500 க்கும் மேற்ப்பட்ட பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்ப்பு !
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை(21.08.2011) காலை 10 மணியளவில் ஊற்றங்கரை காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
திட்டமும் செயற் பாடுகளும்
முன்னதாக ‘இணையம்’ என்ற உலக வலைத்தளத்தைப் பாமரரும் புரிந்துகொள்ளவும் ,தமிழ் இணையத்தை பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மாணவ ,மாணவிகளும் பொதுமக்களும் அறிந்து கொள்ளவும் தமிழ் இணையப் பயிலரங்கத்தை நடத்த ஊற்றங்கரை விடுதலை வட்டம் முடிவு செய்தது .இப் பயிலரங்கத்திற்கு தேவையானது திரையிடும் கருவி,திரை ,ஒலிவாங்கி, மற்றும் ஒலிபெருக்கிக் கருவிகள் பங்கேற்போருக்கு ஒரு எழுதுகோல்,மற்றும் ஒரு குறிப்பேடு மட்டுமே . ஒரு கல்லூரி நிறுவனத்தின் மூலம் எளிமையாக ஏற்பாடுகளை செய்யாலாம் என திட்டமிட்டு ஊற்றங்கரை நகரின் மிக சிறப்பு வாய்ந்த வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர் கல்வி செம்மல் .திரு.வே.சந்திரசேகரன் அவர்களை அணுகிய போது நிகழ்ச்சி நடத்த அரங்கம் ,திரையிடும் கருவி,திரை ,ஒலிவாங்கி, ஒலிபெருக்கிக் கருவிகள் ,பங்கேற்கும் அனைவருக்கும் உணவு ,தேனீர் ,போக்குவரத்து வசதிகளை ஏற்ப்பாடு செய்து தருவதாக பெரு உள்ளத்துடன் ஒப்புகொண்டார்
ஊற்றங்கரை ஒன்றியத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகள் ,மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ் இணையப் பயிலரங்கம் குறித்த சுற்றறிக்கை அனுப்பி பங்கேற்ப்பளர்கள் முன் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது .பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி ,கேபிள விளம்பரம் ,முக நூல் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுகோள் வைக்கப் பட்டது .பலரும் ஆர்வத்துடன் பதிவு செய்தனர் .பல பள்ளிகள் இருந்து மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்
பொதுமக்கள் விளம்பரத்திற்கு டிஜிட்டல் பதாகையை ஜெசிந்தா மெட்டல் மார்ட் வழங்கினார் ,மாணவர்களுக்கு குறிப்பேடு ரவிக்குமார்
பேப்பர் ஸ்டோர்ஸ் அவர்களும் ,எழுது கோல் ராசி புக் ஸ்டோர்ஸ் உரிமையாளர் திருமதி கவிதா சுரேஷ் அவர்களும் நன்கொடையாக வழங்கினர் .
நிகழ்ச்சி நிரல்
200 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் தனி பேருந்துகள் மூலமும் பொதுமக்கள் ,இணைய ஆர்வலர்கள் ஊற்றங்கரை பேருந்து நிலையத்தில் இருந்து மற்றுமொரு தனி பேருந்து மூலமும் காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர் ,காலை பத்து முப்பது மணியளவில் தொடங்கியது .மாநில ப.க.துணை தலைவர் அண்ணா.சரவணன் விழாவினை தொகுக்க
விடுதலை வாசகர் வட்ட செயலாளர் .பழ.பிரபு வரவேற்புரை ஆற்றினார் .வித்யா மந்திர் நிறுவங்களின் நிறுவனர் திரு.வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் , திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
முன்னதாக வித்யா மந்திர் நிறுவங்களின் நிறுவனர் திரு.வே.சந்திரசேகரன் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ அவர்களும் ,மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி.எழிலரசன் அவர்களுக்கு மாவட்ட இணை செயலாளர் அரங்க .இரவி அவர்களும் ,மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் அவர்களுக்கு திருப்பத்தூர் பாண்டியன் அவர்களும் ,வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளர் தணிகை .ஜி.கருணாநிதி அவர்களுக்கு ஒன்றிய இளைஞ்சரணி பொறுப்பாளர் சிவராஜ்
அவர்களும் ,மாநில பக செயலாளர் பிரின்ஸ் என்னரசு பெரியார் அவர்களுக்கு பெரியார் பெருந்தொண்டர் கி.ஆ.கோபாலன் அவர்களும் பயிலரங்கத்தை நடத்த வந்த துணை பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி.எழிலரசன் அவர்களும்,வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அருள் அவர்களுக்கு வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு அவர்களும் ,கல்லூரி நிர்வாக அலுவலர் செங்கோடன் அவர்களுக்கு வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி அவர்களும் நினைவு பரிசு வழங்கினர் .வாசகர் வட்ட துணை தலைவர் இர.வேங்கடம் நன்றி உரைக்கு பின் மேடை மாநில பக செயலாளர் பிரின்ஸ் என்னரசு பெரியார் அவர்களின் அறிமுக உரைக்காக ஒப்படைக்கபட்டது
பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் இணையப் பயிலரங்கத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார்புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் துணை பேராசிரியர் முனைவர் .மு .இளங்கோவன் அவர்கள் தமிழ்த்தட்டச்சு அறிமுகம் நடந்தது. மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், தமிழ் விசைப்பலகை அறிமுகம், மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, நூலகம், தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, இணைய இதழ்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் இணைய மாநாடுகள், விக்கிப்பீடியா, விக்சனரி, மின்நூல்கம்,மின்னகரமுதலிகள்,இணையவழித் தமிழ்ப்பாடங்கள்,சமூகவலைத்தளங்கள் பற்றிய பல செய்திகளை முற்பகல் வகுப்பில் எடுத்துரைத்தார் .மதியஉணவு இடைவேளைக்கு பிறகு பக துணை தலைவர் அண்ணா.சரவணன் அவர்களின் தமிழா நீ பேசுவது தமிழா என்னும் பாடலுடன் வகுப்புக்கள் தொடங்கியது . இரண்டுமணிமுதல் நான்குமணிவரை செய்முறையாக வலைப்பூ உருவாக்கம் முதல் இணையவழிக் கல்வி பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார் .நிறைவாகப் பயிற்சி பெற்ற மாணவர்களும் பொதுமக்களும் தங்கள் கருத்துகளை வழங்கினர்.
.அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது . இது போன்ற பயிலரங்குகள் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் அல்லது திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுக்க நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்
விடுதலை வாசகர் வட்ட ஜூன் மாத கருத்தரங்க நிகழ்வுகளின் புகைப்படங்களை http://tirupatturdk.blogspot. com என்னும் வலை பூ தளத்தில் காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக