புதன், 21 டிசம்பர், 2011

விடுதலை சந்தா சேர்ப்பில்

          
திருப்பம் தந்த திருப்பத்தூர் !முதல் தவணையாக ரூ 10 இலட்சம் !
                              கழக பொது செயலாளர் .கலி .பூங்குன்றன் அவர்களிடம் வழங்கப்பட்டது
*தமிழர் தலைவரின் 79 ஆவது பிறந்த நாளையொட்டி 79 விடுதலை ஆயுள் சந்தாக்கள் !
*தமிழர் தலைவரின் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணி நிறைவையொட்டி 500 ஆண்டு சந்தாக்கள் !
திருப்பத்தூர் 21
விடுதலை ஆசிரியராக 50 ஆம் ஆண்டில் முத்திரை பதித்த நமது கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி காட்டும் வகையில் 50000 சந்தாக்களை பரிசாக வழங்குவது என பொதுக் குழுவில் எடுத்த முடிவின் படி  திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் திரட்டப்பட்ட விடுதலை சந்தாக்களை ஒப்படைக்கும் கூட்டம் திசம்பர் திங்கள் 21 ஆம் தேதி புதன் கிழமை மாலை 6 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் நடைப்பெற்றது
                         திராவிடர் கழக பொதுச்செயலாளர்.கவிஞர் .கலி.பூங்குன்றன்  தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி.எழிலரசன் ,வேலூர் மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி ,மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் ,மாவட்ட செயலாளர் வி.ஜி .இளங்கோ,மாநில மகளிரணி பொருளாளர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
திருப்பத்தூர் ஒன்றிய கழகம் 
திருப்பத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் திருப்பத்தூர் நகரின் வணிக பெருமக்கள் ,கழக ஆதரவாளர்கள் ,கிருத்துவ அமைப்பினை சார்ந்த நண்பர்கள் ,ரோட்டரி அமைப்பினை சார்ந்த நண்பர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது .திருப்பத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக 49 ஆயுள்  சந்தாக்களும் 123 ஆண்டு சந்தாக்களும் சேகரித்து அதற்க்காக தொகை ரூபாய் 5,௦௦,௦௦௦த்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ,மாவட்ட இளைஞ்சரணி  துணை செயலாளர் பழனிச்சாமி ,புலவர் அண்ணாமலை ,ஆட்டோ பாண்டியன் ,அன்பழகன் ,இரா கனகராஜ் ,அக்ரி.அரவிந்தன் ,திருப்பத்தூர் நகர தலைவர் காளிதாஸ் கே.கே.சி கமலா அம்மாள் ,மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா,நீலாயதாட்சினி  ஆகியோர் அளித்தனர்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
கடந்த ஓராண்டாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ,அதன் பொறுப்பாளர்கள் அனைவரும் மனமகிழ்ந்து ஆயுள் சந்தா அளித்தனர் .மேலும் ஊற்றங்கரையில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் விடுதலைக்கு சந்தா அளித்தன 
வணிக பெருமக்கள் தமிழ் சங்க உறுப்பினர்கள் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது.ஊற்றங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் சார்பில் 2 ஆயுள் சந்தாவும் ,அதியமான் கல்வி நிறுவனத்தின் சார்பில் 3 ஆயுள் சந்தாவும் சென்னைசங்கர்  IAS அகாடமி சார்பில் 1 ஆயுள் சந்தாவும் பெறப்பட்டது .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் முதற்கட்டமாக 12 ஆயுள் சந்தாவினையும் 106 ஆண்டு சந்தாவினையும் சேகரித்து அதற்க்கான தொகை ரூபாய் 2 ,08 ,600  ய் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி,வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு .அமைப்பாளர் பழ .வெங்கடாசலம்  வழங்கினர்
மத்தூர் ஒன்றிய கழகம்
மத்தூர்
ஒன்றிய கழகம் சார்பில் அரசு ஊழியர்கள்,ஆசிரிய பெருமக்கள்  ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது.மகளிரணி சார்பில் சிறப்பாக சந்தா பெற்றுத் தந்த மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் இந்திரா காந்தி பாராட்டப்பட்டார்  மத்தூர் ஒன்றிய கழக சார்பில் முதற்கட்டமாக 6ஆயுள் சந்தாவும் ,80 ஆண்டு சந்தா வும் சேகரிக்கப் பட்டு அதற்குரிய தொகையாக ரூபாய் 1 ,80 ,௦௦௦ மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மகளிர் பாசறை பொறுப்பாளர் இந்திரா காந்தி, மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன்,கே.டி.மணி , திருப்பதி ஆகியோர் வழங்கினர்
சோலையார்பேட்டை ஒன்றிய கழகம்
சோலையார் பேட்டை ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக 12 ஆயுள் சந்தாவும் 70 ஆண்டு சந்தாவும் , அரசு ஊழியர்கள்,ஆசிரிய பெருமக்கள்  ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் சேகரிக்கப்பட்டு அதற்க்கான தொகையாக ரூபாய் 2 ,௦௦,௦௦௦ த்தையும் ஆம்பூர் ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 1 ஆயுள் 5 ஆண்டு சந்தாவிற்கான  தொகை ரூபாய் 16000 த்தையும்  மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மாவட்ட பக தலைவர் சி.தமிழ்ச்செல்வன் ,சோலையார்பேட்டை பெரியார் தாசன் ,தங்க .அசோகன் ,இராசேந்திரன் ,க.மதியழகன் ஆகியோர் வழங்கினர்
,குவிந்த சந்தாக்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களும் போட்டி போட்டுக் கொண்டு சந்தா சேகரிப்பில்  ஈடுபட்டன .அனைத்து ஒன்றியங்களில் இருந்து திரட்டப்பட்ட ஆண்டு ,ஆயுள் சந்தாக்களை பட்டியலிட்டு
முதற்கட்டமாக மொத்தம் 79 ஆயுள் சந்தா 384 ஆண்டு சந்தாவிற்கான முகவரி பட்டியலையும் அதற்க்கான காசோலை ரூபாய் 10 ,௦௦,000 த்தை முதற்கட்டமாக கழக பொதுச் செயலாளர் கவிஞர் .கலி .பூங்குன்றன் அவர்களிடம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் .கே.சி எழிலரசன் வழங்கினார் .மேலும் அய்யா நினைவு நாள் அன்று விழா மேடையில் இப்போது அளித்த சந்தாவினையும் சேர்த்து தமிழர் தலைவர் அவர்களின் 79 ஆவது  பிறந்த நாளை குறிக்கும் வகையில் 79 ஆயுள் சந்தாவினையும் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணி நிறைவை குறிப்பிடும் வகையில் 500 ஆண்டு சந்தாவினை அளிப்பதாக உறுதி அளித்தார்

வியாழன், 1 டிசம்பர், 2011

79 அகவை காணும் தமிழர் தலைவர் வாழ்கவே !




இவரன்றோ
தமிழர் தலைவர்
வேறு
எவருண்டு
சொல்வாய்; தமிழா!
பத்து
அகவையிலிருந்தே
இவர்
ஆற்றுகிற
ஒரே பணி
எது சொல்; தமிழா?
தலைவர்
வீரமணி செய்கின்ற பணியெல்லாம்
பெரியார் பணியெனப்
பகைவனும்
சொல்வானே; தமிழா!
ஆசை, ஆசை
அதிகம்
ஒரு  நூறாண்டு
வீரமணி
வாழ வேண்டும்; ஆசை!
பொன்விழா
கண்டவருக்கு
மீண்டுமொரு பவளவிழா
புரிகிறதா தமிழா
உனக்கா புரியாததா...?
அறுபத்து
ஒன்பதாண்டு
பொது வாழ்வில்
ஆசிரியராய்ப்
பணியாற்றும்,
50 ஆண்டு
பணிநிறைவு பவள விழா

ஒரு நினைவூட்டல்
விடுதலையை
நிறுத்திட
எண்ணிய பெரியாருக்கு
நினைவில்
தோன்றியவர் வீரமணி!
இது இவரால் முடியும்
இவரால்
முடியாதது
எவராலும், முடியாது
ஆம்
அய்யா
ஒரு தொலை நோக்காளர், அல்லவா!
தொழிலில்
பிரபலம்
நல்ல வருமானம்
வருகிற காலம்
வீரமணியே வருக விடுதலை
ஆசிரியராக
பொறுப்பேற்க வருவீர்
வழங்குகிறேன்; ஊதியம்
ஊதியம்
வாங்கியா
விடுதலையில்
ஊழியம் செய்வது?
தலைவருக்குக்
குழப்பம்
அம்மா
மோகனாவோடு
ஒரு கலந்தாய்வு
இன்றுவரை
ஊதியம்
பெறாத, ஊழியன்
50
ஆண்டு
ஆசிரியர் பணி
அண்ணாவுக்கு
அழுத்தமா....?
அவசரமா.....?
அண்ணா நீண்ட
காலம்
வாழ்ந்திருந்தால்
கூறியிருப்பார்
தமிழருக்கு
இதயக்கனி; வீரமணியென்றே!
வீரமணியின்
விடுதலை ஆசிரியர் பணி
கின்னஸிலும்
இடம் பெறலாம்
பத்திலிருந்து
பகுத்தறிவைப்
பரப்புகிற
அறிவி, விருந்து
நோயாளித்
தமிழனுக்கு
உயிர் காக்கும், மாமருந்து
ஆகவே தமிழர்
தலைவரின்
பிறந்தநாள் சூளுரை
தோழா நீ
ஏற்கவேண்டும் ஏற்புரை
50 ஆயிரத்துக்குப் பதிலாக
79
ஆயிரம் சந்தாக்கள்
வழங்கினால் உனக்குச்
சரித்திரம், வழங்கிடும்; பாராட்டுரை!
நாட்கள்
குறைவு மிகக்குறைவு
தமிழா
நீ
கடைசி நேரக் கதாநாயகன்
புறப்படு
தமிழா புறப்படு
இப்போதே
இன்றே நீ புறப்படு
வீடுதோறும்
சென்று வா...!
வீதியெங்கும்
விடுதலைக்குச் சந்தா கேள்
உற்றார் உறவினர்
நண்பர்கள்
யாரையும், விட்டுவிடாதே!
திருமணமா...?
காதுகுத்தா....?
கருமாதியா...?
கணக்கைத் திற!
விடுதலைக்கு
மொய் பெய்து
சந்தாக்களைக் குவித்திடு
தமிழா
நீ
செயல்படும் வேகத்தால்
அக்ரகார ஆட்சிக்கு
ஏற்படும், மூக்கறுப்பு!
இனி
பகைவர்
குலை நடுங்கும்
தமிழா
உன்
மூச்சே, விடுதலை
இருட்டுத்
தமிழனின்
இல்லத்தில்
விடுதலை, விளங்கட்டும்.
முயன்றுபார், தமிழா
நீ முறையாக
முயற்சித்தால்
ஒரு இலட்சத்தைத்
தாண்டும், விடுதலை சந்தா!
நீ
இருக்காதே இனி சும்மா
தொண்டறம் மாறாத
தலைவருக்குப்
பிறந்தநாள் காணிக்கை
இதுதான்; தமிழா!
புறப்படு, தமிழா!
புறப்படு...!


வெள்ளி, 7 அக்டோபர், 2011

அந்தோ ! கதிரம்பட்டி தீ.பொன்னுசாமி மறைந்தாரே !

திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் கதிரம்பட்டியை சார்ந்த மேனாள் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக தலைவரும் ,மேனாள் தருமபுரி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும் முன்னால் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் கதிரம்பட்டி .தீ .பொன்னுசாமி அவர்கள் இன்று பிற்பகல் 1 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் மானமிகு அய்யா தீ.பொன்னுசாமி அவர்கள் 1983 டிசம்பர் 17,18  மதுரையில் நடைபெற்ற ஈழ விடுதலை மாநாட்டிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 7 பிரச்சார படைகள் அமைக்க பட்டன .கிருடினகிரியில் இருந்து புறப்பட்ட பிரசார படைக்கு தலைமை ஏற்றவர் .அவர் தலைமையில் 20 பேர் கிருடினகிரியில் இருந்து நடந்தே எல்லா ஊர்களிலும் பிரச்சாரம் செய்து மாநாட்டு திடலை அடைந்தது .1970 ஆம் ஆண்டு திமுக சார்பில் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார் ஆயினும் அரசியலை வெறுத்து சமுக புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தில் இணைத்து கொண்டு 1971 முதல் திராவிடர் கழகத்தின் முழு நேர தொண்டராய் உழைத்தார் திராவிடர் கழகம் அறிவித்த எல்லா போராட்டங்களிலும் அவர் பங்கேற்றுள்ளார் .குறிப்பாக எம்.ஜி.ஆர் .ஆட்சியில் வருமான வரம்பு கொழுத்தும் போரரட்டம் கருவறை நுழைவு போராட்டம் ,69 % சதவித இட ஒதுக்கிட்டுக்கு எதிரான உச்ச நீதிபதிகளின் உருவ பொம்மை கொளுத்தும் போராட்டம் என கழகம் அறிவித்த அணைத்து போரட்டகளிலும் பெருமளவு தோழர்களை திரட்டிய அவரின் பங்கு சிறப்பானது .தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் மேல் அவர் கொண்ட அன்பும் மதிப்பும் அளவிடற்கரியது .திருப்பத்தூரில் நடந்த திராவிடர் இன எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டு பெரியார் பெருந்தொண்டர் என விருது வழங்க பட்டவர் .ஊற்றங்கரையில் நடந்த விடுதலை வாசகர் வட்டத்தால் திராவிடர் கழக பொது  செயலாளர் மானமிகு அய்யா அறிவுக்கரசால் பாராட்டப் பட்டவர் .தன் குடும்பத்தில் எல்லா திருமணத்தையும் சுயமரியாதை திருமணமாக நடத்தியவர் .தமிழர் தலைவர் தலைமையில் தன் மகளின் திருமணத்தை கழக மாநாடு போல் அந்த சின்ன கிராமத்தில் நடத்தியவர் .கழகம் நடத்திய போராடகளில் பங்கேற்று சேலம் ,வேலூர் என பல சிறை ஏகியவர்.அவருக்கு வீரவணக்கத்தை செலுத்வதுடன் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்க்கும் ,கழக தோழர்கட்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறோம்
---திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்

வியாழன், 22 செப்டம்பர், 2011

திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் திரும்பிய திக்கெல்லாம் திருவிழா கோலம்!








  
                      அய்யா பிறந்த நாள் கொண்டாடாத கிராமங்களே இல்லை !
அணைத்து கட்சியினரும் பங்கேற்க உணர்ச்சிபூர்வமான பிறந்தநாள் கொண்டாட்டம் !

* 48  க்கும் மேற்பட்ட வாகனங்களில் 300  தோழர்கள் அணிவகுப்பு
*60  ஆட்டோக்களில் 130  மகளிரணியினர் பங்கேற்ப்பு *312 இடங்களில் அய்யா படத்திற்கு மாலை * 13  இடங்களில் அய்யா சிலைக்கு மாலை
*50 இடங்களில் கழக கொடியேற்றம் *5 இடங்களில் தகவல் பலகை புதுப்பிப்பு 
* மனநல காப்பகம் ,மாற்று திறனாளிகளுக்கு சீருடை ,உணவு,உபகரணங்கள் *பள்ளிகளுக்கு அய்யா படம் என திருப்பத்துரை குலுக்கியது மாவட்டம் முழுதும் இதே நிகழ்வுகள் . 

                  திருப்பத்தூர் கழக மாவட்டம் அறிவாசான் தந்தை பெரியார் 133 வது  பிறந்த நாளை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடியது .அய்யா பிறந்த நாள்கொண்டாட்டம் அதிகாலை 5 மணிக்குதிருப்பத்தூரில்  ஆரம்பித்து இரவு 9 மணிக்கு சோலையார் பேட்டை இரயில் நிலையம் அய்யா சிலை அருகே  நிறைவுற்றது.
மாவட்ட கழக 
தோழர்கள்   48   க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் 300க்கும் மேற்பட்ட   கழக தோழர்கள்   மாவட்டம் முழுவதும் பயணம் செய்து எல்லா கிராமங்களிலும் மாவட்ட கழகத்தால் அழகுற அமைக்கபட்டிருந்த  அய்யா படத்திற்கும், மாவட்ட கழகத்தால் தங்க வண்ண பூச்சு செய்யப்பட்ட மாவட்டம் முழுதும் உள்ள அய்யா சிலைகளுக்கும்  மாலை அணிவிக்க  பயணம் செய்ய தோழர்கள் அதிகாலை முதலே திருப்பத்தூரில் குழுமினர் .
மகளிரணியினர் தனி அணியாக 
60 ஆட்டோக்களில் 130 மேற்பட்டோர்   நகர்பகுதியில் சுமார் 90 இடங்களில் மக்கள் பார்வையில் படுமாறு அழகுற அமைக்கப்பட்ட அய்யா படத்திற்கு மாலை   இட்டனர். முதல் நிகழ்வாக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் இல்லத்தில் இருந்து அய்யா படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றி
இரு அணியினரும் தந்தை பெரியார் வாழ்க !என்கிற வாழ்த்து முழக்கம் விண்அதிர  தோழர்களின் ஒலிமுழக்கத்துடன்  பட்டாசு   சத்தம் போட்டி இட உற்சாகமாக புறப்பட்டனர் .  மாவட்ட முழுவதும் தந்தை படங்கள்  தட்டி களில்   ஒட்டப்பட்டு மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன .
          இந் நிகழ்வை காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் மானமிகு.கணேஷ்மல் தொடங்கிவைத்தார் .இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கினார்.மண்டல செயலர் பழ.வெங்கடாசலம் ,மாநிலபக துணைத்தலைவர் அண்ணா .சரவணன் ,மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ,கே.கே.சி .கமலாம்மாள், மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளர் தணிகை .ஜி.கருணாநிதி, மாவட்ட பக தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பக செயலர் பே.இரா.கனகராஜி ,மாவட்ட பக அமைப்பாளர் சித.வீரமணி ,மாவட்ட இணை செயலாளர் அரங்க.இரவி ,மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன் ,மாவட்ட அமைப்பாளர் மா.சி.பாலன் ,மாவட்ட இளைஞரணி தலைவர் ந.கமலநாதன் ,மாவட்ட 
இளைஞரணி  செயலாளர் க.மதியழகன் ,மாவட்ட  இளைஞரணிஅமைப்பாளர் வ.ஆறுமுகம் ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,மண்டல மாணவரணி செயலாளர் எ .சிற்றரசன் ,மாணவரணி தலைவர் கு.தமிழ் குடி மகன் ,மாணவரணி செயலாளர் கு.அருண் ,மாவட்ட பக துணைத் தலைவர் இரா .பழனி ,நகர செயலர் எ .டி.ஜி.சித்தார்த்தன் ,நகர தலைவர் து.காளிதாஸ் ,பெரியார் பெருந்தொண்டர் பூங்காவனம் ,புலவர்  அண்ணாமலை ,ஜெ.எம்.பி.பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இவ் அணியினர் திருப்பத்தூர் நகரத்தில் பல இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடிகளை ஏற்றி வேப்பலம் பட்டி ,விஷமங்கலம்,குரும்பேறி ,பேராம்பட்டு உள்ளிட்ட 20 க்கும் மேற்ப்பட்ட திருபத்தூர் ஒன்றிய கிராமங்களில் அணைத்து கட்சியினரையும் அழைத்து அய்யா படத்திற்கு மாலை அணிவித்து பிறந்த நாள் விழா கொண்டாடி ஊற்றங்கரை ஒன்றிய பகுதி நோக்கி விரைந்தது .
                  மகளிரணியினர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,மாநில மகளிர் பாசறை  பொருளாளருமான எ.அகிலா அவர்கள் தலைமையில் மகளிரணி மாவட்ட  செயலாளர் கவிதா ,மகளிர் பாசறை அமைப்பாளர் நா.சுப்புலட்சுமி ,மகளிர் பாசறை மாவட்ட செயலர் மு.இந்திராகாந்தி ,மாநில பெரியாரணி பயிற்றுனர் வெ.அழகுமணி ,யசோதா மகேந்திரன் ,மாவட்ட அமைப்பாளர் விஜயா அன்பழகன் இ..வெண்ணிலா ,வித்யா பிரபு ,லட்சுமி அசோகன் சாந்தி தமிழ்ச்செல்வன் ,சாந்தி வீரமணி ,பானுமதி அருள் ஜான்சி ராணி ரவி ,சாந்தி அன்பு , தனலட்சுமி கனகராஜ் ,மு.உண்ணாமலை ,செல்வி வெங்கடாசலம் பிரியா ஜெயரட்சகன் ,சங்கீதா சிவக்குமார் ,சௌந்தரி ராதா கிருஷ்ணன் ,சுதா திராவிடன் ,செல்வராணி சுகுமார் ,மாலா வேலு ,வனிதா கோவிந்தன் ,முருகம்மாள் அப்பாசாமி ,முருகம்மாள் கோவிந்தராஜ் ,சுலோச்சனா  மாணிக்கம் ,அம்பிகா ராஜேந்திரன் ,மகாலட்சுமி ,மு.ஈரோடு,மங்கலாதேவி பழனி ,சுஜாதா பெரியாதாசன்,தேவிவேங்கடேசன் ,சுமதிவேங்கடேசன் ,மா,புவனேஸ்வரி உள்ளிட்ட 130  மகளிரணியினர் அய்யா உருவம் பதித்த டிஜிட்டல் பேனர் தாங்கிய கழக கோடி உடன்     60  ஆட்டோக்களில் நகரத்தில் 90 இடங்களில் அமைக்கப்பட்ட அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மன நல காப்பகத்திற்கு உணவு மற்றும் சீருடை வழகினர். அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரனகள் வழங்கினர் .சாலையோர பூங்கா திறந்து மரக்கன்றுகள் நட்டனர்
                       முன்னதாக ஊற்றங்கரை ஒன்றியத்தை வந்தடைந்த மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் தலைமையிலான வாகன அணியினை ஊற்றங்கரை ஒன்றிய எல்லை ஆண்டியூரில் ஆசிர்யர காந்தன் ,கம்யுனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ஆசிரியர் வரதராசன் ,ஊற்றங்கரை நகர பக பொறுப்பாளர் இரா .பழனி ,கி,ஆ,கோபாலன் ,அண்ணா..அப்பாசாமி சித.அருள்.,இர.அன்பு,மாரம்பட்டி .இரவி உள்ளிட்ட கழக தோழர்கள்   மாவட்ட திமுக துணை செயலாளர் ராஜா உள்ளிட்ட அணைத்து கட்சி பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.
                 
மகனூர் பட்டியில்    வட அமெரிக்க தமிழ்ச்சங்க பொறுப்பாளர் பெரியார் தொண்டர் மானமிகு கு. தண்டபாணி இல்லம் முன்பாக அவரது மாமா  சு .வரதராசுலு  அக்காள் கு.செய லட்சுமி  ஊர் பொதுமக்கள்   கழக தோழர்களை அன்புடன் வரவேற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்கள் .பெரி யதள்ளபாடி ,சிங்காரபேட்டை,மிட்டபள்ளி ,பம்பாறு அணை அம்பேத்கார் நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து ஊற்றங்கரை நகரை வந்தடைந்தது. ஊற்றங்கரை நகரில் சுமார் 10 அய்யா படத்திற்கு மாலை அணிவிக்க பட்டது .ஊற்றங்கரை நகரின் புகழ் பெற்ற கல்வி நிலையமான வித்யாமந்திர் நிறுவனத்தின் நிர்வாகியும் தாளாளரும் விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலருமான   திரு.வே.சந்திரசேகரன் நிறுவனத்தின் முன்பாக அமைக்கப்பட்ட அய்யா படத்திற்கு தோழர்கள் வாழ்த்தொலி முழங்க மாலையிட்டார் .ஊற்றங்கரை அரசு மேனிலை பள்ளிக்கு அய்யா படம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
                         ஊற்றங்கரை நகரில் மைய பகுதியில் அமைக்க பட்டுள்ள தந்தை பெரியார் சிலை தங்க வர்ண பூச்சுசெயப் பட்டு வண்ண விளக்குகளால் பந்தல் முழுமையும் அழகுற அமைகபட்டிருந்தது.திமுக நகர செயலாளர் பாபுசிவகுமார்,காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் திருநாதன் ,விடுதலை  வாசகர் வட்ட தலைவர்தணிகை ஜி கருணாநிதி ,இர.திருநாவுகரசு ,ரஜினிசங்கர் ,விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் அசோகன் உள்ளிட்ட எராளமான அணைத்து கட்சி பிரமுகர்கள் மாலையிட்டனர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் பற்றாசு   சப்தமும் தோழர்களின் வாழ்தொளியும் போட்டியிட கழக கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர்அப்பி நாயக்கன்பட்டி, பொம்பட்டி, நொச்சிப்பட்டி, மண்ணாடிபட்டி,  கோணப்பட்டி,பெருமாள் நாயகன் பட்டி ,உள்ளிட்ட பல இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து கல்லாவி வந்தடைந்தது . மேலும் வீரியம்பட்டி ,படபள்ளி பெரியார் நகர்,  சாமல்பட்டி ,அனுமந்தீர்த்தம் அழகுதமிழ் ,பத்மா, இல்லம் .கொட்டரபட்டி ,புங்கனை, கொரட்டி, நாய்கனூர்.குமாரம்பட்டி, தோரனம்பதி, கதவனி, காரப்பட்டு , கருமாண்டபதி, ஊமையனூர், உப்பரபட்டி, கெங்கபெரம்பட்டி,கீழ்குப்பம், மூங்கிலேரி.   ஆகிய இடங்களில் படங்களுக்கு மாலை அணிவிகபட்டது .
                        மரு.சுப்பிரமணி ,வேடியப்பன் ,காவேரி, ஒன்றிய தலைவர் மாறன் .இரவிச்சந்திரன்  உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் வரவேற்க அங்கு அழகுற  தங்க வண்ண பூச்சு செய்ய பட்டு ஒலி  பெருக்கிகள் கட்டப்பட்டு அமைக்கபட்டிருந்த அய்யா சிலைக்கு மாலை அணிவிக்க பட்டது .பின்னர் கல்லாவி மேட்டுதெருவில் மறைந்த மாவட்ட இணை செயலாளர் அரங்க.இரவி அவர்களின் தந்தையார் மறைவுக்கு மாவட்ட கழகம் சார்பில் இறுதி மரியாதை செய்த பின்னர்  காட்டுப்பட்டி,சூலகரை, பொடர் ,ஒலைபட்டி, போச்சம்பள்ளி, களர்பதி, சமத்துவபுரம் ,அண்ணாநகர், செட்டியப்பநகர்   உள்ளிட்ட எராளமான ஊர்களில் அய்யா படம் திறக்கப் பட்டு கழக கொடி ஏற்றப்பட்டது அதன் பின்னர் மத்தூர்  வந்தடைந்தது . மேலும் கதிரம்பட்டி, வீரனகுப்பம், தொட்டம்பட்டி,
ஆகிய இடங்களில் படங்களுக்கு மாலை அணிவிகபட்டது .
                     மத்தூர் நகரில் தங்க வண்ண பூச்சு கொண்டு வண்ண ஒளி விளக்குகளால் அய்யா சிலை அலங்கரிக்க பட்டிருந்தது .வாகன அணியினை வரவேற்ற மத்தூர் ஒன்றிய தலைவரும் ,திமுக பொறுப்பாளருமான பொன்.குணசேகரன் உள்ளிட்ட அணைத்து கட்சி பொறுப்பாளர்கள் அய்யா சிலைக்கு மாலை அணிவித்தனர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் கழக கொடியை ஏற்றினார்  மத்தூர் நகரில் பல இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது கழக கொடி ஏற்றப்பட்டது .பின்னர் கன்னண்டஅள்ளி, தர்மன் தோட்டம் , எகிலேரியன்   கொட்டாய்,  நடுப்பட்டு ,பாண்டவர் குட்டை ,ஆம்பல்லி,     கேஜல்நாயக்கன் பட்டி ,கந்திலி, சுந்தரம்பள்ளி , நத்தம்,காகங்கரை, உள்ளிட்ட 15  க்கும் மேற்பட்ட இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில்  திருப்பத்துரைவந்தடைதது        
                  திருப்பத்தூர் தாலுக்காஅலுவலகம் அருகே இருந்து அய்யா பிறந்த நாள் விழா பேரணி புறப்பட்டது .
வண்ண விளக்குகள் ,மலர்களால் அலகரிக்கப்பட்ட டிராக்டரில் அய்யா படம் அமைக்கப்பட்டு அய்யா பிறந்த நாள் விழா பேரணியை முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்    டி. கே.இராஜா அய்யா சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிவைத்தார் காமராஜ் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையின் தலைவர் கணேஷ்மல் ,திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் அண்ணாதுரை,கண்ணதாசன்  மதிமுக ,அச்சக உரிமையாளர் சங்க தலைவர் பரந்தாமன் ,வர்த்தகர் சங்க தலைவர் குட்டி ,விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட அணைத்து கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்க பெரியார் பிஞ்சுகள் ,மகளிரணியினர் ,தோழர்கள் என அனைவரின் ஒலி முழக்கங்களுடன்  பாண்டுவாத்தியம் முழங்க 1  கிலோ மீட்டர் நீல  ஊர்வலம் திருப்பத்தூரில் வலம் வந்தது .    ஊர்வலத்தால் திருப்பத்தூர் குழுங்கியது .பொதுமக்கள் அரசியல் கட்சிகளால் கூட முடியாத ஒன்று இவர்களால் எப்படி சாத்தியம் என வியப்படைந்தனர் .ஊர்வலம் பேருந்து நிலையம் வி.பி.சிங் மாளிகை அருகே உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்த பின் சரியாக மாலை 5 மணி அளவில் அனைவருக்கும் மதிய விருந்து பிரியாணி வழங்க பட்டது .
                            மதிய உணவிற்கு பிறகு சோலையார் பேட்டை ஒன்றியத்திற்கு புறப்பட்ட தோழர்களின் வாகனங்கள் சுமார் 1  1 /2 கிலோ மீட்டர் தூரம் நீண்டு இருந்தது .நெருக்கமான இரண்டு கிராமம் என்றால் முதல் வாகனம் ஒரு கிராமத்திலும் கடைசி வாகனம் அடுத்த கிராமத்திலும் இருந்தது .பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புடன் கொண்டாடப் படுவதை கண்டு பொது மக்களும் அணைத்து கட்சியினரும் ஆச்சரியத்தில் மூழ்கி போயினர் .சோலையார் பேட்டை ஒன்றியத்தில் அணைத்து பெரியார் இல்லங்களிலும் அய்யா படம் அழகுற அமைக்கப்பட்டு கழக கொடி புதிதாக ஏற்றப்பட்டு வண்ண வண்ண கோலங்களால் வாசல் அலங்கரிகபட்டு வீடு முழுவதும் வண்ண ஒளி(சீரியல்)விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது .தாமலேரி முத்தூர், மாநாகம் கடை, கட்டாரி, வி . எம்.வட்டம், அம்மை அப்பன் நகர்,வாலாட்டி யூர், மணி தெரு, அண்ணாதுரை கடை, ஒ. எச் .அலுவலகம், நித்ய மளிகை ,பால்டிப்போ, கே.கே.சி. மாளிகை, கடைதெரு,கமல் கடை, தோக்கியம், சம த்துவ     புரம் ,பெரியகரம், பாச்சல், மூகநூர், அச்சமங்கலம், புள்ளநூர், சி. கே. ஆசிரமம் ,சாமுடி வட்டம், ஜே.எம். பெருமாள் இல்லம். நரசிம்மன் இல்லம், கோடி
யூர், கருப்புக்கொடி இல்லம், தமிழ்செல்வன் இல்லம் ,தங்க அசோகன் இல்லம், இடையாம்பேட்டை,பார்சம்பேட்டை,கோடியூர்,சோலையார் பேட்டை நகரம் உள்ளிட்ட  30 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்த பின் சோலையார் பேட்டை ரயில் நிலையம் அருகே வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அய்யா சிலைக்கு மாலை அணிவித்தனர்.இப் பிறந்த நாள் கொண்டடதிற்கு உதவிய அனைவர்க்கும் மாவட்ட தலைவர் கே,சி.எழிலரசன்
ஆடை அணிவித்து  பாராட்டி நன்றி சொல்ல விழா இனிதே நிறை வுற்றது.  இதை போல ஆம்பூர்,  வீரகல், சோமலாபுரம், சான்றோற்குப்பம், எ. கஸ்பா, மாங்குளம்,பூ கடை,நாற்றம் பள்ளி ,ஆலங்காயம், ஆண்டி யூர் ,மிட்டூர்,
உள்ளிட்ட  30 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்தனர்.
           
மாவட்ட தலைவர் கே,சி.எழிலரசன்  இல்லத்தில் இரவு 9 .30  மணிக்கு மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும்  ஒன்று கூடி  கழக  சார்பில் தந்தை பெரியார்   பிறந்த விழாவிற்காக மிக சிறப்பான அளவில் ஏற்ப்பாடு செய்து ஆக்கமும் .ஊக்கமும் ,பொருளும் தந்து உதவிய மாவட்ட தலைவர் எழிலரசன் அவர்களுக்கு மண்டல செயலர் பழ. வெங்கடாசலம்,  பழ. பிரபு,  அண்ணா சரவணன், வி. ஜி .இளங்கோ. நன்றி தெரிவித்து  உரை ஆற்றி   சால்வை அணிவிக்கப் பட்டது . விழாவிற்கான 330 மாலைகளும் மாவட்ட செயலாளர் மானமிகு , வி.ஜி.இளங்கோ,ம.கவிதா ஆகியோர்  வழங்கினர்.  மேலும்  ரூ 5000 மாவட்ட கழகத்திற்கு மாநில பக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் வழங்கினார்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

கு .தமிழ்குடிமகன் -கே.அன்புநிலா வாழ்விணை ஏற்பு விழா!


கொள்கை பிரச்சாரவிழாவாக நடந்தது

ஊற்றங்கரை ஒன்றியம் சுளகரை கிராமம்   ஆ.குப்பன் -ஜெயலட்சுமி ஆகியோரது மகனும் திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி தலைவருமான கு.தமிழ்குடிமகன் செ.கேசவன் ,ஜெயாஆகியோரது மகள் கே .அன்பு நிலா ஆகியோரது  வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா ஊற்றங்கரை இந்திரா நகர் சுப்பிரமணிய   திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற் றது. திருப்பத்தூர் மாவட்ட இணை செயலாளர் அரங்க.இரவி  வரவேற்புரையாற்ற வேலூர்  மண்டல செய லாளர் பழ.வெங்கடாசலம்  தலைமையேற்க மாநில பக துணை  தலைவர் அண்ணா .சரவணன் , மாவட்ட tசெயலாளர் வி.ஜி.இளங்கோ  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணமக் களுக்குஉறுதி மொழியை எடுத்துச் சொல்லி மணவிழாவை நடத்தி வைத்த மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் சுய மரியாதை திருமணத் தின் சிறப்புகளையும் தமிழர்கள் இன உணர் வாளர்களாக விளங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி
தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு _ மத எதிர்ப்பு, சாஸ்திர புராணங்கள் எரிப்பு என்பதே தமிழர்களின் இன இழிவு ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் பார்ப்பனப் புரோகிதர்கள் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கு மட்டுமே திருமணங்களை நடத்தினார்கள். திருமலை நாயக்கன் காலத்தில் வட மாநிலங்களிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.
அப்பொழுதுதான் திருமலை நாயக்க மன்னனின் முன்னிலையில் கூடி, வைசியர்களுக்கும், சூத்திரர்-களுக்கும் கூட பார்ப்பனர்கள் திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பார்ப்பனப் புரோகிதர்கள் சூத்திரர்களுக்கு மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை நடத்தி வைக்கும்போது மறக்காமல் ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்கு பூணூல் அணிவித்து, சடங்குகள் முடிந்த பின் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றி தண்ணீரில் எறிந்துவிடுவார்கள் என்ற வரலாற்று உண்மையையும் எடுத்துக் கூறினார்.
சுளகரை கிளை கழக தலைவர் கு.வினோத்குமார்  நன்றி கூறினார்.

மண மக்கள் குடும்பத்தினர் சார்பாக இரு.கிருட்டிணன் ,பொன்முடி ,வண்டி .ஆறுமுகம் ஆகி யோரும் கழக பொறுப் பாளர்கள்  விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி கருணாநிதி , மாவட்ட துணை செயலாளர் எம் .கே.எஸ்.இளங்கோ ,பக பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ,மாவட்ட பக பொறுப்பாளர் சி.வீரமணி,முன்னால் மாவட்ட  செயலாளர் பழ .பிரபு ,மாநில மகளிரணி பொருளாளர் அகிலா ,மகிளிரணி செயலாளர் கவிதா ஆகியோர்  வாழ்த்து கூறினார்கள்.

நிகழ்ச்சியில்மண்டலமாணவரணி செயலாளர் சிற்றரசு , அண்ணா.அப்பாசாமி,க,துரை,தா.சந்திரசேகரன்,வே.முருகேசன்,இரா.வேங்கடம் .சி,தண்டபாணி,செ.சிவராசு ,கு.அரவிந்தன் ,கு.சுகுமார் ,மு.இராமமூர்த்தி ,இரு.கிருட்டிணன் ,அன்பழகன் பெருமாள் ,பழனி, பொன்.கௌதமன் சி.சாமிநாதன்உள்ளிட்ட கழக பொறுப்பாளாகளும் உறவினர்களம் ஏரா ளமான தோழர்களும் பங்கேற்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம்

ஊற்றங்கரை ஒன்றிய  திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம்  7.9.2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் ஊற்றங்கரை நெடுஞ்சாலை துறை பயனியர் மாளிகையில் நடைப்பெற்றது

கூட்டத்திற்கு மாவட் டத் தலைவர் கே.சி.எழிலரசன்  தலைமை வகித்து உரையாற்றி னார்.

மண்டல  செயலாளர் பழ.வெங்கடாசலம் , முன்னால் மாவட்ட செயலாளர்  பழ.பிரபு,மாநில ப.க துணைத் தலைவர் அண்ணா .சரவணன்   ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஊற்றங்கரை  ஒன்றியச் செயலாளர் இர.அன்பு  அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி கருணாநிதி , ஒன்றிய தலைவர் மா.ரவிச்சந்திரன் ,மாவட்ட பக பொறுப்பாளர் சி.வீரமணி,சி.அருள்  அண்ணா.அப்பாசாமி,க,துரை,தா.சந்
திரசேகரன்,செ.பொன்முடி ,தமிழ்குடிமகன் ,வே.முருகேசன்,இரா.வேங்கடம் .சி,தண்டபாணி,செ.சிவராசு ,கு.அரவிந்தன் ,கு.சுகுமார் ,மு.இராமமூர்த்தி ,இரு.கிருட்டிணன் ,அன்பழகன் பெருமாள் ,பழனி, பொன்.கௌதமன் சி.சாமிநாதன் உள்பட கழக நிர்வாகிகள் கருத் துரை வழங்கினர்.
7.9.2011 நடைபெற்ற மாவட்ட கலந்துரை யாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  தீர்மா னங்கள் பின்வருமாறு:

1. உலக மனித நேய மாண்பாளர் அறிவுலக பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று மாவட்டம் முழுவதும் கழக கொடியேற்றி கிளை கழகம் தோறும் அவரது படங்களுக்கும் அய்யா சிலைக்கும் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி திராவிடர் இன எழுச்சி தமிழர் மறுமலர்ச்சி நாளாகவும், கொள்கை பிரச்சார பெருவிழாவாக சிறப்பாக கொண்டா டுவது என தீர்மானிக்கப் படுகிறது.

2. தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி செப் 17 அன்று மாவட்ட திராவிடர் கழகத்தின் முடிவின் படி ஊற்றங்கரை ஒன்றியத்தில் சுமார் 30 இடங்களில் அய்யா படம் வைத்து அணைத்து கட்சியினரை அழைத்து மாலை அணிவிப்பது எனவும் 5 நான்கு சக்கர வாகனகளில் மாவட்ட கழகத் தோழர்களுடன் இணைந்து பயணிப்பது எனவும் ,அய்யா சிலை ,கொடிக்கம்பம் ,தகவல் பலகை ஆகியவற்றை புதுபிப்பது எனவும் முடிவு செய்ய படுகிறது

3. தூக்குத் தண்டனை என்பது மனித உரிமைக் கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என்பதால் இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மேனாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் பேரறி வாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து அம் மூவரையும் மனித நேயத்தோடு விடுதலை செய்ய வேண்டுமாய் மத்திய மாநில அரசு களை இக்கூட்டம் வலி யுறுத்தி கேட்டுக்கொள் கிறது.

4. ஊற்றங்கரையில் தொடர்ந்து மாதம்தோறும் கலை,இலக்கியம் ,அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்தி இயக்கத்தை பல்வேறு தளங்களில் எடுத்து செல்லும் பணியினை மேற்கொண்டு வரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தை ஒன்றிய திராவிடர் கழகம் பாராட்டுகிறது

5. தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்று தமிழ் அறிஞர்கள் மற் றும் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் வற்புறுத்தப்பட்டது. இதனை கடந்த தி.மு.க அரசு 2008ஆம் ஆண்டு ஒருமனதாக நிறை வேற்றிய அச்சட்டத்தை தற்பொழுது ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு ரத்து செய்து சித்திரை தான் தமிழ்புத்தாண்டு என்று அறிவித்துள் ளதை இவ் ஒன்றிய  திராவிடர் கழகம் கண் டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழக அரசு பரிசீலனை செய்து மீண்டும் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்க வேண்டுமாய்  தமிழக முதல்வர் அவர் களை இக்கூட்டம் வலி யுறுத்தி கேட்டுக்கொள் கிறது.

திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மேலும்|



அய்யா தந்தை பெரியார் தந்தை  அவர்களின் 133  ஆம் ஆண்டு பிறந்த  நாள் விழாவினை
                                    திருப்பத்தூர் மாவட்ட கழகம் எழுச்சியுடன் கொண்டாட தீவிரம்



திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பத்தூரில்  திருப்பத்தூர் மாவட்ட கழக  தலைவர் கே.சி எழிலரசன் இல்லத்தில்  29.8.2011  திங்கட்கிழமை மதியம் 4 மணிக்கு மிகச் சிறப்பாக  நடைபெற்றது.மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ வரவேற் புரையாற்றினார். மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம், மாநில ப.க.துணை தலைவர் அண்ணா.சரவணன்மாவட்ட இணை செயலாளர் அரங்க. ரவி , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாவட்ட ப.க செயலாளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ். இளங்கோவன், ஊற்றங்கரை ப.க செயலாளர் ஆசிரியர்கள்  சகா தேவன், மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இணை செயலாளர் அரங்க.ரவி, மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகுமணி, இந்திராகாந்தி, கவிஞர் சுப்புலட்சுமி, மாவட்ட ப.க, பொறுப்பாளர் சித.வீரமணி, சித.அருள்   ஆனந்தன், மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன், பெரியாரணி பயிற்றுநர் திராவிடராசன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி கணேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, புலவர் அண்ணாமலை, வையாபுரி, இரு.கிருட்டிணன்,பாண்டியன் ,பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி  ஆகியோர் உரையாற்றினர்.இக்கூட்டத்தில், திருப்பதி, வெற்றிகொண்டான், வெங்கடேசன் உதயகுமார், ரமேசு, பழனிசாமி, சாமி. அரசிளங்கோ, சி.சாமிநாதன், அண்ணா, அப்பா சாமி, நிருபர் கோபால் துரை, உள்ளிட்ட ஏராள மான திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஊற்றங்கரை, மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர். குறிப்பாக மகளிரணி தோழியர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்

மாவட்ட கழகத்தில் பின் வரும் தீர்மானங்கள்  நிறைவேற்ற பட்டன 
            [1]   பேரறிவாளன், சாந்தன்,முருகன், ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை  இரத்து செய்வதுடன் தண்டனையை குறைத்து விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளை இம் மாவட்டதிராவிடர் கழக கூட்டம்  கேட்டு கொள்கிறது.
           [2]பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 133  ஆம் ஆண்டு பிறந்த [ செப்ட் 17 ] நாள் விழாவினை மாவட்டம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து  எழுச்சியுடன் கொண்டாடுவதுவெனவும் 
*சுமார் 45  நான்கு சக்கர வாகனங்கள் மூலம் 450  பேர்  வரை சுற்றுப்  பயணம்செய்வது
*அய்யாவின் வண்ணப் படங்கள்  ஒரே அளவில் [4 க்கு 3  அடி ] 300  இடங்களில் வைத்து மாலை அணிவிப்பது . 
*காலை 6  மணி முதல் மலை 7  மணி வரை  250   இடங்களில் கழக கொடி  ஏற்றுவது .  
*அய்யா சிலைகள்  யாவும்  மாவட்டம் முழுவதும்   புதுப் பொழிவுடன்  தங்க நிற வண்ணம் பூசி அழகு     ஊட்டுவது.
*அய்யா சிலைகள்  யாவும்  மாலை அணிவிப்பது -- வண்ண விளக்குகளால் ஒளி ஊட்டுவது. 
* அய்யா கருத்துகள்  அடங்கிய  துண்டறிக்கைகள் அச்சிட்டு பரப்புவது .
*மாவட்டம் முழுதும்  அய்யாவின்    வண்ண   சுவரொட்டிகள் ஒட்டுவது .எனவும் தீர்மானிக்க படுகிறது 
          [3] *கழக தோழர்கள் அனைவரின் இல்லங்கள் தோறும் வண்ண விளக்குகளால் அழகு படுத்தி , கழக கொட்டி ஏற்றியும் இணிப்பு வழங்கியும் புத்தாடை  உடுத்தியும் ,ஓலி பெருக்கி மூலம் கழக பாடல்கள்   ஒலி பரப்புவது .எனவும் தீர்மானிக்க படுகிறது
          [4] * தமிழர் தலைவர் அவர்களை அழைத்து ஏலகிரி மலையில் கழக குடும்ப  விழா  நடத்துவது.
கடந்த முறை மத்தூரில் நடை பெற்ற மாவட்ட   கூட் டத்தில் தோழர்கள் அறிவித்த ``விடுதலை,  உண்மை, பெரியார் பிஞ்சு `` சந்தாக்கள்  உடன் மாவட்ட கழகத்திடம் வழங்கவேண்டும் .என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது
.இறுதியாக மாவட்ட மாணவரணி தலைவர் தமிழ் குடிமகன் நன்றி  கூறினார்







திங்கள், 29 ஆகஸ்ட், 2011

மூன்று தமிழ் உயிர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்! காணொளி தொகுப்பு

                                                                                             திருப்பத்தூரில்  

                                   மனிதநேய பற்றாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற

       மூன்று தமிழ் உயிர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

மூன்று தமிழ் உயிர்களை மீட்கக் கோரி தமிழக முதல்வரையும், மத்திய அரசையும் வலியுறுத்தி அறப்போர் ஆர்ப்பாட்டம்திங்கள்கிழமை காலை 10 மணி, அளவில் திருப்பத்தூர்,  பாரத ஸ்டேட் வங்கி அருகில், மனிதநேய பற்றாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது  இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ,சங்க பிரமுகர்கள் ,கலந்துகொண்டனர் .திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன்  அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் அர்பட்டத்திர்க்கு திமுக  நகர செயலாளர் எஸ்.இராஜேந்திரன் ,முன்னால் சட்ட மன்ற உறப்பினர் தி.க.ராஜா ,திமுக பொறுப்பாளர் ஜோலார்பேட்டை காமராஜ் ,,மதிமுக பொறுப்பாளர் கண்ணதாசன் ,மதிமுக நகர செயலாளர் ரகுநாத் ,வணிகர் சங்க தலைவர் குட்டி என்கிற சவுக்கார் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் சுபாஷ் ,வழக்கறிஞர்  மணிமொழி ,அனந்த கிருட்டிணன் ,ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ராஜா பாமக கவுன்சிலர் குட்டிமணி ,பேராசிரியார் பார்த்திபராஜா ,வணிகர் சங்க செயலாளர் மகாலிங்கம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் ராஜகோபால் உர வியாபாரிகள் சங்க செயலாளர் அன்பு  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோர்க்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்தும்,  ஏற்கெ னவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருந்த காரணத்தால், அதனையே கூட தண்டனையாகக் கணக்கில் கொண்டு அம் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்என்று வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் வி.சடகோபன், வேலூர் மாவட்ட மகளிர் அணி அமைப் பாளர் எஸ்.ஈஸ்வரி,வேலூர் மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், தருமபுரி மாவட்ட தலைவர் விடுதலை தமிழ்ச்செல் வன், மாவட்ட செயலா ளர் வீ.சிவாஜி, மாவட்ட அமைப்பாளர் பீம. தமிழ்பிரபாகரன், கிருட் டினகிரி மாவட்ட தலை வர் தா.திருப்பதி, செய லாளர் கோ.திராவிட மணி, சேலம் மண்டல செயலாளர் மு.தியாக ராசன், வேலூர் மண்டல செய லாளர் பழ.வெங்கடா சலம், கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு உணர்ச்சியுரை யாற்றிய அனைவரும் வலியுறுத்தினர் .

இந் நிகழ்ச்சியில் அச்சக சங்க தலைவர் பரந்தாமன்,மாவட்டசெயலாளர் வி .ஜி.இளங்கோ ,மாவட்ட இணை செயலாளர் அரங்க .ரவி ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் , ,  மாவட்ட மகளிரணி தலைவர் அகிலா,செயலாளர் கவிதா ,கே.கே.சி.கமலாஅம்மாள் ,ஆசிரியை அழகுமணி ,கலைமணி பழனியப்பன் ,இந்திராகாந்தி ,சுப்புலட்சுமி ,மாவட்ட ப.க.தலைவர்  தமிழ்ச்செல்வன் ,மாவட்ட மாணவரணி தலைவர் கமல் ,ஆனந்தன் ,மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிடராசன் ,கட்டரசம்பட்டி குமார் ,ராமச்சந்திரன் ,காவேரி ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,சித.அருள் ,இர .அன்பு .தீ.பொன்னுசாமி ,காளிதாஸ்,கனகராஜ் ,,திருப்பதி,வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,, சாமி. அரசிளங்கோ,சி.சாமிநாதன் ,அண்ணா,அப்பாசாமி,துரை,தமிழ்கு
டிமகன் ,உள்ளிட்ட ஏராளமான திருப்பத்தூர் ,ஜோலார்பேட்டை ,கந்திலி ,ஊற்றங்கரை ,மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர் இறுதியாக மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் நன்றியுரையாற்றினார் .

மூன்று தமிழ் உயிர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்!புகை படங்கள் தொகுப்பு