திங்கள், 27 ஜூன், 2011

திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்தரங்கம்

       ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில்

















எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்தரங்கம்


                                           
ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்தரங்கமும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சு.வரதராசன்  அவர்களுக்கு பாராட்டு விழாவும் மறைந்த திராவிடர் இயக்க வீரர்களின் படத் திறப்பும்  
ஜூன் 19 ஆம்    தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற்றது .

  இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின்  செயலாளர்
பழ.பிரபு   வரவேற்புரையற்றினார்  .மாத அறிக்கையை ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மா.இரவிச்சந்திரன்   வாசித்தார்  .விழா அறிமுக உரையை விடுதலைவாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா.அப்பாசாமி   ஆற்றினார் 

 
நிகழ்ச்சிக்கு ஊற்றங்கரை ஒன்றிய திமுக செயலாளர் எக்கூர் த.செல்வம்   தலைமை தாங்கினார்  ,.திமுக நகர செயலாளர் இர .பாபு சிவகுமார் ,நகர அவை தலைவர் பா.அமானுல்லா  ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சு.வரதராசன் அவர்களின் கல்வி பணிகளுக்காக பாராட்ப்பட்டார் திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் பாரட்டுரையாற்றினார் 

                               வருகை தந்த  சிறப்பு விருந்தினர்களுக்குசிவராஜ் ,பிரபாகரன் ,கோவிந்தராசன் ,வையாபுரி ,பழ.பிரபு   ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் மறைந்த திராவிடர் இயக்க வீரர்கள் படத்தினை திறந்து வைத்து மத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் பொன் .குணசேகரன் உரையாற்றினார்                        
''திராவிடர் இயக்கத்தின் நோக்கமும் தாக்கமும்''என்கிற தலைப்பில் இரா.பெரியார் செல்வன் திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்துரையை ஆற்றினார் இறுதியாக த.சந்திரசேகரன் நன்றியுரை ஆற்றினார்

.
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் ஜூன் 3 கலைஞர் பிறந்த நாளையொட்டி கலைஞர் குறித்த கவிதைகளின் நகல் வழங்கப்பட்டது  .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் .



விடுதலை வாசகர் வட்ட ஜூன்  மாத கருத்தரங்க நிகழ்வுகளின்  புகைப்படங்களை http://tirupatturdk.blogspot.com  என்னும் வலை பூ தளத்தில் காணலாம்

வியாழன், 2 ஜூன், 2011

ஜூன் -4 பிறந்த நாள் காணும் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன்

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவரும் ,பெரியார் கபாடி கழகத்தின் உறுப்பினரும் ,ரோட்டரி சங்கத்தில் சீரிய செயல் பாடு கொண்ட மனித நேய பற்றாளர் மானமிகு.கே.சி.எழிலரசன் அவர்கள் தனது பிறந்த நாளை ஜூன் 4 ஆம் தேதி கொண்டாடுகிறார் அவருக்கு மாவட்ட திராவிடர் கழகம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது கழக தோழர்கள் sms மூலமாகவோ அலைபேசி மூலமாகவோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் அவரது அலை பேசி எண் 9443221399

சாதனை மங்கை மங்கையர்க்கரசி !


நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன் தேர்வில் திருப்பத்தூர் மாவட் டத் தலைவர் கே.சி. எழிலரசன் மாநில திராவிடர் கழக மகளிரணி பொருளாளர் அகிலா ஆகியோரின் மகள் மங்கையர்க்கரசி  500-க்கு, 471 மதிப்பெண் கள் பெற்று பள் ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். அவருக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் வாழ்த்துகள்.