போட்டிபோட்டு குவிந்த விடுதலை சந்தாக்கள் சோலையார்பேட்டையில் தமிழர் தலைவரை அழைத்து வழங்க முடிவு

திருப்பத்தூர், ஜூலை 3- திருப்பத்தூர் மாவட்டத்தில் போட்டி போட்டு குவிந்த விடுதலை சந்தாக்கள். தமிழர் தலைவரை சோலையார்பேட் டைக்கு அழைத்து வழங்க முடிவெடுக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மத்தூரில் திருப்பத்தூர் மாவட்ட கழக இணை செயலாளர் அரங்க. ரவி இல்லத்தில் 27.6.2011 திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது
மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ வரவேற் புரையாற்றினார். மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம், மாநில ப.க.துணை தலைவர் அண்ணா.சரவணன், மாநில மாணவரணி துணை செயலாளர் சென்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக துணைப் பொது செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை பற்றியும் விடுதலை சந்தா சேர்ப்பின் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாவட்ட ப.க செயலாளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர் எம்.கே. எஸ். இளங்கோவன், ஊற்றங்கரை ப.க செயலாளர் ஆசிரியர்கள் சகா தேவன், மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இணை செயலாளர் அரங்க.ரவி, மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகுமணி, இந்திராகாந்தி, கவிஞர் சுப்புலட்சுமி, மாவட்ட ப.க, பொறுப்பாளர் சித.வீரமணி, ஆனந்தன், மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன், பெரியாரணி பயிற்றுநர் திராவிடராசன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி கணேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, புலவர் அண்ணாமலை, வையாபுரி, இரு.கிருட்டிணன் ஆகியோர் உரையாற்றினர்.
போட்டி போட்டு குவிந்த சந்தாக்கள்
ஒவ்வொரு ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து ரையாடல் கூட்டத்தில் பேச அழைத்த போது விடுதலைக்கு சந்தா அளிப்பதில் போட்டி ஏற்பட் டது. மத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஒரு ஊராட்சிக்கு ஒரு விடுதலை சந்தா வீதம் 24 ஊராட்சிக்கும் 24 விடுதலை சந்தா அளிப்பதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து ஊற்றங்கரை ஒன்றியத்தில் அண்ணா.அப்பாசாமி, சித.அருள், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஜே.எம்.பெருமாள், நரசிம்மன், திருப்பத்தூர் காளிதாஸ், ஆம்பூர் ஒன்றிய பொறுப்பாளர்களும் தங்கள் ஒன்றியத்தில் பெருமளவு சந்தா அளிப்பதாக உறுதி அளித்தனர். மாவட்ட தலைவர் திருப்பத்தூர் கே.சி.எழிலரசன் தனது பங்களிப்பாக 20 விடுதலை சந்தாக்களையும், 50 பெரியார் பிஞ்சு சந்தாக்களையும் பலத்த கைதட் டலுக்கிடையே தருவதாக அறிவித்தார். மேலும் 100 விடுதலை சந்தாக்களை ஜோலார்பேட்டையில் சேகரித்து தருவதாகவும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அவரது வாழ்விணையரும் மாநில மகளிரணி பொருளாளருமான அகிலா 10 விடுதலை சந்தாக்களையும் 50 பெரியார் பிஞ்சு சந்தாக்களையும் தருவதாக அறிவித்தார். இவர்களின் அன்பு செல்வனும் மண்டல மாணவரணி செயலா ளருமான சிற்றரசன் 10 விடுதலை சந்தாக்களை தருவதாக அறிவித்தார். இக்குடும்பத்தினை போலவே மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ அவரது வாழ் விணையர் மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா அவர்களும், மாநில ப.க.துணை தலைவர் அண்ணா. சரவணன் அவரது வாழ்விணையர் மகளிரணி பொறுப்பாளர் இந்திரா காந்தி, காளிதாஸ் அவரது வாழ்விணையர் கவிஞர் சுப்புலட்சுமி ஆகியோர் தல 10 விடுதலை சந்தாக்களை அளிப்பதாக அறி வித்தனர். புதிய கிளை கழகத்தில் விடுதலை சந்தா புதிதாக தொடங்கப்பட்ட அப்பி நாயக்கன் பட்டி கிளை கழகத்திற்கு சிவராஜ் முயற்சியால் 2 விடுதலை சந்தா வழங்கபட்டது. அவ்வாறே நொச்சிப்பட்டி கிளை கழகத்தின் சார்பில் பொன்முடி 3 விடுதலை சந்தா அளிப்பதாக அறிவித்தார். பொம்மிப்பட்டி கிளை கழகம் சார்பில் கி.ஆ.கோபாலன் 1 விடுதலை சந்தா அளிப்பதாக அறிவித்தார். இக்கூட்டத்தில், திருப்பதி, வெற்றிகொண்டான், வெங்கடேசன் உதயகுமார், ரமேசு, பழனிசாமி, சாமி. அரசிளங்கோ, சி.சாமிநாதன், அண்ணா, அப்பா சாமி, நிருபர் கோபால் துரை, உள்ளிட்ட ஏராள மான திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஊற்றங்கரை, மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர். குறிப்பாக மகளிரணி தோழியர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்
நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்ள் வருமாறு: 1. சீரிய செயல்வீரரும் சிறந்த மனிதநேய மிக்கவரும், மாவட்ட கழக செயலாளராக திறம் பட பணியாற்றியவருமான ஜோலார்பேட்டை மகேந்திரன் மறைவுக்கு இக் கூட்டம் தனது வீர வணக்கத்தை செலுத்துகிறது. 2. அறிவுலக பேராசான் தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து தமிழர்களின் கேடயமாக விளங்கி வரும் விடுதலை தமிழ் நாளேட்டினை நூலகங்களில் இருந்து தடை செய்த தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
கழக தோழர்கள், சமுக சிந்தனையாளர்கள், தமிழர் நலம் நாடுவோர் ஒன்றிணைந்து விடுதலை சந்தாக்களை குறைந்தது 500க்கும் மேல் சேர்த்து குறிப்பிட காலத்திற்குள் தலைமைக்கு சேர்ப்பது என இக் கூட்டம் முடிவு செய்கிறது 3. அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வழி செய்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வியாணையை தடுக்கும் வகையில் செயல்பட்டு, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி நலனை கருத்தில் கொள்ளாமல் விரோதமாய் செயல்படும் தமிழ் நாடு அரசினை இக் கூட்டம் கண்டிக்கிறது. மேலும் நீதிமன்ற வழி காட்டு தலின்படி அமைக்கப்பட்டுள்ள ஒன்பது பேர் குழுவில் ஆறு பேர் பார்பனர்களாகவும் கல்வி வியாபாரிகளான தனியார் பள்ளி நிர்வாகிகளாகவும் இருப்பது தமிழக மக்களிடையே பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய போக்கை உடனே மாற்றி கொள்ள இக் கூட்டம் கேட்டு கொள்கிறது. 4. பருவ மழை காரணமாக கிருட்டினகிரி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியை போக்கவும் கிருட்டினகிரி அணையின் உபரி நீரை ஆனந்தூர் கால்வாய் வழியாக கொட்டகுளம், செங்கழ்நீர் பட்டி, ரெட்டிப்பட்டி, வாணிப்பட்டி, காட்டுப் பட்டி, சூளகரை, கல்லாவி, ஒன்னகரை, கஞ்சனூர், கும்மனூர், கேரிகப்பள்ளி, படப்பள்ளி, வெங்கட தாம்பட்டி, ஊற்றங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு பாம்பாறு அணைக்கு சென்று சேர உரிய நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசை இக் கூட்டம் வலியுறுத்துகிறது. 5. ஆகஸ்ட் 13இல் நாகப்பட்டினத்தில் நடை பெறும் திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட் டிற்கு தனிப்பேருந்தில் மாணவர்களைப் பங்கேற்க செய்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
6. ஈழத்தமிழர்கள் பல இலட்சம் பேரை கொன்று குவித்த போர் குற்றவாளி கொடுங்கோலன் ராஜபக்சேவைக் கைதுசெய்து அனைத்துலக நீதி மன்றத்தில் தண்டனை பெற்று தர உலக நாடு களோடு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க இக் கூட்டம் கேட்டு கொள்கிறது. 7. கடந்த 2010-2011ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விழுகாட் டிலும், மதிப்பெண்கள் ஈட்டியதிலும் மன நிறைவு அளிக்கிறது. அதற்காக பாடுபட்ட ஆசிரிய பெரு மக்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர்களை இக்கூட்டம் மனதார பாராட்டி மகிழ்கிறது.
இந்நிலை மேலும் தொடர உரியவர்களை இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது 8. கழக தோழர்கள், இளைஞர்களை, மாணவர் களை திரட்டி ஒன்றியந்தோறும் பயிற்சி முகாம் களை நடத்துவது எனவும் முதற்கட்டமாக சூள கரையில் ஜூலை 9ஆம் தேதியும், ஜூலை 17ஆம் தேதி நடுபட்டியிலும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கபடுகிறது. 9. இனமான ஏடு விடுதலை சந்தா வழங்கும் நிகழ்வினை ஜோலார்பேட்டையில் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குமாறு தமிழர் தலைவரை இக்கூட் டம் கேட்டுக்கொள்கிறது இறுதியாக மாவட்ட மாணவரணி தலைவர் தமிழ் குடிமகன் நன்றி கூறினா



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக