வியாழன், 12 மே, 2011

மே தின சிறப்பு கருத்தரங்கம்

மிக எழுச்சியுடன் நடைபெற்ற மே தின சிறப்பு கருத்தரங்கம்

                                           
ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மே தின  சிறப்பு கருத்தரங்கமும் ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வெ. முருகேசன் அவர்களுக்கு பாராட்டு விழாவும்   வரும் மே  எட்டாம்   தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற்றது .

நிகழ்ச்சியின் தொடக்கமாக இதே மே மாதத்தில் தமிழ் ஈழத்தில் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப் பட்ட தமிழர்களுக்க்காகவும் விடுதலை போராட்டத்தில் உயிர் இழந்த  போராளிகளுக்காகவும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது . இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின்  பொருளாளர் அண்ணா .அப்பாசாமின்  வரவேற்புரையற்றினார்  .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின் உறுப்பினர் பொன்முடி   வாசித்தார்  .விழா அறிமுக உரையை விடுதலைவாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு ஆற்றினார் 


திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்  ,.திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில்  ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வெ. முருகேசன்  அவர்களின் கல்வி பணிகளுக்காக பாராட்ப்பட்டார்  வித்யா மந்திர் கல்வி நிறுவனகளின் நிறுவனர் வே.சந்திரசேகரன் பாரட்டுரையாற்றினார்
                               வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு இம் மாதம் பிறந்த நாள் கொண்டாடும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் அண்ணா.அப்பாசாமி ,தண்டபாணி .கே.சி.எ.சிற்றரசு,சித.அருள்  ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் கருத்துரையாற்ற வருகை தந்த கவிஞர் .சாகுல் அமீத் அவர்களுக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி..கருணாநிதி அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் 
           பெரியார் மணியம்மை இலவச மருத்தவ மனைக்கு தருமபுரி  சுபா மருத்துவமனை வழங்கிய சாம்பிள் மருந்துகளை  வாசகர் வட்ட உறுப்பினர் வித்யாபிரபு  அவர்கள் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி.எழிலரசன் அவர்களிடம் அளித்தார்
                            மே தினத்தை ஒட்டி புரட்சியாளர் சேகுவேரா படத்தினை திறந்து வைத்து ''விடுதலை வரலாற்றில் சில பக்கங்கள் '' என்னும் தலைப்பில் கவிஞர் .இ.சாகுல் அமீத் மிக சிறப்பான கருத்துரையற்றினார்   இறுதியாக தமிழ் குடிமகன்  நன்றி உரையாற்றினார்  .
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவர் எழுதி விடுதலையில் வெளி வந்த ''மௌனத்தின் பேச்சாற்றல்''மற்றும்  ,உணவு விரயம் குறித்த  வாழ்வியல் சிந்தனை கட்டுரை நகல் அனைவருக்கும் அளிக்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் .
விடுதலை வாசகர் வட்ட மே மாத கருத்தரங்க நிகழ்வுகளின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் ,புகைப்படங்களை http://tirupatturdk.blogspot.com
 
. என்னும் வலைபூ தளத்தில் காணலாம் . 






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக