எடுத்த எடுப்பிலேயே நன்றி கூறினார்.இன்றைக்குத் தமிழர்கள் மானத்தோடும், அறிவோடும் பல உரிமைகளைப் பெற்று வாழ் கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியாரும் இந்த இயக்கமுமேயாகும்.

திருப்பத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் நகரப் பிரமுகர்கள் இணைந்து தமிழர் தலைவருக்கு ஆளுயர மாலை அணிவித்து மகிழ்ந்தனர் (23.10.2010).
கொத்தாளும், சித்தாளும் நம்மாளு- அய்.ஜி. எல்லாம் அவாளு என்று முழக்கம் போட்டதால் இந்த நிலைமைகள் மாறி வருகின்றன. காரணம் யார்? பாடுபட்ட இயக்கம் எது? என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும் என்று கூறினார் மாநாட்டுத் தலைவர். என் தந்தையார் எங்களுக்குக் கொடுத்த சொத்துகளிலேயே விலை மதிக்க முடியாதது சுயமரியாதை இயக்கக் கொள்கைச் சொத்துகள் தான் என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.வீ.அன்புராஜ்
தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் கழகக் கொடியினை தோழர்களின் இடி முழக் கங்களிடையே ஏற்றி வைத்தார்.கலி.பூங்குன்றன் தொடக்கவுரை
மாநாட்டைத் திறந்து வைத்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் உரை யாற்றினார். 1962இல் தந்தை பெரியார் கூறிய கருத்தை மாநாட்டில் நினைவூட்டினார். தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. உலவ வேண்டுமானால் பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்காக அவர்கள் என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்குச் சமுதாயத் துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் எதிரிகள் அல்லர். (விடுதலை 1.1.1962)- என்று தந்தை பெரியார் கூறினார்.நடைமுறையில் பார்த்தால் தி.மு.க. பார்ப் பனர்களை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. பார்ப்பன ஊடகங்கள் கட்டுப்பாடாக திட்டமிட்டு தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புரளிகளைக் கிளப்பி வருவதை பொதுச்செயலாளர் எடுத்து விளக்கினார்.
வழக்குரைஞர் அருள்மொழி
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி தம் உரையில் குறிப் பிட்டதாவது:தமிழ்நாட்டில் புத்தரின் கருத்துகளை எடுத்து ரைத்தவர் தந்தை பெரியார். புத்தரா-கண்ணனா? என்று வரும் போது புத்தர் மனித சமூகத்தின் சமத்துவத்தைப் போதித்தார்.
கண்ணனோ, பிறப்பிலேயே பேதம் எனும் வருண தருமத்தைப் போதித்தார் என்பதை ஒப்பிட்டுப் பேசினார் அருள்மொழி.
முனைவர் துரை.சந்திரசேகரன்
திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தமது உரையில், கல்லையும், சாணியையும் சாமியாக்கி தமிழர்களின் அறிவை நாசப்படுத்திய பார்ப்பனர்களை வெகு வாகச் சாடினார்.திராவிடர் என்பதைக் கொச்சைப்படுத்த சிலர் கிளம்பியுள்ளனர். திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்பதற்கு ஆய்வுகள் தேவையில்லை. இந்த ஊரில் உள்ள தொடர் வண்டி நிலையத்திற்குச் சென்று பாருங்கள். ஊர்ப் பெயர் தமிழில் முதல் இடத்தில் இருக்கிறதே-இதற்கு போராடியவர்கள் யார்? இந்தி தானே முதல் இடத்தில் இருந்தது. இந்த மாற்றத்திற்குக் காரணம் திராவிடர் கழகம் அல்லவா? திராவிடர் இயக்கம் அல்லவா? என்ற நியாயமான வினாவை எழுப்பினார் முனைவர் துரை.சந்திரசேகரன்.

திருப்பத்தூரில் நடைபெற்ற மாநாட்டின் ஏ.டி.கோபால் நுழைவு வாயில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் பதாகைகளுடன் மின்னொளியில் அமைந்த சிறப்பான முகப்புக் காட்சி. (23.10.2010).
பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு தம் உரையில் முக்கியமாகக் குறிப் பிட்டதாவது:தி.மு.க. என்பது 1949ஆம் ஆண்டில் தோற்று விக்கப்பட்ட கட்சி என்றாலும், அதற்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. நீதிக்கட்சியின் தொடக் கத்திலிருந்து அதற்கான பாரம்பரியம் உண்டு.
மாநிலங்களவையில் அண்ணா முதன் முதலாகப் பேசும்பொழுது கூட, தனது திராவிடப் பாரம் பரியத்தை எடுத்துக்கூறிதான் தன் பேச்சையே தொடங்கினார்.
சென்னையில் பார்ப்பனர் அல்லாதார் பார்ப் பனர்களின் கடைகளுக்குச் சென்று அமர்ந்து சாப்பிட முடியாத ஒரு காலம் உண்டு. எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்துதான் சாப்பிட முடியும். அந்தக் காலகட்டத்திலும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்காக விடுதியைக் ஏற்படுத்தியவர். டாக்டர் சி.நடேசனார். அந்த விடுதியில் படித் தவர்கள்தாம்-பிற்காலத்தில் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி பிள்ளையும், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக விளங்கிய சிவ.சுப்பிரமணிய நாடாரும் என்ற வரலாற்று செய்தியினை இளைஞர்களுக்கு விளங்கும்படிக் கூறினார் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு.
பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை
திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தமது உரையில் குறிப் பிட்டதாவது:தந்தை பெரியார் காஞ்சிபுரம் மாநாட்டை விட்டு 1925இல் வெளியேறினார். வகுப்புரிமையை நிலை நாட்டியே தீருவேன் என்று ஆவேசமாகக் குரல் கொடுத்து வெளியேறினார்.
அப்பொழுது சி.ஆர். (ராஜாஜி) சொன்னார். நாயக்கரே! காங்கிரஸ் மலை! என்றார். மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன். வந்தால் மலை; போனால் மயிர்! என்று கூறினார் தந்தை பெரியார். பெரியார் வென்றாரா? இல்லையா? இளைஞர்கள் சிந்திக்க வேண்டு என்றார் பொருளாளர்.
இறுதியாக திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங் கோவன் நன்றி கூறினார். மாலை 5மணிக்குத் தொடங்கப்பட்ட மாநாடு இரவு 10 மணிக்கு நிறைவுற்றது.
மாநாட்டின் மக்கள்திரள் பந்தல் நிரம்பி வழிந்தது. வெளியே ஏராளமாக பொதுமக்கள் நின்று உரைகளைச் செவிமடுத்தனர். வெளியில் வெகுதூரம் வரை, உரைகளைக் கேட்கும் வண்ணம் ஒலிபெருக்கி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. சாலைகளின் இருமருங்கிலும் ஒளி விளக்குகள் இரவைப் பகலாக்கின.
குறிப்பாக எல்லா வகையிலும் சிறப்புத் தகுதி மாநாடாக திருப்பத்தூர் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது என்றால் மிகையல்ல.
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நிகழ்ச்சிகளை ஒருங் கிணைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக