திங்கள், 4 ஜூலை, 2011

திருப்பத்தூர்-மத்தூர் பொதுக்கூட்டத்தில் துரை.சந்திரசேகரன் பேச்சு


இலங்கை செய்த போர் குற்றம் உலகுக்கு வெளிவந்துவிட்டது
இந்தியா இலங்கைக்கு உதவி செய்து கேவலத்தைசுமக்கிறது
மத்தூர், ஜூலை 3- இலங்கைக்கு இந்தியா உதவி செய்து கேவலத்தை சுமக்கிறது என்று துரை. சந்திரசேகரன் பேசினார்.
ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலை வெறியன் ராஜபக்சேவை உலக நீதிமன்ற கூண்டில் ஏற்றி தண்டிக்க வலி யுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மத்தூ ரில் மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் 27.6.2011 திங்கள்கிழமை மாலை 6 மணி அளவில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
உரையாற்றியோர்
இப்பொது கூட்டத் திற்கு முன்னதாக மாவட்ட இளைஞரணி தலைவர்  வண்டி .ஆறுமுகம் வர வேற்புரையாற்றினார் .   மண்டல மாணவரணி செயலாளர் ஏ.சிற்றரசன் தலைமை வகித்தார். மாவட்ட  திராவிடர் கழக தலைவர் கே.சி. எழிலரசன், மாநில மாண வரணி துணை செயலா ளர் மு.சென்னியப்பன், மண்டல செயலாளர்  பழ.வெங்கடாசலம், மாநில ப.க.துணை தலை வர் அண்ணா.சரவணன், திமுக ஒன்றிய செய லாளர் பொன்.குணசேக ரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்  கிருட் டினகிரி அரசு கலை கல் லூரி மாணவர் ஜெயச் சந்திரன், ப.க. மாநில பொறுப்பாளர் தகடூர். தமிழ்ச்செல்வி ஆகியோர் கூட்டத்தின் நோக்கங் களை குறித்து விளக்க மாக உரையாற்றினர்.  இக்கூட்டத்தில் திராவி டர் கழக துணை பொதுசெயலாளர் துரை.சந்திரசேகரன்  சிறப்புரையாற்றினார்.  அவர் தமது உரையில் 'திராவிடர் கழக மாவட்ட மாணவ ரணி சார்பில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக இலங் கையில் தமிழர்களைப் போர்க்குற்றம் புரிந்த கொடியவன் ராஜபக் சேவை அய்.நா மன்றத் தில் கைது செய்து தண் டிக்க வேண்டும் .தமிழ் நாட்டுத்தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டுஇந்திய அரசு செயல்படவேண்டும், நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர காலம் கடத்தாமல் முன்வரவேண்டும். 60 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் தந்தை செல்வா தலைமையில் போராடிய தமிழர்கள் முற்றிலும் உரிமை மறுக்கப்பட்ட நிலை யில்தான் ஆயுதம் தாங் கிப் போராடினார்கள், விடுதலைப்புலிகளாக மாறினார்கள் புலிகள் மீது மாறுபட்ட கருத்து இந்திய அரசிற்கு இருந் தாலும் இன்றைக்கு ஆறாத துயரமாக படு கொலை நடந்திருக் கிறது. வரலாற்றில் அழிக்க முடியாத படு கொலையை ஓர் இனம் செய்துவிட்டு இருக் கிறது. தமிழர்கள் நாம் தாங்கிக் கொண்டிருக் கிறோம். அந்தப்படு கொலையை நிகழ்த்தி விட்டு அந்தப்படு கொலை நடக்கவில்லை என்று யாரெல்லாம் நாடகமாடினார்கள் என்பதை நாடு நன்றாக அறியும். இப்பிரச்சி னைக்கு யார் என்ன சொன்னார்கள்? என் பதை விடவும் என்ன செய்வார்கள்? என்பதை விடவும்  தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் என்ன சொன்னார்  என்ன செய்தார்  என்பதை உல கம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளை யில்  தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித் திருப்பதும், சட்டசபை யில் தீர்மானம் நிறை வேற்றியிருப்பதும் பாராட்டுக்குரியது. காங்கிரஸ்காரர்கள் படித்துக் கொண்டிருக் கிறார்கள் அதற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இறந்து போன ஒரு வரைத் தவிர 233 சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து நிறை வேற்றியிருக்கிறார்கள். அவர்கள் நிறைவேற்றியி ருக்கும் போது மத்திய அரசு நிறைவேற்ற வேண்டாமா? அந்த தீர் மானத்தை காங்கிரஸ் காரர்கள் இன்னும் படித்துக் கொண்டிருக் கிறார்கள்.
மூன்றரை லட்சம் தமி ழர்கள் ஒரே நேரத்தில் முள்வேலிக்குள் அடைக் கப்பட்டும், 40ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டும் இருக்கும் முள்ளி வாய்க்கால் படு கொலை என்பது உலகம் காணாத படுகொலை யாக, அதே நேரத்தில் ஈழத் தமிழ் மக்கள் யாரை நம்பியிருந்தார் களோ அவர்களே இன படுகொலைக்கு துணை நின்று இருப்பதும்  எந்த ளவுக்கு தமிழி னத்தை அழிக்க வேண்டும்  அசிங்கப்படுத்த வேண் டும் என்று இலங்கை அரசு மட்டுமல்ல, நம் இந்திய அரசும் செயல் பட்டிருப்பதுதான் வேத னைப்படக் கூடிய விச யம்.  குட்டிமணி, ஜெகன் பிரச்சினை நடந்த போதும், வெளிக்கடை சிறைப் பிரச்சினையின் போதும் ஒவ்வொரு முறையும் நாம் சொல்லி வந்திருக்கி றோம்.
ஆனால் நம்மு டைய இந்திய அரசு இதுவரை அது உள் நாட்டுப் பிரச்சினை என்றும், அந்த நாட் டின் இறையாண் மைப் பிரச்சினை என் றும் சொல்லி வந்தது. அங்கு நடந்த சம்பவங் களையும் மறைத்து வந்தார்கள். இலங்கை அரசாங்கம் மக்க ளைத் துன்புறுத்த வில்லை அங்கு சில போராட்டக் குழுக்க ளோடும், விடுதலைக் குழுக்களோடும்தான் மோதுகின்றது என்று சொன்தோடு அது நம் நட்பு நாடு, அதோடு இணக்கமான நட்பு கொள்ள வேண்டும் என்றது மட்டுமல் லாது அப்படி ஒரு படுகொலை நடக்க வில்லை என்றும் சொன்னது இந்திய அரசு. நமக்கு சமாதானம் சொல்ல மாபெரும் பொய்யைச் சொன்னது. இலங்கைக்கு இராணுவத்தனருக்கு பயிற்சிளித்து, பணமாக வும், பொருளுதவியாக வும், ராணுவ உதவியா கவும், ஆயுதங்களாகவும் நம் தமிழர்களை அழிக்க ஏராளமான உதவிகளைச் செய்தது இந்திய அரசு.
உச்சகட்டமாக போர் விதிமுறைகளை யெல்லாம் மீறி அவர்கள் நிர்க்கதியாய் நிற்கையில் போர்க்குற்றம் செய் வதற்கும் இந்தியாதான் பலவகையிலும் உதவிகள் செய்திருக்கிறது. முதல் தவணையாக ஆயிரம் கோடி ரூபாய்களைத் தந்ததோடு தமிழர்களை ஏமாற்றியது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் உள்பட அனைத்து நாடு களும் சீனா-ரஷ்யா தவிர அய்.நா. மன்றத்தில்  ராஜ பக்சே  மீது நட வடிக்கை எடுக்க கோரிக்கை விடுத் துள்ளன.
இலங்கை செய்த குற்றம் இப்போது வெளி யில் வந்து விட்டது. இந் தியா கேவலமான ஒரு நாடு என்ற நிலைக்கு ஆளாகிவிட்டது. இந்த நேரத்திலும்கூட இந்தியா அமைதியாக இருக்க லாமா? என்று கேள்வி எழுப்பினார். இந் நிகழ்ச் சியில் மாவட்ட செய லாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க செயலா ளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ்.இளங்கோ வன், ஊற்றங்கரை ப.க செயலாளர் சகாதேவன்,  மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இணைச் செயலாளர் அரங்க. ரவி, மாநில மகளிரணி பொரு ளாளர்  அகிலா, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகு மணி ,இந்திராகாந்தி, கவிஞர்.சுப்புலட்சுமி, மாவட்ட ப.க,பொறுப் பாளர் சித.வீரமணி, ஆனந்தன், மத்தூர் ஒன் றிய தலைவர் முரு கேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிட ராசன், பொதுக் குழு உறுப்பினர் வசந்தி கணேசன், காவேரி, முன் னால் மாவட்ட செய லாளர் பழ.பிரபு, சித. அருள், காளிதாஸ், கனகராஜ்,  திருப்பதி, வெற்றிகொண் டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி, சாமி. அரசி ளங்கோ, சி.சாமிநாதன், அண்ணா, அப்பாசாமி, செய்தியாளர் கோபால் துரை உள்ளிட்ட ஏரா ளமான திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, கந் திலி, ஊற்றங்கரை, மத்தூர் ஒன்றிய தோழர் கள் பங்கேற்றனர் இறு தியாக மாவட்ட மாண வரணி தலைவர் தமிழ் குடிமகன் நன்றி உரை யாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக