![]() ![]() அய்யா தந்தை பெரியார் தந்தை அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பத்தூரில் திருப்பத்தூர் மாவட்ட கழக தலைவர் கே.சி எழிலரசன் இல்லத்தில் 29.8.2011 திங்கட்கிழமை மதியம் 4 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ வரவேற் புரையாற்றினார். மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பழ வெங்கடாசலம், மாநில ப.க.துணை தலைவர் அண்ணா.சரவணன்மாவட்ட இணை செயலாளர் அரங்க. ரவி , ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாவட்ட ப.க செயலாளர் இரா.கனகராஜ், மாவட்ட தி.க. துணைச் செயலாளர் எம்.கே. எஸ். இளங்கோவன், ஊற்றங்கரை ப.க செயலாளர் ஆசிரியர்கள் சகா தேவன், மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இணை செயலாளர் அரங்க.ரவி, மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஆசிரியை அழகுமணி, இந்திராகாந்தி, கவிஞர் சுப்புலட்சுமி, மாவட்ட ப.க, பொறுப்பாளர் சித.வீரமணி, சித.அருள் ஆனந்தன், மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன், பெரியாரணி பயிற்றுநர் திராவிடராசன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி கணேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, புலவர் அண்ணாமலை, வையாபுரி, இரு.கிருட்டிணன்,பாண்டியன் ,பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி ஆகியோர் உரையாற்றினர்.இக்கூட்டத்தில், திருப்பதி, வெற்றிகொண்டான், வெங்கடேசன் உதயகுமார், ரமேசு, பழனிசாமி, சாமி. அரசிளங்கோ, சி.சாமிநாதன், அண்ணா, அப்பா சாமி, நிருபர் கோபால் துரை, உள்ளிட்ட ஏராள மான திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஊற்றங்கரை, மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர். குறிப்பாக மகளிரணி தோழியர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர் மாவட்ட கழகத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன [1] பேரறிவாளன், சாந்தன்,முருகன், ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்வதுடன் தண்டனையை குறைத்து விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளை இம் மாவட்டதிராவிடர் கழக கூட்டம் கேட்டு கொள்கிறது. [2]பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்த [ செப்ட் 17 ] நாள் விழாவினை மாவட்டம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து எழுச்சியுடன் கொண்டாடுவதுவெனவும் *சுமார் 45 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் 450 பேர் வரை சுற்றுப் பயணம்செய்வது *அய்யாவின் வண்ணப் படங்கள் ஒரே அளவில் [4 க்கு 3 அடி ] 300 இடங்களில் வைத்து மாலை அணிவிப்பது . *காலை 6 மணி முதல் மலை 7 மணி வரை 250 இடங்களில் கழக கொடி ஏற்றுவது . *அய்யா சிலைகள் யாவும் மாவட்டம் முழுவதும் புதுப் பொழிவுடன் தங்க நிற வண்ணம் பூசி அழகு ஊட்டுவது. *அய்யா சிலைகள் யாவும் மாலை அணிவிப்பது -- வண்ண விளக்குகளால் ஒளி ஊட்டுவது. * அய்யா கருத்துகள் அடங்கிய துண்டறிக் *மாவட்டம் முழுதும் அய்யாவின் வண்ண சுவரொட்டிகள் ஒட்டுவது .எனவும் தீர்மானிக்க படுகிறது [3] *கழக தோழர்கள் அனைவரின் இல்லங்கள் தோறும் வண்ண விளக்குகளால் அழகு படுத்தி , கழக கொட்டி ஏற்றியும் இணிப்பு வழங்கியும் புத்தாடை உடுத்தியும் ,ஓலி பெருக்கி மூலம் கழக பாடல்கள் ஒலி பரப்புவது .எனவும் தீர்மானிக்க படுகிறது [4] * தமிழர் தலைவர் அவர்களை அழைத்து ஏலகிரி மலையில் கழக குடும்ப விழா நடத்துவது. கடந்த முறை மத்தூரில் நடை பெற்ற மாவட்ட கூட் டத்தில் தோழர்கள் அறிவித்த ``விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு `` சந்தாக்கள் உடன் மாவட்ட கழகத்திடம் வழங்கவேண்டும் .என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது .இறுதியாக மாவட்ட மாணவரணி தலைவர் தமிழ் குடிமகன் நன்றி கூறினார் |
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக