புதன், 21 மார்ச், 2012

திருப்பத்தூரில் இல்லத் திறப்பு விழா

நா.சுப்புலட்சுமி - காளிதாஸ் ஆகியோர் புதிதாக கட்டியுள்ள இல்லத்தை  கழக மகளிரணி தோழியர் கே.கே.சி.கமலம்மாள் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர், மார்ச் 20- கடந்த 4.3.2012 ஆம் தேதியன்று காலை 8.30 மணியளவில் திருப் பத்தூர் நகரம், சகாய நகர் எதிரில், பி.கே. நகரில் திருப்பத்தூர் கழக மாவட்ட திராவி டர் கழக மகளிர் பாசறை மாவட்ட அமைப்பாளர் கவிஞர் நா.சுப்புலட்சுமி, திருப்பத்தூர் நகர திராவிடர் கழக தலை வர் தோழர் காளிதாஸ் ஆகியோர் புதியதாக கட்டியுள்ள இல்லத் தின் அறிமுக விழா நடைபெற்றது. முன்ன தாக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இல்லத்தினை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கழக மகளிர் அணி பொறுப்பாளருமான கே.கே.சி.கமலம்மாள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தைசேர்ந்த அண்ணாசரவணன், எம்.கே.எஸ்.இளங் கோவன், மாசி.பாலன், ஜெ.எம்.பெருமாள், தங்க.அசோகன், ஹரி, சிவக்குமார், பழனிசாமி, ஆட்டோ பாண்டியன் ஆகியோரும்,கழக மகளிர் அணியை சேர்ந்த கவிதா, வெண்ணிலா, இந்திராகாந்தி, சாந்தி வீரமணி, சாந்திதமிழ்ச் செல்வம், தனலட்சுமி, லட்சுமி, லட்சுமிஅசோ கன், பிரியா ஆகியோரும், பகுத்தறிவாளர் கழகத் தைச் சேர்ந்த கனகராஜ், சித.வீரமணி, தமிழ்ச்செல் வன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் திருப்பத்தூர் மூத்த வழக்குரைஞர்கள் டி.சி.ஆறுமுகம், டி.கே. சுகுமார், டி.பி.சந்திரன், பி.இராதாகிருஷ்ணன், ஏ.ஜேக்கப், அரசு வழக் குரைஞர் ரா.ரமேஷ், ராஜாமகேந்திரகுமார், எஸ்.நாகராஜ், வி.கணே சன் அவர்களும், நகரின் முக்கிய பிரமுகர்கள் டி.ஆர்.இளங்கோவன், லியோ பிரான்சிஸ் சேவி யர், வர்த்தக சங்க தலைவர் குட்டி (எ) சவுக்கார், ஏ.அண்ணாமல, முன் னாள் கர்ணம் பொன்னு சாமி மற்றும் ஏராளமான நண்பர்களும், வழக்குரை ஞர்களும்கலந்து கொண்டனர்.

திங்கள், 19 மார்ச், 2012

        ஊற்றங்கரை அப்பிநாயக்கன்பட்டியில்
    வெகு சிறப்புடன் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்த நாள் !
                                               மகளிர் கழக கொடியேற்றி இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டம்
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரை
அப்பிநாயக்கன்பட்டியில் அன்னை மணியம்மையார் அவர்களின் 92 வது பிறந்த நாளும் அனைத்துலக மகளிர் நாளும் வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது .முன்னதாக ஊரின் முகப்பில் அமைக்கப் பட்டிருந்த அய்யா தந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டது .ஊற்றங்கரை நகர மகளிரணி செயலாளர் வசந்தமல்லி சிவராஜ் அவர்கள் பலத்த ஒலி முழக்கங்களுக்கு இடையே கழக கொடி ஏற்றினார் .இந் நிகழ்ச்சிக்கு 9 ஆவது வார்ட் உறுப்பினர் சுமதி பழனி அவர்கள் தலைமை தாங்கினார். ஊற்றங்கரை நகர மகளிரணி செயலாளர் வசந்தமல்லி சிவராஜ்,வேண்டாமணி ,ஆனந்தி ,இரமணி சேகர் ,அபிராமி ,நீலவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
           ஒன்றிய இளைஞ்சரணி செயலாளர் சிவராஜ் அவர்கள் அன்னை மணியம்மையாரின் தொண்டினை விளக்கி பெண் விடுதலை அவசியம் குறித்தும் மிக சிறப்பான கருத்துரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில்  இளஞரணி தோழர்கள் பிரபாகரன் ,திருப்பதி ,திராவிடமணி மற்றும்  ,நாகராசன் ,சந்திரன் ,மேகநாதன் ,இரத்தினம் பெரியார் பிஞ்சுகள் செம்மொழி ,சஞ்சனா ,ஆதிகேசவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இறுதியாக மங்கையர்க்கரசி நன்றி உரை ஆற்றினார்

வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் உரிமை பற்றி அகிலா எழிலரசன் சிறப்புரை

மகளிர் நாள் கருத்தரங்கில் திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை பொருளாளர் எ.அகிலா எழிலரசன் உரையாற்றினார்.
ஊற்றங்கரை, மார்ச் 11- கல்லூரியில் மார்ச் 8  அனைத்துலக ``102 ஆ வது ``மகளிர் நாள் விழா காலை முதல் மாலை வரை மிகச் சிறப்பாக கொண்டா டப்பட்டது.    திராவி டர் கழக மாநில மக ளிர் பாசறை பொரு ளாளரும் திருப்பத்தூர் இன்னர் வீல் கிளப்பின் தலைவருமான எ. அகிலா எழிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மக ளிர் விழிப்புணர்வு உரைநிகழ்த்தினார்.
பெண்கள் மேம் பாடு,அவர்தம் கடமை கள், விட்டுக்கொடுத்து வாழ்வது, றுடிஅந  என் னும்  சொல்லில் அந      என்ற சொல் உள்ளது.  பெண்கள் ஆண்க ளுக்கு  நிகராக -  சரி நிகர் சமமாக  வாழ்வ துடன் கல்வி  கற்கும் காலங்களில் மாணவிகள் படிப்பில் மட்டுமே  தங் கள் முழு சிந்தனையும் ஆழச்செலுத்தி சிறந்து விளங்க வேண்டும். மேலும்  ஒழுக்கம், கட்டுப் பாடு, தூய்மை ,  வாய்மை, ஆகிய   பண்புள்ள நன் மகளிராக விளங்கிட  இன்றைய நாளில்  உறுதி கொள்ள  வேண்டும் என்றுரைத்தார்.
கல்லூரி செயலர்  செங் கோடன் மகளிர் நாள் வரலாறு, மக்களின் பங்க ளிப்பும் உரிமையும் பற்றி விளக்கினார்.  மக்கள் தொடர்பு அலுவலர்  நல்லாசிரியர் தர்மலிங் கம்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமிகு கோவிந்தராஜ், ஆகியோர் வாழ்த்தினர்.    கல்லூரி முதல்வரும், பெரியார் பல்கலைக்கழக ஆட் சிக்குழு உறுப்பினரும், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தால்  பாராட்டப்பட்ட வருமான அருள் அவர் கள் உலக பெண்களின் சாதனைப்பட்டியல், வெற்றிக்கான செயல்பாடு, மகளிர் மேம்பாடு குறித்து  கருத்து நல்கினார் .     இவ்வருட சிறந்த விரிவு ரையாளர்  சேவைக்கான விருது ஆங்கிலத்துறைக்கு - சிறீதேவி, கணினிப் பயன்பாட்டுத்துறைக்கு -ஜெயலட்சுமி, வணிக வியல் துறைக்கு -பசீரா கணிதவியல் துறைக்கு -கீதா,  மற்றும் நாட்டுநலப் பணி திட்டத்தில்சிறந்த வேதியியல் துறை மாணவி பிரியா, ஆகியோருக்கு  முதல்வர்  அருள் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரி வித்தார்.  கணிதத்துறை அமுதா அனைவரயும வர வேற்றார்.ஆங்கிலத்துறை சங்கீதா அனைவரயும் அறிமுகம்  செய்தார்.     மாணவிகளின் பட்டி மன்றம்  மானமிகு எ. அகிலா எழிலரசன் தலை மையில் நடை பெற்றது. தலைப்பு : ``வாழ்வியலில் அதிக ஈடுபாடு கொண்ட வர்கள் ஆண்களா? பெண்களா?``ஆண்களே   என்னும்அணியில் கரிஷ்மா, தமிழரசி, கலை வாணி, பசீரா ஆகியோர் வாதிட்டனர். பெண்களே  என்னும் அணியில் கற் பகம், வசந்தி, விஜய லட்சுமி, புவனேஸ்வரி ஆகியோர் முழக்கமிட் டனர்.
``பெண்கள் பங்க ளிப்பே   அதிகம் ``என்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. 3500 மாணவிகள் கை தட்டி முழக்கமிட்டனர். வணிக மேலாண்மைத் துறை  விரிவுரையாளர்க ளான சத்யகலா, சுபாங் கினிதேவி, வணிகவியல் துறை கஸ்தூரி, கல்யாணி, கணினிப் பயன்பாட்டுத் துறை தலைவி கவிதா ஆகியோர் வாழ்த்தினர்.    ``2020 இல்  பெண்கள் `` என்னும்  ஊமை நாடகம்,  மற்றும் கலை நிகழ்சிகள்  நடை பெற்றன. ஆங்கிலத் துறை விரிவுரையாளர் சங்கீதா நன்றி உரையாற் றினார். மகளிர் நாள் விழா ஏற்படுகளை  கவிதா,  சத்தியகலா, நாடு நல பணி திட்ட அலுவலர் செந்தில் நாதன், பார்த்தீபன், கல் பனாதேவி  பேராசி யைகள் மற்றும் மாணவி கள் ஏற்பாடு செய்தனர்.

திருப்பத்தூர் மாணவரணி ஆர்பாட்டம்

போர்க் குற்றவாளி இராஜபக்சேவை அய்.நா மன்றத்தில் கொண்டுவர விருக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தின் படி உரிய தண்டனை வழங்கவும் அதற்கு இந்திய அரசாங்கம் தீரமானத்தை ஆதரிக்கவும்.  வேலூர் மண்டல திராவி டர் மாணவர் கழக செய லாளர் கே.சி .எ . சிற்றரசு தலை மையில் மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிற்பகல் 4 மணிக்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு 80க்கும் மேற் பட்ட மாணவர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.  அய்.நா மன்றத்தின் தீர் மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் போர்க் குற்றவாளி இராஜ பக்சேவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட் டன.
ஆர்ப்பாட்டத்தினை விளக்கி வேலூர் மண்டல திராவிடர் கழக செயலாளர் பழ. வெங்கடாசலம் மாவட்ட செயலாளர். வி.ஜி. இளங்கோ புலவர் அண்ணாமலை தி.மு.க முருகேசன் அன்பழகன் ஆகியோர் உரையாற்றி னார்கள்.    ஆர்ப்பாட்டத்தில் அண்ணா.சரவணன் சி.வீரமணி தமிழ்ச்செல் வன் எம்.கே.எஸ்.இளங் கோவன் பெரியார்தாசன் அண்ணா.அப்பாசாமி வண்டி ஆறுமுகம் சுகுமார் ஆசிரியர் பழனி குமரேசன் திருநாவுக்கரசு சாமிநாதன் வெங்கடேசன் சிலம்பர சன் கே.டி. மணி பரிதி காளிதாஸ் இராஜேந்திரன் இரா. கனகராஜ் மதியழகன் பெருமாள் கருஞ்ச்சட்டை பாலன் இனியன் பழனி சாமி க. பிரபாகரன் மகேஷ் ஆனந்தன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொரு ளாளர் அகிலா எழிலரசன் மாவட்ட மகளரணி செய லாளர் ம. கவிதா கே.கே. சி. கமலம்மாள் தாமரை மங்கை செல்வி பவித்ரா பாக்கியவதி உள்ளிட்ட மகளிரணி தோழியர்கள் மற்றும் தி.மு.க ம.தி.மு.க டி.ஆர். இளங்கோ ஆகிய தோழர்களும் பொதுமக் களும் பங்கேற்றனர்.  இறு தியாக தமிழ்குடிமகன் நன்றி கூறினார்.

வியாழன், 8 மார்ச், 2012

                                        நான்கு தனி வாகனங்களில்
 மார்ச் 10 ,11 தஞ்சை முப்பெரும் மாநாட்டிற்கு திரள

                       திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
*அனைத்து ஒன்றியங்களிலும் தொடர்ந்து 3 மாத காலத்திற்கு  கிராமப்புற பிரச்சாரம்
                                அடுக்கடுக்கான செயல்திட்டங்கள்
திருப்பத்தூர் 8 ,
திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஊற்றங்கரையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் மார்ச் 8 ஆம் தேதி வியாழக்கிழமை  மாலை 5   மணிக்கு மிகச் சிறப்பாக  நடைபெற்றது. மாநில மகளிரணி பொருளாளர் அகிலாஎழிலரசன் தலைமை தாங்கினார்.மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம், மாநில ப.க.துணை தலைவர் அண்ணா.சரவணன்,மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி..கருணாநிதி சிறப்பு  அழைப்பாளராக பங்கேற்றார் .
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாவட்ட ப.க செயலாளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ். இளங்கோவன்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வண்டி .ஆறுமுகம்   மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகுமணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.இந்திராகாந்தி, வெண்ணிலா ,திருப்பத்தூர் நகர தலைவர் காளிதாஸ் ,ஊற்றங்கரை ஒன்றிய துணை செயலாளர் அண்ணா.அப்பாசாமி ,ஊற்றங்கரை ஒன்றிய ப.க பொறுப்பாளர் சி.சாமிநாதன் ,கீ .ஆ .கோபாலன் ,தா .பாண்டியன் ,சிவராசு ,சோலை .அசோகன் , முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, இரா .பழனி , ஒன்றியதலைவர் பெரியார் பெருந்தொண்டர் புலவர் அண்ணாமலை,முனி.வெங்கடேசன் ,வெ.பெரியார்செல்வம்  ஆகியோர் பங்கு கொண்டு  உரையாற்றினர்.
கழக் கொடிக்கம்பம் ,அய்யா சிலை அன்பளிப்பு
இக் கூட்டத்தில் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை பற்றியும்,இதுவரை ஆற்றிய பணிகளைக் காட்டிலும் மாவட்ட தலைவரின் வெளிநாட்டு பயணத்தின் போது இன்னும் சிறப்பாக மாவட்ட கழகம் இயங்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமாக .மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம் உரையாற்றினார் .திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கொடிக் கம்பமும் ஆறு மாதத்திற்கு ஒரு தந்தை பெரியார் அவர்களின் மார்பளவு சிலையும் விடுதலை வாசகர் வட்ட புரவலர்கள் தணிகை .ஜி.கருணாநிதி ,தணிகை குமாரி வாழ்விணையர்களால் அளிக்கப்படும் என்று பலத்த கரவொளிகளுக்கிடையே அறிவித்தார் .மேலும் ஊற்றங்கரை நகரின் நான்கு சாலைகளிலும் வாசகர் வட்டம் சார்பில் வரவேற்ப்பு பலகை அமைக்கப்படும் என்று அறிவித்தார் .மேலும் கழகத் தோழர்களின் கருத்துரைகளுக்குப் பின் கீழ்க்காணும் வகையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1.மார்ச் 10, 11 ஆகிய நாள்களில் தஞ்சையில் நடைபெற உள்ள அன்னை மணியம்மையார் பிறந்தநாள், விடுதலை சந்தா வழங்குதல் மற்றும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு உரிமைக்காப்பு மாநாடு ஆகிய முப்பெரும் விழாக்களில்  மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக திரளான தோழர்கள் நான்கு தனி வாகனம் எடுத்து சிறப்புடன் சென்று வருவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2 .ஒன்றியம் தோறும் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி மார்ச் ,ஏப்பிரல் ,மே ஆகிய மூன்று மாதங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராப்புற பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானித்து அவற்றை செயலாக்கும் வகையில்
 திருப்பத்தூர் மிட்டூர் பூங்குளம்
 மார்ச் 17 காலை 10 மணி
 சோலையார் பேட்டை  மார்ச் 17 மாலை 4 மணி
 மத்தூர்
 மார்ச் 18 மாலை 3மணி
 ஆலங்காயம்  மார்ச் 23 மாலை 3 மணி
 நாட்றம்பள்ளி  மார்ச் 24மாலை 3 மணி
  கந்திலி ,சுந்தரம்பள்ளி ,நத்தம்  மார்ச் 25 மாலை 3 மணி

 ஆம்பூர்  மார்ச் 31  காலை 10 மணி
 வாணியம் பாடி  மார்ச் 31  மாலை 4 மணி
 ஊற்றங்கரை
 ஏப்ரல் 1  மாலை 4 மணி

ஆகிய ஒன்றியங்களில் ஒன்றியக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் அனுமதியுடன் அறிவிக்கப்படுகிறது
3 .விடுதலை வைப்பு நிதி தொடர்பாக நன்கொடையாளர்களை அணுகுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

4.கடந்த 16 மாதங்களாக மிகசிறப்பாக தமிழர்தலைவரின் பாராட்டைபெற்று  நடைபெற்று வரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்  பொறுப்பாளர்களை மாவட்ட கழகம் பாராட்டுவதுடன் மாவட்டத்தின்  மற்ற ஒன்றியங்களிலும் குறிப்பாக மத்தூர்,திருப்பத்தூர் ஒன்றியங்களில் அமைத்திட உரிய ஏற்பாடுகளைச் செய்திடுவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

5 .ஏப்ரல் 14 ஊற்றங்கரை ஒன்றியம் அப்பி நாயக்கன்பட்டியில் திராவிடர் கழக கொடியேற்று விழாவும் ,அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் பேரு விழாவும் ,மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி உள்ளடக்கிய முப்பெரும் நிகழ்ச்சி நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது
6 விடுதலை சந்தா சேர்ப்பு பணியினை தொடர்ந்து நடத்துவது எனவும் ,புதிய சந்தா சேர்ப்பு ,சந்தா புதுப்பிப்பு பணிகளை தீவிரப் படுத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது .ஊற்றங்கரை ஒன்றியத்தில் தற்பொழுது வழங்கப்பட்ட 150 விடுதலை சந்தாவினையும் சேர்த்து ஒன்றிய கழகம் சார்பில் 300 விடுதலை சந்தாக்கள் அளிப்பது என்று தீர்மானிக்கப் படுகிறது
7  ஜூன் 10 ஆம் தேதி நடுப்பட்டியில் மாநில பக துணை தலைவர் அண்ணா.சரவணன் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.இந்திராகாந்தி,வாழ்விணையர்களால் இயக்கத்திற்கு வழங்கப் படு இடத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவி தலைமை கழக பொறுப்பாளர்களை அழைத்து வெகு சிறப்புடன் நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்படுகிறது
8 திசம்பர் 2 தமிழர் தலைவரின் 80 ஆம் ஆண்டு பவளவிழா நிகழ்வின் போது திருப்பத்தூர் சாமநகரில் தந்தை பெரியார் மார்பளவு சிலை நிறுவி தமிழர் தலைவரின் 80 ஆம் ஆண்டு பவளவிழா கல்வெட்டு நிறுவுவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது
9 அடுத்தஆண்டு (2013 ) உலக மகளிர் நாளை திருப்பத்தூரில் தமிழர் தலைவர் அனுமதி பெற்று மண்டல அளவில் வெகு சிறப்புடன் மகளிர்  மண்டல மாநாட்டில் நடத்துவது எனவும் அதற்க்கான களப் பணிகள்  ,திட்டமிடல் ,ஒன்றியம் தோறும் மகளிர் கலந்துரையாடல் நடத்துவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது
10 தமிழர்களின் வாழ்வுரிமை கேடயமான விடுதலை ஏடு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் போது அஞ்சல் துறையின் மெத்தன போக்கால் முறையாக சேர்ப்பிபதில்லை.இந்த நிலை உடனடியாக களையப் பட வேண்டுமாய் அஞ்சல் துறை அதிகாரிகளை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது .இந்த நிலையே தொடரும் பட்சத்தில் தலைமை கழகத்தில் ஒப்புதல் பெற்று சம்பந்த பட்ட அஞ்சல் துறையினை கண்டித்து  போராட்டம் நடத்தலாம் எனவும் தீர்மானிக்கப் படுகிறது

நிறைவாக மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.இந்திராகாந்தி,நன்றி கூறினார்

திருப்பத்தூர் கழகத்தின் தீவிர செயல் திட்டம்

                                        நான்கு தனி வாகனங்களில்
 மார்ச் 10 ,11 தஞ்சை முப்பெரும் மாநாட்டிற்கு திரள 

   திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
*அனைத்து ஒன்றியங்களிலும் தொடர்ந்து 3 மாத காலத்திற்கு  கிராமப்புற பிரச்சாரம்
             அடுக்கடுக்கான செயல்திட்டங்கள்
திருப்பத்தூர் 8 ,
திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஊற்றங்கரையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் மார்ச் 8 ஆம் தேதி வியாழக்கிழமை  மாலை 5   மணிக்கு மிகச் சிறப்பாக  நடைபெற்றது. மாநில மகளிரணி பொருளாளர் அகிலாஎழிலரசன் தலைமை தாங்கினார்.மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம், மாநில ப.க.துணை தலைவர் அண்ணா.சரவணன்,மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி..கருணாநிதி சிறப்பு  அழைப்பாளராக பங்கேற்றார் .
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாவட்ட ப.க செயலாளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ். இளங்கோவன்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வண்டி .ஆறுமுகம்   மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகுமணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.இந்திராகாந்தி, வெண்ணிலா ,திருப்பத்தூர் நகர தலைவர் காளிதாஸ் ,ஊற்றங்கரை ஒன்றிய துணை செயலாளர் அண்ணா.அப்பாசாமி ,ஊற்றங்கரை ஒன்றிய ப.க பொறுப்பாளர் சி.சாமிநாதன் ,கீ .ஆ .கோபாலன் ,தா .பாண்டியன் ,சிவராசு ,சோலை .அசோகன் , முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, இரா .பழனி , ஒன்றிய
தலைவர் பெரியார் பெருந்தொண்டர் புலவர் அண்ணாமலை,முனி.வெங்கடேசன் ,வெ.பெரியார்செல்வம்  ஆகியோர் பங்கு கொண்டு  உரையாற்றினர்.
கழக் கொடிக்கம்பம் ,அய்யா சிலை அன்பளிப்பு
இக் கூட்டத்தில் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை பற்றியும்,இதுவரை ஆற்றிய பணிகளைக் காட்டிலும் மாவட்ட தலைவரின் வெளிநாட்டு பயணத்தின் போது இன்னும் சிறப்பாக மாவட்ட கழகம் இயங்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமாக .மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம் உரையாற்றினார் .திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கொடிக் கம்பமும் ஆறு மாதத்திற்கு ஒரு தந்தை பெரியார் அவர்களின் மார்பளவு சிலையும் விடுதலை வாசகர் வட்ட புரவலர்கள் தணிகை .ஜி.கருணாநிதி ,தணிகை குமாரி வாழ்விணையர்களால் அளிக்கப்படும் என்று பலத்த கரவொளிகளுக்கிடையே அறிவித்தார் .மேலும் ஊற்றங்கரை நகரின் நான்கு சாலைகளிலும் வாசகர் வட்டம் சார்பில் வரவேற்ப்பு பலகை அமைக்கப்படும் என்று அறிவித்தார் .மேலும் கழகத் தோழர்களின் கருத்துரைகளுக்குப் பின் கீழ்க்காணும் வகையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1.மார்ச் 10, 11 ஆகிய நாள்களில் தஞ்சையில் நடைபெற உள்ள அன்னை மணியம்மையார் பிறந்தநாள், விடுதலை சந்தா வழங்குதல் மற்றும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு உரிமைக்காப்பு மாநாடு ஆகிய முப்பெரும் விழாக்களில்  மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக திரளான தோழர்கள் நான்கு தனி வாகனம் எடுத்து சிறப்புடன் சென்று வருவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2 .ஒன்றியம் தோறும் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி மார்ச் ,ஏப்பிரல் ,மே ஆகிய மூன்று மாதங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராப்புற பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானித்து அவற்றை செயலாக்கும் வகையில்
 திருப்பத்தூர் மிட்டூர் பூங்குளம்  மார்ச் 17 காலை 10 மணி
 சோலையார் பேட்டை  மார்ச் 17 மாலை 4 மணி
 மத்தூர்
 மார்ச் 18 மாலை 3மணி
 ஆலங்காயம்  மார்ச் 23 மாலை 3 மணி
 நாட்றம்பள்ளி  மார்ச் 24மாலை 3 மணி
  கந்திலி ,சுந்தரம்பள்ளி ,நத்தம்  மார்ச் 25 மாலை 3 மணி

 ஆம்பூர்  மார்ச் 31  காலை 10 மணி
 வாணியம் பாடி  மார்ச் 31  மாலை 4 மணி
 ஊற்றங்கரை  ஏப்ரல் 1  மாலை 4 மணி