வியாழன், 12 மே, 2011

மத்தூர்: பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்

மத்தூர், மே 12- திருப் பத்தூர் கழக மாவட் டம் மத்தூர் ஒன்றியம் பாண்டவர்குட்டை கிராமத்தில் பெரியார் வீரவிளையாட்டுக் கழக கிளை தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது. (21.4.2011)

மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலை மையில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட ப.க. துணை தலைவர் இரா.பழனி வரவேற் றார்.  வேலூர் மண்டல தி.க செயலாளர் பழ. வெங்கடாசலம், மாநில ப.க துணைத் தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாவட்ட செயலா ளர் வி.ஜி.இளங்கோ, மாவட்ட ப.க தலைவர் சி.தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க செயலா ளர் இரா.கனகராஜ், மாவட்ட ப.க அமைப் பாளர் கி.வீரமணி, மாவட்ட தி.க. துணைச் செயலாளர்  எம்.கே. எஸ். இளங்கோவன், ஊற்றங்கரை ப.க செயலாளர் ஆசிரியர் சகா தேவன், மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடா சலம், மத்தூர் விஸ்வ நாதன், மாவட்ட மாண வரணி தலைவர் கே.சி. சிற்றரசு, பழனிச்சாமி, திருப்பதி, ஆதியூர் தி.க. தலைவர் ஆனந்தன், ஒன் றிய தி.க தலைவர் கு.சுகு மார்,  மகளிரணி மு.இந்தி ராகாந்தி, செல்வராணி, இராஜிவ்காந்தி, அ.மணி ஆகியோர் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் ஒவ்வோர் ஊரிலும் தொடங்கப்படுவதன் நோக்கங்கள் குறித்தும் தமிழர் தலைவரின் விருப் பம் குறித்தும் உரையாற் றினார்கள்.

இறுதியாக பெரியார் வீரவிளையாட்டுக் கழ கம்- பாண்டவர் குட்டை என்ற பெயர் பலகையில் தந்தைபெரியார் தமிழர் தலைவர் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இப்பலகையை மாவட் டத் தலைவர் திறந்து வைத்து உரையாற்றினார்.

தமிழகத்து இளைஞர் கள் ஜாதி, மதம், கடவுள், சினிமா, கிரிக்கெட் போன்ற போதைகளில் இருந்து  விடுபட வேண் டும். தமிழர்களின் வீர விளையாட்டுகள் காப் பாற்றப்பட வேண்டும். இளைஞர்களின் உடல் வலிமை காப்பாற்றப்பட வேண்டும். இளைஞர் களின் உள்ளம் வலிமை பெற வேண்டும் என்ற காரணத்தால் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த வீரவிளையாட்டுக் கழகம் தொடங்கப்பட வேண்டு ம் என்றார்.

பொறுப்பாளர்கள்

தலைவர்: மதிபாலன், செயலாளர்: சே.ஜானகி ராமன், பொருளாளர்: இரா.பழனி

தொடர்ந்து வீர விளையாட்டுக் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 23,24 சனி, ஞாயிறு  ஆகிய இருநாள் கள் கைப்பந்தாட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. பாண் டவர்குட்டையை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கைப்பந்தாட்டக் குழுக் கள் போட்டியில் கலந்துகொண்டார்கள்.

முதல் பரிசு ரூ.5000-கோவேந்தன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழங் கினார். இரண்டாம் பரிசு ரூ.4000-மாநில பெரியார் வீரவிளை யாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் கே. சி.எழிலரசன் வழங் கினார். தொடர்ந்து மூன்றாம் நான்காம் மற்றும் அய்ந்தாம் பரி சுகள் வழங்கப்பட்டன.

ஊர் முழுவதும் கழகக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டி ருந்தது. ஊர்மக்கள் பெருந்திரளாக விழா வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைத்துக் கட்சி களின் பிரமுகர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக