திங்கள், 4 ஜூலை, 2011

ஊர் திருவிழா போல் நடைபெற்ற திராவிடர்கழக பொதுக் கூட்டம்





















                                                   ஊற்றங்கரை ஒன்றியம் நொச்சிபட்டியில்            

 

                                   புதிய இளைஞ்சர்கள் கழகத்தில் இணைந்தனர்!
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டியில் மறைந்த செல்லன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் ,திராவிடர் கழக பொதுக்கூட்டமும் நடைபெற்றது .புதிய கிளை கழகமான நொச்சிபட்டியில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடத்தபடும் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் என்பதால் மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .ஊர் முழுவதும் கழக கொடிகளும் தோரனகளும் கட்டப்பட்டிருந்தன 
அம்பேத்கார் சிலைக்கு மாலை
முன்னதாக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி .எழிலரசன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணல் அம்பத்கார் சிலைக்கு மாலை அணிவித்தனர் தந்தை பெரியார் வாழ்க ! அண்ணல் அம்பேத்கார் வாழ்க ! சமுக நீதி வெல்க ! என்று தோழர்கள் உணர்ச்சி முழக்கமிட்டனர்

       சரியாக மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது இன் நிகழ்ச்சிக்கு மத்தூர் ஒன்றிய முன்னால் செயலாளர் செ.பொன்முடி வரவேற்புரையாற்ற  மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கினார் ,விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட துணை செயலாளர் சா.அசோகன் ,நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் ,கிருட்டினகிரி மாவட்ட திக தலைவர் தா,திருப்பதி ,திமுக மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ,விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி ,மண்டல செயலாளர் பழ ,வெங்கடாசலம் ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ .பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
                   நொச்சிப்பட்டியில் பிறந்து திராவிடர் கழகத்தில் தீவிரமாக செயலாற்றும் பொன்முடி அவர்களை 69 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தில் உச்ச நீதிபதி கொடும்பாவியை கொளுத்தி தங்கள் ஊரில் இருந்து சிறை சென்றமைக்காக நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் பொன்முடி அவர்களை பாராட்டி சால்வை அணிவித்தார்
                                         திராவிடர் கழக தலைமை நிலைய சொற்பொழிவாளர் தஞ்சை .இரா.பெரியார் செல்வன் தந்தைபெரியார் ,திராவிடர் இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆற்றிய பணிகளை பட்டியளிட்டதுடன் அம்பேத்கார் காட்டிய வழியில் தான் நாம் செல்கிறோமா? என்று கேள்வி எழுப்பியதுடன் ஒடுக்கப்பட்ட மக்களும் ,தமிழீழ மக்களும் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார் .இந் நிகழ்ச்சியில்மண்டல செயலாளர் தியாகராசன் 
மாவட்ட செய லாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க செயலா ளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ்.இளங்கோ வன், ஊற்றங்கரை ப.க செயலாளர் சகாதேவன்,மாவட்ட இலஞ்சரணி தலைவர் வண்டி.ஆறுமுகம் ,  மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இணைச் செயலாளர் அரங்க. ரவி, மாநில மகளிரணி பொரு ளாளர்  அகிலா, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகு மணி ,இந்திராகாந்தி, கவிஞர்.சுப்புலட்சுமி, மாவட்ட ப.க,பொறுப் பாளர் சித.வீரமணி, ஆனந்தன், மத்தூர் ஒன் றிய தலைவர் முரு கேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிட ராசன், பொதுக் குழு உறுப்பினர் வசந்தி கணேசன், காவேரி, , சித. அருள், காளிதாஸ், கனகராஜ்,  திருப்பதி, வெற்றிகொண் டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,இரா.வேங்கடம் ,நடராசன் ,கௌதமன் ,பிரபாகரன் , சி.சாமிநாதன், அண்ணா, அப்பாசாமி, செய்தியாளர் கோபால் துரை,மைக்கேல்,வேலு  உள்ளிட்ட ஏரா ளமான திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, கந் திலி, ஊற்றங்கரை, மத்தூர் ஒன்றிய தோழர் கள் பங்கேற்றனர் விழாவை மாநில பக துணை தலைவர் அண்ணா.சரவணன் தொகுத்து உரையாற்றினார் .இறு தியாக மாவட்ட மாண வரணி தலைவர் தமிழ் குடிமகன் நன்றி உரை யாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக