புதன், 16 மார்ச், 2011

திருப்பத்தூர் மாவட்ட செயலளராக வி.ஜி.இளங்கோவன்

திருப்பத்தூர் மாவட்ட செயலளராக வி.ஜி.இளங்கோவன் கழக பொதுக் குழுவில் அறிவிக்கப் பட்டார்

வெள்ளி, 11 மார்ச், 2011

பெண்களின் அறிவுக் கலாச்சாரம் சமுதாயத்தை மேம்படுத்துகிறது பட்டிமன்றத்தில் துணைப் பொதுச்செயலாளர் பிறைநுதல்செல்வி தீர்ப்பு

ஊற்றங்கரை, மார்ச் 11-  ஊற்றங்கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்       மகளிர் நாள் விழா சிறப் புடன் நடைபெற்றது. 1300-க்கும்மேற்பட்ட மாணவிகள் பங்கேற் றனர். கலை நிகழ்ச்சி கள், கருத்தரங்கம், பட்டிமன்றம் என நாள் முழுதும் கருத்துக் கினிய நிகழ்ச்சிகள். துணைப் பொதுச்செய லாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி சிறப்புரையாற்றினார்.

உலக மகளிர் நாளை யொட்டி கடந்த செவ் வாய்க் கிழமை ஊற்றங் கரை, காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிற்பகல் ஒரு மணி அளவில் அன்னை தெரசா அரங்கில் மக ளிர் நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திராவி டர் கழக துணைப் பொதுச்செயலாளரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆலோ சனைக்குழு உறுப்பி னருமான மருத்துவர் பிறைநுதல்செல்வி சிறப்புரையாற்றினார். திராவிடர் கழக மண் டல செயலாளர் பழ. வெங்கடாசலம், முன் னாள் மாவட்ட செய லாளர் பழ.பிரபு, ஊற் றங்கரை விடுதலை வாசகர் வட்ட பொரு ளாளர் அண்ணா. அப்பாசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகப் பங்கேற்றனர். நிகழ்வின் தொடக்க மாக வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டுத்துறைத் தலைவர் தே.கவிதா வரவேற்புரையாற்றினார் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல் லூரியின் செயலர் கு. செங்கோடன், கல்லூரி யின் முதல்வர்  முனை வர் க.அருள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ச.கோவிந்த ராஜ், இயற்பியல் துறை விரிவுரையாளர் கஸ்தூரி ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் உ.கல்பனாதேவி அறிமுக உரையாற்றினார். போட்டி நிறைந்த உலக மும் பெண்களின் வெற்றி யும் என்கிற தலைப்பில் மனிதனின் ஆதி சமூகம் தாய் வழி சமூகமாய் இருந்து பெண்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப் பட்டனர் ,இந்த அடிமை நிலையில் இருந்து உரிமைகளை யும் வெற்றிகளையும் மீட்டெடுப்பது  எவ் வாறு, கல்லூரிப் பெண் கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற மிக சிறப்பான ஆய்வுரையை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளரும், பெரியார் மணியம்மை பல்கலை கழக ஆலோசனைக்குழு உறுப்பினருமான மருத் துவர் பிறைநுதல்செல்வி நிகழ்த்தினார். பட்டிமன் றம், கருத்தரங்கத்தை தொடர்ந்து''இன்றைய கல்லூரிப் பெண்களின் நவீன கலாச்சாரம் சமு தாயத்தை மேன்மைப் படுத்துகிறதா? சிறுமைப் படுத்துகிறதா? என்னும் தலைப்பில்  கல்லூரி மாணவிகள், விரிவுரை யாளர்கள்  பங்கேற்ற பட்டிமன்றம் நடை பெற்றது. மாணவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களே நடுவராக இருந்து பெண்களின் அறிவுக்கலாச்சாரம் சமு தாயத்தை மேம்படுத் துகிறது என்று பலத்த கரவொலிக்கிடையே தீர்ப்பளித்தார். கட்டுரைப் போட்டி யில் வென்ற மாணவிக ளுக்கும், தரை ஓவிய போட்டியில் வென்ற மாணவிகளுக்கும் ,பட்டி மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய கல்லூரி மாணவிகள், விரிவுரை யாளர்கள் அனைவ ருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பிறைநுதல்செல்வி பரிசளித்தார் முன்னதாக துணைப்பொதுச் செய லாளர் அவர்களுக்கு கல்லூரி சார்பில் நினைவுப் பரிசு வழங் கப்பட்டது. மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதி யாக பொருளியல் துறை விரிவுரையாளர் இரா. சத்தியகலா நன்றியுரை யாற்றினார்.

புதன், 9 மார்ச், 2011

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட மகளிர் நாள் கருத்தரங்க புகைப்படங்கள்


இப்படித்தான் நடக்கவேண்டும் ஊற்றங்கரையில் மகளிர் நாள்விழா!

ஊற்றங்கரை, மார்ச் 8- திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங் கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மகளிர் நாள் சிறப்புக் கருத்தரங்கம்   ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அள வில் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடை பெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக பெரி யார் பற்றாளரும் தமி ழர் தேசிய இயக்கத்தின் துணைத் தலைவரு மான அரூர் வழக்கறி ஞர் .இராசு.நெடுங் கிள்ளி அவர்களின் மறைவுக்கும் ,ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலரும் தேமுதிக ஒன்றிய செய லாளர் மு.சரவணன் அவர்களின் மறைவுக் கும் ,விடுதலை வாசகர் வட்டத்தின் உறுப்பினர் ஆசிரியர் தர்மலிங்கம் அவர்களின் தாயார் மறைவுக்கும் பெண்ணு ரிமைக்காகப் போரா டிய எண்ணற்ற சுய மரியாதைச் சுடரொளி களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

முன்னதாக தமிழர் தலைவரின் வாழ்த்துக் கடிதம் படிக்கபட்டது .விடுதலை வாசகர் வட் டத்தின் செயல்பாடு களை குறித்து விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் பழ.பிரபு அறிமுக உரையாற்றினார். மகளிரே தலைமை யேற்று முன்னிலை வகித்து நடத்தும் இவ் விழாவிற்கு பெரியார் மணியம்மைப் பல் கலை கழக மாணவி  செல்வி .சசிகலா இரவிச் சந்திரன் வரவேற்புரை யாற்றினார். 

ஊற்றங் கரை தொழில் அதிப ரும்  ஆர்.ஆர்.இன்டான் கேஸ்  ஏஜென்சீஸ் உரி மையாளருமான   ஜெ.லதா அவர்களும்  தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் .செ.ராஜாமணி ,திராவி டர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மு.இந்தி ராகாந்தி அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணி யாற்றும் பிரமுகர் விடு தலை வாசகர் வட்டத் தால் பாராட்டப்படு வார்.

இவ்விழாவில் தமி ழக ஆளுநர் அவர் களால் நல்லாசிரியர் விருது ஆசிரியர்  பெற்ற செல்வி. ஆர்.புவனேஸ் வரி  அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப் பட்டது .தன் வாழ்வை ஆசிரியர் பணிக்காகவே ஒப்படைத்து சிறப்பான கல்வி சேவை புரிந்து வருவதற்கும் ,பிரேம னந்தா வழக்கில் ,சிதம் பரம் தமிழ் மறை ஓதும் வழக்கில் மிக சிறப்பான தீர்ப்பளித்த அவரது சகோதரி உயர் நீதிமன்ற நீதிபதி அவர்களின் பணி களை நினைவு கூர்ந்தும்  .மகளிர் பெரியார் சமுக காப்பணியின் தலைவரும் ,அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரு மான  சி.அழகுமணி மிக சிறப்பான  பாராட்டுரை நிகழ்த்தினார் .

ஏற்புரை நிகழ்த்திய ஆசிரியர் புவனேஸ்வரி தானும் ,தன் சகோதரிகளும் சமூ கத்தில் பாராட்டப்படு வதற்குக் காரணம் கல்வி அறிவு இல்லாத தன் தாய் தங்களை படிக்க வைத் ததே என்றும் பெண் கல் வியின் அவசியம் குறித் தும் உரையாற்றினார்.
மாவட்ட மகளிரணி செயலாளர்  ம.கவிதா அவர்கள் அன்னை மணியம்மையார் படத் தினைத் திறந்து வைத்து அன்னை    மணியம்மை யாரின் தொண்டையும் தியாகத்தையும் நினைவு கூர்ந்து  உரையாற்றினார் .திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலை வர் கே.சி.எழிலரசன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துத் தெரி வித்து உரையாற்றினார்  திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளி ரணி பொருளாளரு மான எ.அகிலா எழில ரசன் இக்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி தலை மையுரையாற்றினார். 

''பெண்ணியம் வென்ற தும் வெல்ல வேண்டி யதும் ''என்கிற தலைப் பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர். அ.அருள் மொழி மகளிர் நிலை குறித்தும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணி கள் குறித்தும் மிக சிறப்பான  கருத்துரை யாற்றினார்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்க ளுக்கு கலைமணி பழனி யப்பன், கவிஞர்.ர.சுப்பு லட்சுமி, முருகம்மாள் அப்பாசாமி இ .வெண்ணிலா, சசிகலா தண்டபாணி, அற்புத வல்லி ஆகியோர்  நினைவுப்பரிசினை அளித் தனர். நிறைவாக  செல்வி. அற்புதவல்லி  நன்றி உரையாற்றினார். ம.வித் யாபிரபு விழாவினை தொகுத்து வழங்கினார் .

அரங்கத்தின் நுழைவு வாயிலில் வருகைப்பதி வேட்டில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல், பிஸ்கட் பாக்கெட், குர்குரே, தேவை பாலியல் நீதி புத்தகம், தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைக் கருத்துகள், அடுத்த கூட்ட அழைப் பிதழ்  தரப்பட்டது. நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக் கப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனை வருக்கும் மாவட்ட திராவிடர் கழக மகளி ரணி சார்பில்  மதிய உணவு வழங்கப்பட்டது எராளமான மகளிர் பங்கேற்று அரங்கம் நிரம்பி வழிந்தது.