
போர்க் குற்றவாளி இராஜபக்சேவை அய்.நா
மன்றத்தில் கொண்டுவர விருக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தின் படி உரிய
தண்டனை வழங்கவும் அதற்கு இந்திய அரசாங்கம் தீரமானத்தை ஆதரிக்கவும். வேலூர்
மண்டல திராவி டர் மாணவர் கழக செய லாளர் கே.சி .எ . சிற்றரசு தலை மையில்
மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிற்பகல் 4 மணிக்கு
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு 80க்கும் மேற் பட்ட மாணவர்
கழகத் தோழர்கள் பங்கேற்றனர். அய்.நா மன்றத்தின் தீர் மானத்தை இந்தியா
ஆதரிக்க வலியுறுத்தியும் போர்க் குற்றவாளி இராஜ பக்சேவை கண்டித்தும்
முழக்கங்கள் எழுப்பப்பட் டன.
ஆர்ப்பாட்டத்தினை விளக்கி வேலூர் மண்டல
திராவிடர் கழக செயலாளர் பழ. வெங்கடாசலம் மாவட்ட செயலாளர். வி.ஜி. இளங்கோ
புலவர் அண்ணாமலை தி.மு.க முருகேசன் அன்பழகன் ஆகியோர் உரையாற்றி னார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் அண்ணா.சரவணன் சி.வீரமணி தமிழ்ச்செல் வன் எம்.கே.எஸ்.இளங்
கோவன் பெரியார்தாசன் அண்ணா.அப்பாசாமி வண்டி ஆறுமுகம் சுகுமார் ஆசிரியர்
பழனி குமரேசன் திருநாவுக்கரசு சாமிநாதன் வெங்கடேசன் சிலம்பர சன் கே.டி. மணி
பரிதி காளிதாஸ் இராஜேந்திரன் இரா. கனகராஜ் மதியழகன் பெருமாள் கருஞ்ச்சட்டை
பாலன் இனியன் பழனி சாமி க. பிரபாகரன் மகேஷ் ஆனந்தன் மற்றும் மாநில மகளிர்
பாசறை பொரு ளாளர் அகிலா எழிலரசன் மாவட்ட மகளரணி செய லாளர் ம. கவிதா கே.கே.
சி. கமலம்மாள் தாமரை மங்கை செல்வி பவித்ரா பாக்கியவதி உள்ளிட்ட மகளிரணி
தோழியர்கள் மற்றும் தி.மு.க ம.தி.மு.க டி.ஆர். இளங்கோ ஆகிய தோழர்களும்
பொதுமக் களும் பங்கேற்றனர். இறு தியாக தமிழ்குடிமகன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக