ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும்
ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மே தின சிறப்பு கருத்தரங்கமும் ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வெ. முருகேசன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் வரும் மே எட்டாம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற உள்ளது
இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமின் வரவேற்புரையற்றுகிறார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின் உறுப்பினர் பொன்முடி வாசிக்கிறார் .விழா அறிமுக உரையை விடுதலைவாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு ஆற்றுகிறார்
திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார் தருமபுரி மதிமுக மாவட்ட செயலாளர் விசம்பத் ,திருப்பத்தூர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ ,.திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வெ. முருகேசன் அவர்களின் கல்வி பணிகளுக்காக பாராட்ட படுகிறார் வித்யா மந்திர் கல்வி நிறுவனகளின் நிறுவனர் வே.சந்திரசேகரன் பாரட்டுரையாற்றுகிறார்
வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள் டி.எஸ்.திருநாதன் ,பி.ரஜினிசங்கர் ,தண்டி.சரவணன்.இர,திருநாவுக்
மே தினத்தை ஒட்டி புரட்சியாளர் சேகுவேரா படத்தினை திறந்து வைத்து ''விடுதலை வரலாற்றில் சில பக்கங்கள் '' என்னும் தலைப்பில் கவிஞர் .இ.சாகுல் அமீத் கருத்துரையாற்றுகிறார் இறுதியாக சிவராஜ் நன்றி உரையாற்றுகிறார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக