வியாழன், 8 மார்ச், 2012

திருப்பத்தூர் கழகத்தின் தீவிர செயல் திட்டம்


                                        நான்கு தனி வாகனங்களில்
 மார்ச் 10 ,11 தஞ்சை முப்பெரும் மாநாட்டிற்கு திரள 



   திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
*அனைத்து ஒன்றியங்களிலும் தொடர்ந்து 3 மாத காலத்திற்கு  கிராமப்புற பிரச்சாரம்
             அடுக்கடுக்கான செயல்திட்டங்கள்
திருப்பத்தூர் 8 ,
திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஊற்றங்கரையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் மார்ச் 8 ஆம் தேதி வியாழக்கிழமை  மாலை 5   மணிக்கு மிகச் சிறப்பாக  நடைபெற்றது. மாநில மகளிரணி பொருளாளர் அகிலாஎழிலரசன் தலைமை தாங்கினார்.மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம், மாநில ப.க.துணை தலைவர் அண்ணா.சரவணன்,மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி..கருணாநிதி சிறப்பு  அழைப்பாளராக பங்கேற்றார் .
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாவட்ட ப.க செயலாளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ். இளங்கோவன்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வண்டி .ஆறுமுகம்   மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகுமணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.இந்திராகாந்தி, வெண்ணிலா ,திருப்பத்தூர் நகர தலைவர் காளிதாஸ் ,ஊற்றங்கரை ஒன்றிய துணை செயலாளர் அண்ணா.அப்பாசாமி ,ஊற்றங்கரை ஒன்றிய ப.க பொறுப்பாளர் சி.சாமிநாதன் ,கீ .ஆ .கோபாலன் ,தா .பாண்டியன் ,சிவராசு ,சோலை .அசோகன் , முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, இரா .பழனி , ஒன்றிய
தலைவர் பெரியார் பெருந்தொண்டர் புலவர் அண்ணாமலை,முனி.வெங்கடேசன் ,வெ.பெரியார்செல்வம்  ஆகியோர் பங்கு கொண்டு  உரையாற்றினர்.
கழக் கொடிக்கம்பம் ,அய்யா சிலை அன்பளிப்பு
இக் கூட்டத்தில் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை பற்றியும்,இதுவரை ஆற்றிய பணிகளைக் காட்டிலும் மாவட்ட தலைவரின் வெளிநாட்டு பயணத்தின் போது இன்னும் சிறப்பாக மாவட்ட கழகம் இயங்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமாக .மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம் உரையாற்றினார் .திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கொடிக் கம்பமும் ஆறு மாதத்திற்கு ஒரு தந்தை பெரியார் அவர்களின் மார்பளவு சிலையும் விடுதலை வாசகர் வட்ட புரவலர்கள் தணிகை .ஜி.கருணாநிதி ,தணிகை குமாரி வாழ்விணையர்களால் அளிக்கப்படும் என்று பலத்த கரவொளிகளுக்கிடையே அறிவித்தார் .மேலும் ஊற்றங்கரை நகரின் நான்கு சாலைகளிலும் வாசகர் வட்டம் சார்பில் வரவேற்ப்பு பலகை அமைக்கப்படும் என்று அறிவித்தார் .மேலும் கழகத் தோழர்களின் கருத்துரைகளுக்குப் பின் கீழ்க்காணும் வகையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1.மார்ச் 10, 11 ஆகிய நாள்களில் தஞ்சையில் நடைபெற உள்ள அன்னை மணியம்மையார் பிறந்தநாள், விடுதலை சந்தா வழங்குதல் மற்றும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு உரிமைக்காப்பு மாநாடு ஆகிய முப்பெரும் விழாக்களில்  மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக திரளான தோழர்கள் நான்கு தனி வாகனம் எடுத்து சிறப்புடன் சென்று வருவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2 .ஒன்றியம் தோறும் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி மார்ச் ,ஏப்பிரல் ,மே ஆகிய மூன்று மாதங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராப்புற பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானித்து அவற்றை செயலாக்கும் வகையில்
 திருப்பத்தூர் மிட்டூர் பூங்குளம்  மார்ச் 17 காலை 10 மணி
 சோலையார் பேட்டை  மார்ச் 17 மாலை 4 மணி
 மத்தூர்
 மார்ச் 18 மாலை 3மணி
 ஆலங்காயம்  மார்ச் 23 மாலை 3 மணி
 நாட்றம்பள்ளி  மார்ச் 24மாலை 3 மணி
  கந்திலி ,சுந்தரம்பள்ளி ,நத்தம்  மார்ச் 25 மாலை 3 மணி


 ஆம்பூர்  மார்ச் 31  காலை 10 மணி
 வாணியம் பாடி  மார்ச் 31  மாலை 4 மணி
 ஊற்றங்கரை  ஏப்ரல் 1  மாலை 4 மணி

ஆகிய ஒன்றியங்களில் ஒன்றியக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் அனுமதியுடன் அறிவிக்கப்படுகிறது
3 .விடுதலை வைப்பு நிதி தொடர்பாக நன்கொடையாளர்களை அணுகுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

4.கடந்த 16 மாதங்களாக மிகசிறப்பாக தமிழர்தலைவரின் பாராட்டைபெற்று  நடைபெற்று வரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்  பொறுப்பாளர்களை மாவட்ட கழகம் பாராட்டுவதுடன் மாவட்டத்தின்  மற்ற ஒன்றியங்களிலும் குறிப்பாக மத்தூர்,திருப்பத்தூர் ஒன்றியங்களில் அமைத்திட உரிய ஏற்பாடுகளைச் செய்திடுவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
5 .ஏப்ரல் 14 ஊற்றங்கரை ஒன்றியம் அப்பி நாயக்கன்பட்டியில் திராவிடர் கழக கொடியேற்று விழாவும் ,அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் பேரு விழாவும் ,மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி உள்ளடக்கிய முப்பெரும் நிகழ்ச்சி நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது
6 விடுதலை சந்தா சேர்ப்பு பணியினை தொடர்ந்து நடத்துவது எனவும் ,புதிய சந்தா சேர்ப்பு ,சந்தா புதுப்பிப்பு பணிகளை தீவிரப் படுத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது .ஊற்றங்கரை ஒன்றியத்தில் தற்பொழுது வழங்கப்பட்ட 150 விடுதலை சந்தாவினையும் சேர்த்து ஒன்றிய கழகம் சார்பில் 300 விடுதலை சந்தாக்கள் அளிப்பது என்று தீர்மானிக்கப் படுகிறது
7  ஜூன் 10 ஆம் தேதி நடுப்பட்டியில் மாநில பக துணை தலைவர் அண்ணா.சரவணன் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.இந்திராகாந்தி,வாழ்விணையர்களால் இயக்கத்திற்கு வழங்கப் படு இடத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவி தலைமை கழக பொறுப்பாளர்களை அழைத்து வெகு சிறப்புடன் நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்படுகிறது
8 திசம்பர் 2 தமிழர் தலைவரின் 80 ஆம் ஆண்டு பவளவிழா நிகழ்வின் போது திருப்பத்தூர் சாமநகரில் தந்தை பெரியார் மார்பளவு சிலை நிறுவி தமிழர் தலைவரின் 80 ஆம் ஆண்டு பவளவிழா கல்வெட்டு நிறுவுவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது
9 அடுத்தஆண்டு (2013 ) உலக மகளிர் நாளை திருப்பத்தூரில் தமிழர் தலைவர் அனுமதி பெற்று மண்டல அளவில் வெகு சிறப்புடன் மகளிர்  மண்டல மாநாட்டில் நடத்துவது எனவும் அதற்க்கான களப் பணிகள்  ,திட்டமிடல் ,ஒன்றியம் தோறும் மகளிர் கலந்துரையாடல் நடத்துவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது
10 தமிழர்களின் வாழ்வுரிமை கேடயமான விடுதலை ஏடு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் போது அஞ்சல் துறையின் மெத்தன போக்கால் முறையாக சேர்ப்பிபதில்லை.இந்த நிலை உடனடியாக களையப் பட வேண்டுமாய் அஞ்சல் துறை அதிகாரிகளை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது .இந்த நிலையே தொடரும் பட்சத்தில் தலைமை கழகத்தில் ஒப்புதல் பெற்று சம்பந்த பட்ட அஞ்சல் துறையினை கண்டித்து  போராட்டம் நடத்தலாம் எனவும் தீர்மானிக்கப் படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக