வெள்ளி, 7 அக்டோபர், 2011

அந்தோ ! கதிரம்பட்டி தீ.பொன்னுசாமி மறைந்தாரே !

திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் கதிரம்பட்டியை சார்ந்த மேனாள் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக தலைவரும் ,மேனாள் தருமபுரி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும் முன்னால் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் கதிரம்பட்டி .தீ .பொன்னுசாமி அவர்கள் இன்று பிற்பகல் 1 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் மானமிகு அய்யா தீ.பொன்னுசாமி அவர்கள் 1983 டிசம்பர் 17,18  மதுரையில் நடைபெற்ற ஈழ விடுதலை மாநாட்டிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 7 பிரச்சார படைகள் அமைக்க பட்டன .கிருடினகிரியில் இருந்து புறப்பட்ட பிரசார படைக்கு தலைமை ஏற்றவர் .அவர் தலைமையில் 20 பேர் கிருடினகிரியில் இருந்து நடந்தே எல்லா ஊர்களிலும் பிரச்சாரம் செய்து மாநாட்டு திடலை அடைந்தது .1970 ஆம் ஆண்டு திமுக சார்பில் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார் ஆயினும் அரசியலை வெறுத்து சமுக புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தில் இணைத்து கொண்டு 1971 முதல் திராவிடர் கழகத்தின் முழு நேர தொண்டராய் உழைத்தார் திராவிடர் கழகம் அறிவித்த எல்லா போராட்டங்களிலும் அவர் பங்கேற்றுள்ளார் .குறிப்பாக எம்.ஜி.ஆர் .ஆட்சியில் வருமான வரம்பு கொழுத்தும் போரரட்டம் கருவறை நுழைவு போராட்டம் ,69 % சதவித இட ஒதுக்கிட்டுக்கு எதிரான உச்ச நீதிபதிகளின் உருவ பொம்மை கொளுத்தும் போராட்டம் என கழகம் அறிவித்த அணைத்து போரட்டகளிலும் பெருமளவு தோழர்களை திரட்டிய அவரின் பங்கு சிறப்பானது .தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் மேல் அவர் கொண்ட அன்பும் மதிப்பும் அளவிடற்கரியது .திருப்பத்தூரில் நடந்த திராவிடர் இன எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டு பெரியார் பெருந்தொண்டர் என விருது வழங்க பட்டவர் .ஊற்றங்கரையில் நடந்த விடுதலை வாசகர் வட்டத்தால் திராவிடர் கழக பொது  செயலாளர் மானமிகு அய்யா அறிவுக்கரசால் பாராட்டப் பட்டவர் .தன் குடும்பத்தில் எல்லா திருமணத்தையும் சுயமரியாதை திருமணமாக நடத்தியவர் .தமிழர் தலைவர் தலைமையில் தன் மகளின் திருமணத்தை கழக மாநாடு போல் அந்த சின்ன கிராமத்தில் நடத்தியவர் .கழகம் நடத்திய போராடகளில் பங்கேற்று சேலம் ,வேலூர் என பல சிறை ஏகியவர்.அவருக்கு வீரவணக்கத்தை செலுத்வதுடன் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்க்கும் ,கழக தோழர்கட்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறோம்
---திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக