
மகளிர் நாள் கருத்தரங்கில் திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை பொருளாளர் எ.அகிலா எழிலரசன் உரையாற்றினார்.
ஊற்றங்கரை, மார்ச் 11- கல்லூரியில் மார்ச்
8 அனைத்துலக ``102 ஆ வது ``மகளிர் நாள் விழா காலை முதல் மாலை வரை மிகச்
சிறப்பாக கொண்டா டப்பட்டது. திராவி டர் கழக மாநில மக ளிர் பாசறை பொரு
ளாளரும் திருப்பத்தூர் இன்னர் வீல் கிளப்பின் தலைவருமான எ. அகிலா எழிலரசன்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மக ளிர் விழிப்புணர்வு
உரைநிகழ்த்தினார்.
பெண்கள் மேம் பாடு,அவர்தம் கடமை கள்,
விட்டுக்கொடுத்து வாழ்வது, றுடிஅந என் னும் சொல்லில் அந என்ற சொல்
உள்ளது. பெண்கள் ஆண்க ளுக்கு நிகராக - சரி நிகர் சமமாக வாழ்வ துடன்
கல்வி கற்கும் காலங்களில் மாணவிகள் படிப்பில் மட்டுமே தங் கள் முழு
சிந்தனையும் ஆழச்செலுத்தி சிறந்து விளங்க வேண்டும். மேலும் ஒழுக்கம்,
கட்டுப் பாடு, தூய்மை , வாய்மை, ஆகிய பண்புள்ள நன் மகளிராக விளங்கிட
இன்றைய நாளில் உறுதி கொள்ள வேண்டும் என்றுரைத்தார்.
கல்லூரி செயலர் செங் கோடன் மகளிர் நாள்
வரலாறு, மக்களின் பங்க ளிப்பும் உரிமையும் பற்றி விளக்கினார். மக்கள்
தொடர்பு அலுவலர் நல்லாசிரியர் தர்மலிங் கம்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்
திருமிகு கோவிந்தராஜ், ஆகியோர் வாழ்த்தினர். கல்லூரி முதல்வரும்,
பெரியார் பல்கலைக்கழக ஆட் சிக்குழு உறுப்பினரும், ஊற்றங்கரை விடுதலை வாசகர்
வட்டத்தால் பாராட்டப்பட்ட வருமான அருள் அவர் கள் உலக பெண்களின்
சாதனைப்பட்டியல், வெற்றிக்கான செயல்பாடு, மகளிர் மேம்பாடு குறித்து
கருத்து நல்கினார் . இவ்வருட சிறந்த விரிவு ரையாளர் சேவைக்கான விருது
ஆங்கிலத்துறைக்கு - சிறீதேவி, கணினிப் பயன்பாட்டுத்துறைக்கு -ஜெயலட்சுமி,
வணிக வியல் துறைக்கு -பசீரா கணிதவியல் துறைக்கு -கீதா, மற்றும் நாட்டுநலப்
பணி திட்டத்தில்சிறந்த வேதியியல் துறை மாணவி பிரியா, ஆகியோருக்கு
முதல்வர் அருள் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரி வித்தார். கணிதத்துறை
அமுதா அனைவரயும வர வேற்றார்.ஆங்கிலத்துறை சங்கீதா அனைவரயும் அறிமுகம்
செய்தார். மாணவிகளின் பட்டி மன்றம் மானமிகு எ. அகிலா எழிலரசன் தலை
மையில் நடை பெற்றது. தலைப்பு : ``வாழ்வியலில் அதிக ஈடுபாடு கொண்ட வர்கள்
ஆண்களா? பெண்களா?``ஆண்களே என்னும்அணியில் கரிஷ்மா, தமிழரசி, கலை வாணி,
பசீரா ஆகியோர் வாதிட்டனர். பெண்களே என்னும் அணியில் கற் பகம், வசந்தி,
விஜய லட்சுமி, புவனேஸ்வரி ஆகியோர் முழக்கமிட் டனர்.
``பெண்கள் பங்க ளிப்பே அதிகம் ``என்று
தீர்ப்பு வழங்கப்பட்டது. 3500 மாணவிகள் கை தட்டி முழக்கமிட்டனர். வணிக
மேலாண்மைத் துறை விரிவுரையாளர்க ளான சத்யகலா, சுபாங் கினிதேவி, வணிகவியல்
துறை கஸ்தூரி, கல்யாணி, கணினிப் பயன்பாட்டுத் துறை தலைவி கவிதா ஆகியோர்
வாழ்த்தினர். ``2020 இல் பெண்கள் `` என்னும் ஊமை நாடகம், மற்றும் கலை
நிகழ்சிகள் நடை பெற்றன. ஆங்கிலத் துறை விரிவுரையாளர் சங்கீதா நன்றி
உரையாற் றினார். மகளிர் நாள் விழா ஏற்படுகளை கவிதா, சத்தியகலா, நாடு நல
பணி திட்ட அலுவலர் செந்தில் நாதன், பார்த்தீபன், கல் பனாதேவி பேராசி யைகள்
மற்றும் மாணவி கள் ஏற்பாடு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக