புதன், 27 ஜூலை, 2011

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்: பச்சைத்தமிழர் காமராசர் அவர்களின் 109 ஆம் ஆண்டு ...

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்: பச்சைத்தமிழர் காமராசர் அவர்களின் 109 ஆம் ஆண்டு ...: " அரங்கம் நிரம்பி வழிந்தது ! கருத்து மழை பொழிந்தது ! ..."

பச்சைத்தமிழர் காமராசர் அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா !




































                                                     அரங்கம் நிரம்பி வழிந்தது ! கருத்து மழை பொழிந்தது !
                                                         ஊற்றங்கரையில் எழுச்சியுடன்  விடுதலை வாசகர்   வட்டம் சார்பில் நடைபெற்ற
            பச்சைத்தமிழர்  காமராசர்  அவர்களின் 109  ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா  !


ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பச்சைத்தமிழர்  காமராசர்  அவர்களின் 109  ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா  கருத்தரங்கமும் ,அரிமா முத்து.சந்திரசேகர்  அவர்களுக்கு பாராட்டு விழாவும்   கடந்த  ஜூலை   24 ஆம்    தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற்றது

இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின்  துணை தலைவர் சி.சுவாமிநாதன்   வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின்  பொருளாளர் அண்ணா .அப்பாசாமிவாசித்தார் ,விழா அறிமுக உரையை ப.க.மாநில துணைத் தலைவர் அண்ணா .சரவணன்  ஆற்றினார்
  இந் நிகழ்ச்சிக்குதருமபுரி காங்கிரெஸ் மாவட்ட பொருளாளரும் ,மூப்பனார் பேரவையின் மாநில துணை தலைவர்  கே.எ .அரங்கநாதன் தலைமை தாங்கி கல்வி கடவுள் என்றால் அது காமராசர் தான் எந்த கடவுளும் பொறியாளராகவும்,மருத்துவராகவும் ஆக்கவில்லை காமராசர் தான் அதை செய்தார் பெரியார் சொன்னதை அவர் செய்ததால் தான் காமராசர் புகழை எவராலும் மறைக்க முடியவில்லை .இன்றைக்கு காமராசர் பிறந்த நாளை கொண்டாடும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தை பாராட்டுவதுடன் நன்கொடையாக ரூபாய் 2000 த்தை வாசகர் வட்ட தலைவரிடம் அளித்து  விடுதலை பத்திரிக்கையை அனைவரும் படிக்க வேண்டும் என்று அரங்கம் கரவொலியால் அதிரும் வண்ணம் தனது தலைமை உரையையாற்றினார்

திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் ,ஊற்றங்கரை காமராசர் அறக்கட்டளை தலைவர் டி.எஸ் .திருநாதன் திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்

ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் அரிமா.முத்து .சந்திரசேகர்    அவர்கள் அரிமா மற்றும் சமுக  பணிகளுக்காக பாராட்டப்பட்டார்   .ஊற்றங்கரை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும் ,முன்னாள் ஒன்றிய திமுக பொறுப்பாளருமான வ.சாமிநாதன் பாரட்டுரையாற்றினார்

 பச்சை தமிழர்  காமராசர்  பிறந்த நாளையொட்டி காமராசர் படத்தினை
திருப்பத்தூர் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையின் நிறுவன தலைவர்  Rtn B .கனேஷ்மல் காமராசர் படத்தினை திறந்து  வைத்து ஊற்றங்கரை வாசகர் வட்ட செயல்பாடுகளை பாராட்டி ருபாய் 3000 த்தை மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசனிடம் அளித்தார்  .மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காமராசர் வாழ்க்கை குறித்த நூலினை வழங்கினார்

   திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் .கவிஞர்  .கலி.பூங்குன்றன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு தந்தை பெரியார் மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும்,இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய  .பணிகள் ,இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர் நோக்கி உள்ள சவால்கள் குறித்து விளக்கமாக கருத்துரையாற்றினார்
  வருகை தந்த  சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள்  மரு.அண்ணாமலை ,பொறி .கௌரிசங்கர் ,மரு.ஜெகன்பாபு,பொன்முடி,வி.ஜி.இளங்கோ ,கே.டி.மணி
ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் .

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சாம்பிள் மருந்துகள் வீணடிக்கப்படாமல் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வண்ணம் மருந்து கடைகள் ,மருத்துவர்களிடம் இருந்து சாம்பிள் மருந்துகள் சேகரித்து பெரியார் மணியம்மை இலவச மருத்துவ மனை சென்னைக்கு அனுப்புவதை தொடர் பணியாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் செய்கிறது அதன் ஒரு நிகழ்வாக தருமபுரி பல் மருத்துவர் மரு.அண்ணாமலை அவர்கள் தனக்கு வந்த சாம்பிள் மருந்துகளை கவிஞர்,கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார் .
விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் . ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர் பொன்முடி நன்றியுரையாற்றினார்

நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் விடுதலையில் வெளிவந்த மயிலாடன் எழுதிய காமராசர் குறித்த ஒற்றைகலம் செய்தி நகலும்  ,தமிழர் தலைவர் எழுதிய வைட்டமின் டி குறித்த வாழ்வியல் சிந்தனை  நகலும்  வழங்கப்பட்டது  .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் புதிதாக 8 உறுப்பினர்களாக இணைந்தனர்

விடுதலை வாசகர் வட்ட ஜூன்  மாத கருத்தரங்க நிகழ்வுகளின்  புகைப்படங்களை http://tirupatturdk.blogspot.com  என்னும் வலை பூ தளத்தில் காணலாம்

திங்கள், 4 ஜூலை, 2011

ஊர் திருவிழா போல் நடைபெற்ற திராவிடர்கழக பொதுக் கூட்டம்





















                                                   ஊற்றங்கரை ஒன்றியம் நொச்சிபட்டியில்            

 

                                   புதிய இளைஞ்சர்கள் கழகத்தில் இணைந்தனர்!
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டியில் மறைந்த செல்லன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் ,திராவிடர் கழக பொதுக்கூட்டமும் நடைபெற்றது .புதிய கிளை கழகமான நொச்சிபட்டியில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடத்தபடும் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் என்பதால் மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .ஊர் முழுவதும் கழக கொடிகளும் தோரனகளும் கட்டப்பட்டிருந்தன 
அம்பேத்கார் சிலைக்கு மாலை
முன்னதாக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி .எழிலரசன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணல் அம்பத்கார் சிலைக்கு மாலை அணிவித்தனர் தந்தை பெரியார் வாழ்க ! அண்ணல் அம்பேத்கார் வாழ்க ! சமுக நீதி வெல்க ! என்று தோழர்கள் உணர்ச்சி முழக்கமிட்டனர்

       சரியாக மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது இன் நிகழ்ச்சிக்கு மத்தூர் ஒன்றிய முன்னால் செயலாளர் செ.பொன்முடி வரவேற்புரையாற்ற  மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கினார் ,விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட துணை செயலாளர் சா.அசோகன் ,நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் ,கிருட்டினகிரி மாவட்ட திக தலைவர் தா,திருப்பதி ,திமுக மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ,விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி ,மண்டல செயலாளர் பழ ,வெங்கடாசலம் ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ .பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
                   நொச்சிப்பட்டியில் பிறந்து திராவிடர் கழகத்தில் தீவிரமாக செயலாற்றும் பொன்முடி அவர்களை 69 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தில் உச்ச நீதிபதி கொடும்பாவியை கொளுத்தி தங்கள் ஊரில் இருந்து சிறை சென்றமைக்காக நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் பொன்முடி அவர்களை பாராட்டி சால்வை அணிவித்தார்
                                         திராவிடர் கழக தலைமை நிலைய சொற்பொழிவாளர் தஞ்சை .இரா.பெரியார் செல்வன் தந்தைபெரியார் ,திராவிடர் இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆற்றிய பணிகளை பட்டியளிட்டதுடன் அம்பேத்கார் காட்டிய வழியில் தான் நாம் செல்கிறோமா? என்று கேள்வி எழுப்பியதுடன் ஒடுக்கப்பட்ட மக்களும் ,தமிழீழ மக்களும் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார் .இந் நிகழ்ச்சியில்மண்டல செயலாளர் தியாகராசன் 
மாவட்ட செய லாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க செயலா ளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ்.இளங்கோ வன், ஊற்றங்கரை ப.க செயலாளர் சகாதேவன்,மாவட்ட இலஞ்சரணி தலைவர் வண்டி.ஆறுமுகம் ,  மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இணைச் செயலாளர் அரங்க. ரவி, மாநில மகளிரணி பொரு ளாளர்  அகிலா, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகு மணி ,இந்திராகாந்தி, கவிஞர்.சுப்புலட்சுமி, மாவட்ட ப.க,பொறுப் பாளர் சித.வீரமணி, ஆனந்தன், மத்தூர் ஒன் றிய தலைவர் முரு கேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிட ராசன், பொதுக் குழு உறுப்பினர் வசந்தி கணேசன், காவேரி, , சித. அருள், காளிதாஸ், கனகராஜ்,  திருப்பதி, வெற்றிகொண் டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,இரா.வேங்கடம் ,நடராசன் ,கௌதமன் ,பிரபாகரன் , சி.சாமிநாதன், அண்ணா, அப்பாசாமி, செய்தியாளர் கோபால் துரை,மைக்கேல்,வேலு  உள்ளிட்ட ஏரா ளமான திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, கந் திலி, ஊற்றங்கரை, மத்தூர் ஒன்றிய தோழர் கள் பங்கேற்றனர் விழாவை மாநில பக துணை தலைவர் அண்ணா.சரவணன் தொகுத்து உரையாற்றினார் .இறு தியாக மாவட்ட மாண வரணி தலைவர் தமிழ் குடிமகன் நன்றி உரை யாற்றினார்.