வியாழன், 12 மே, 2011

மத்தூர்: பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்

மத்தூர், மே 12- திருப் பத்தூர் கழக மாவட் டம் மத்தூர் ஒன்றியம் பாண்டவர்குட்டை கிராமத்தில் பெரியார் வீரவிளையாட்டுக் கழக கிளை தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது. (21.4.2011)

மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலை மையில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட ப.க. துணை தலைவர் இரா.பழனி வரவேற் றார்.  வேலூர் மண்டல தி.க செயலாளர் பழ. வெங்கடாசலம், மாநில ப.க துணைத் தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாவட்ட செயலா ளர் வி.ஜி.இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி.தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க செயலா ளர் இரா.கனகராஜ், மாவட்ட ப.க அமைப் பாளர் கி.வீரமணி, மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ். இளங்கோவன், ஊற்றங்கரை ப.க செயலாளர் ஆசிரியர் சகா தேவன், மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடா சலம், மத்தூர் விஸ்வ நாதன், மாவட்ட மாண வரணி தலைவர் கே.சி. சிற்றரசு, பழனிச்சாமி, திருப்பதி, ஆதியூர் தி.க. தலைவர் ஆனந்தன், ஒன் றிய தி.க தலைவர் கு.சுகு மார்,  மகளிரணி மு.இந்தி ராகாந்தி, செல்வராணி, இராஜிவ்காந்தி, அ.மணி ஆகியோர் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் ஒவ்வோர் ஊரிலும் தொடங்கப்படுவதன் நோக்கங்கள் குறித்தும் தமிழர் தலைவரின் விருப் பம் குறித்தும் உரையாற் றினார்கள்.

இறுதியாக பெரியார் வீரவிளையாட்டுக் கழ கம்- பாண்டவர் குட்டை என்ற பெயர் பலகையில் தந்தைபெரியார் தமிழர் தலைவர் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இப்பலகையை மாவட் டத் தலைவர் திறந்து வைத்து உரையாற்றினார்.

தமிழகத்து இளைஞர் கள் ஜாதி, மதம், கடவுள், சினிமா, கிரிக்கெட் போன்ற போதைகளில் இருந்து  விடுபட வேண் டும். தமிழர்களின் வீர விளையாட்டுகள் காப் பாற்றப்பட வேண்டும். இளைஞர்களின் உடல் வலிமை காப்பாற்றப்பட வேண்டும். இளைஞர் களின் உள்ளம் வலிமை பெற வேண்டும் என்ற காரணத்தால் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த வீரவிளையாட்டுக் கழகம் தொடங்கப்பட வேண்டு ம் என்றார்.

பொறுப்பாளர்கள்

தலைவர்: மதிபாலன், செயலாளர்: சே.ஜானகி ராமன், பொருளாளர்: இரா.பழனி

தொடர்ந்து வீர விளையாட்டுக் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 23,24 சனி, ஞாயிறு  ஆகிய இருநாள் கள் கைப்பந்தாட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. பாண் டவர்குட்டையை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கைப்பந்தாட்டக் குழுக் கள் போட்டியில் கலந்துகொண்டார்கள்.

முதல் பரிசு ரூ.5000-கோவேந்தன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழங் கினார். இரண்டாம் பரிசு ரூ.4000-மாநில பெரியார் வீரவிளை யாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் கே. சி.எழிலரசன் வழங் கினார். தொடர்ந்து மூன்றாம் நான்காம் மற்றும் அய்ந்தாம் பரி சுகள் வழங்கப்பட்டன.

ஊர் முழுவதும் கழகக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டி ருந்தது. ஊர்மக்கள் பெருந்திரளாக விழா வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைத்துக் கட்சி களின் பிரமுகர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.




மே தின சிறப்பு கருத்தரங்கம்

மிக எழுச்சியுடன் நடைபெற்ற மே தின சிறப்பு கருத்தரங்கம்

                                           
ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மே தின  சிறப்பு கருத்தரங்கமும் ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வெ. முருகேசன் அவர்களுக்கு பாராட்டு விழாவும்   வரும் மே  எட்டாம்   தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற்றது .

நிகழ்ச்சியின் தொடக்கமாக இதே மே மாதத்தில் தமிழ் ஈழத்தில் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப் பட்ட தமிழர்களுக்க்காகவும் விடுதலை போராட்டத்தில் உயிர் இழந்த  போராளிகளுக்காகவும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது . இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின்  பொருளாளர் அண்ணா .அப்பாசாமின்  வரவேற்புரையற்றினார்  .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின் உறுப்பினர் பொன்முடி   வாசித்தார்  .விழா அறிமுக உரையை விடுதலைவாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு ஆற்றினார் 


திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்  ,.திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில்  ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வெ. முருகேசன்  அவர்களின் கல்வி பணிகளுக்காக பாராட்ப்பட்டார்  வித்யா மந்திர் கல்வி நிறுவனகளின் நிறுவனர் வே.சந்திரசேகரன் பாரட்டுரையாற்றினார்
                               வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு இம் மாதம் பிறந்த நாள் கொண்டாடும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் அண்ணா.அப்பாசாமி ,தண்டபாணி .கே.சி.எ.சிற்றரசு,சித.அருள்  ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் கருத்துரையாற்ற வருகை தந்த கவிஞர் .சாகுல் அமீத் அவர்களுக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி..கருணாநிதி அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் 
           பெரியார் மணியம்மை இலவச மருத்தவ மனைக்கு தருமபுரி  சுபா மருத்துவமனை வழங்கிய சாம்பிள் மருந்துகளை  வாசகர் வட்ட உறுப்பினர் வித்யாபிரபு  அவர்கள் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி.எழிலரசன் அவர்களிடம் அளித்தார்
                            மே தினத்தை ஒட்டி புரட்சியாளர் சேகுவேரா படத்தினை திறந்து வைத்து ''விடுதலை வரலாற்றில் சில பக்கங்கள் '' என்னும் தலைப்பில் கவிஞர் .இ.சாகுல் அமீத் மிக சிறப்பான கருத்துரையற்றினார்   இறுதியாக தமிழ் குடிமகன்  நன்றி உரையாற்றினார்  .
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவர் எழுதி விடுதலையில் வெளி வந்த ''மௌனத்தின் பேச்சாற்றல்''மற்றும்  ,உணவு விரயம் குறித்த  வாழ்வியல் சிந்தனை கட்டுரை நகல் அனைவருக்கும் அளிக்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் .
விடுதலை வாசகர் வட்ட மே மாத கருத்தரங்க நிகழ்வுகளின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் ,புகைப்படங்களை http://tirupatturdk.blogspot.com
 
. என்னும் வலைபூ தளத்தில் காணலாம் . 






















வியாழன், 5 மே, 2011

மே தின சிறப்பு கருத்தரங்கம்

         ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்                                 நடத்தும்  



                              மே தின சிறப்பு கருத்தரங்கம்
                                           
ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மே தின  சிறப்பு கருத்தரங்கமும் ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வெ. முருகேசன் அவர்களுக்கு பாராட்டு விழாவும்   வரும் மே  எட்டாம்   தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற உள்ளது

இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின்  பொருளாளர் அண்ணா .அப்பாசாமின்  வரவேற்புரையற்றுகிறார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின் உறுப்பினர் பொன்முடி   வாசிக்கிறார் .விழா அறிமுக உரையை விடுதலைவாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு ஆற்றுகிறார்
திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார் தருமபுரி மதிமுக மாவட்ட செயலாளர் விசம்பத் ,திருப்பத்தூர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ ,.திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில்  ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வெ. முருகேசன்  அவர்களின் கல்வி பணிகளுக்காக பாராட்ட படுகிறார் வித்யா மந்திர் கல்வி நிறுவனகளின் நிறுவனர் வே.சந்திரசேகரன் பாரட்டுரையாற்றுகிறார்
                               வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள் டி.எஸ்.திருநாதன் ,பி.ரஜினிசங்கர் ,தண்டி.சரவணன்.இர,திருநாவுக்கரசு,க.அசோக்.மா.ரவிச்சந்திரன் ,இர.வேங்கடம் ,சாமிநாதன் கோபாலன் ,,சித.அருள்.சித்.வீரமணி.இரு.கிருட்டிணன்.முனி.வெங்கடேசன்,த.சந்திரசேகரன் க.துரை,சி.தண்டபாணி இராம.சகாதேவன்ஆகியோர் நினைவு பரிசு வழங்குகின்றனர் .
                            மே தினத்தை ஒட்டி புரட்சியாளர் சேகுவேரா படத்தினை திறந்து வைத்து ''விடுதலை வரலாற்றில் சில பக்கங்கள் '' என்னும் தலைப்பில் கவிஞர் .இ.சாகுல் அமீத் கருத்துரையாற்றுகிறார் இறுதியாக சிவராஜ் நன்றி உரையாற்றுகிறார் .