ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகம் ,பகுத்தறிவாளர் கழகம் மற்றும்
விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 138 வது பிறந்த நாள் மிகுந்த உற்சாகத்துடனும் எழுச்சியுடனும்
கொண்டாடப்பட்டது .ஊற்றங்கரை நகரில் அமைந்துள்ள இரண்டு அய்யா சிலைகளும் வண்ண
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அய்யா பிறந்த நாள் வாழ்த்து பதாகைகள் கட்டப்பட்டு துணிக்கொடிகள்,காகிதக்கொடிகள்
கட்டப்பட்டு பார்ப்போரை கவரும் விதத்தில் அமையப்பட்டிருந்தது
ஊற்றங்கரையின் நான்கு முனை
சந்திப்பின் மையப்பகுதி முழுவதும் அய்யா உருவப்படங்கள் பல வண்ணப்பதாகைகளாக
கட்டப்பட்டிருந்தது .நகரில் எத்திசை நோக்கினும் அய்யா உருவப்படங்களே காட்சி
அளித்தன .துணிக்கொடிகளாலும் ,காகிதக்கொடிகளாலும் நான்கு முனை சந்திப்பு
அலங்கரிக்கப்பட்டிருந்தது
அய்யா அவர்களின் பிறந்த நாளையொட்டி ஊற்றங்கரை ,கல்லாவி ஆகிய
நகரங்களில் அமைந்துள்ள அய்யா சிலைகளுக்கும் ,நகரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில்
அய்யா உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து வாழ்த்துக்களை பகிர்வது என திட்டமிட்டு 2
நான்கு சக்கர வாகனங்களிலும் 1௦ க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களிலும்
கழகக்கொடியுடன் பயணிப்பது என முடிவு செய்யப்பட்டு ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக
அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட
அமைப்பாளர் சித.வீரமணி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ.சிவராஜ் ,ஊற்றங்கரை நகர
தலைவர் இரா.வேங்கடம் ,நகர செயலர் த.சந்திரசேகரன் ,மேனாள் மாவட்ட செயலர் பழ.பிரபு
,மாவட்ட திமுக கலை ,இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் அமைப்பாளர் தணிகை .ஜி.கருணாநிதி
,விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் சி.சாமிநாதன் ,மேனாள் இணை இயக்குனர்
மரு.வெ.தேவராசு ,வழக்கறிஞர் ஜெயசீலன் ,மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி ,மேனாள்
நகர செயலர் முனி.வெங்கடேசன் ,பெரியார் பெருந்தொண்டர் போரப்பா ,வே .முருகேசன்
,க.துரை ,ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உலகநாதன் ,நகர மகளிரணி அமைப்பாளர் ம.வித்யா இளைஞரணி
தோழர்கள் க.திருப்பதி ,ச.அலூத் ,அருண்,ஆசிரியர் முருகன் உள்ளிட்ட பல தோழர்கள்
கலந்து கொண்டனர்
காலை 7 மணியளவில் தந்தை பெரியார் பிறந்த நாளன்று தனது பிறந்தநாளை
கொண்டாடும் பெரியார் பிஞ்சு இன்னிசை அய்யா சிலையருகே தோழர்கள் அனைவருக்கும்
இனிப்புக்களை வழங்கினார் .பெரியார் பிஞ்சு இன்னிசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த
பின்னர் கழக்கொடி கட்டிய இரு சக்கர வாகனங்கள் ஒன்றான் பின் ஒன்றாக அதை தொடர்ந்து
நான்கு சக்கர வாகனங்கள் தொடர கல்லாவி நோக்கி குழு பயணப்பட்டது
சிலைக்கு மாலை அணிவிக்கும் தோழர்கள் |
காலை 7.3௦ மணியளவில் கல்லாவி பேருந்து நிலையம் அருகில்
அமைக்கப்பட்டிருந்த அறிவாசான் தந்தை பெரியார் சிலைக்கு ஊற்றங்கரை ஒன்றிய
அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தலைமையில் மேனாள் ஒன்றிய பொறுப்பாளர்
பொன்முடி அவர்கள் மாலை அணிவித்தார் ஆரியத்தை மாய்க்க வந்த தந்தை பெரியார் வாழ்க
!திராவிடத்தந்தை எங்கள் அய்யா வாழ்க ! என்கிற ஒலி முழக்கங்கள் ஒலிக்க அனைவருக்கும்
இனிப்பு வழங்கப்பட்டது
காலை சிற்றுண்டிக்கு பின்னர் ஊற்றங்கரை இந்திரா நகரில் முதுபெரும்
பெரியார் தொண்டர் சி.சாமிநாதன் அவர்கள் தலைமையில் அய்யா அவர்களின் உருவப்படத்திற்கு முனிரத்தினம்
ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்தார்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அய்யா பிறந்த நாள் விழா |
ஊற்றங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த
தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ள தலைமை ஆசிரியர்
பொ.பொன்னுசாமி அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை
அணிவித்தார்
எஸ்.வி.டி திருமண மண்டபத்தின் உரிமையாளர் தியாகராஜன் அவர்கள் தலைமையில் அய்யா பிறந்தநாள் |
கல்லாவி சாலையில்
அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்
உருவப்படத்திற்கு மதிமுக நகர பொறுப்பாளர் ராஜி அவர்களும் மருந்து வணிகர்கள்
சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் இர.திருநாவுக்கரசு அவர்களும் முன்னிலை
வகிக்க தொழில் அதிபரும் எஸ்.வி.டி திருமண மண்டபத்தின் உரிமையாளர் தியாகராஜன்
அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்தார்
ஊற்றங்கரை கல்லாவி சாலையில் உள்ள தமிழ்குயில் விரைவு உணவகத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு பெரியாரணி பயிற்ருனர் முனி.வெங்கடேசன் முன்னிலை வகிக்க திமுக நகர செயலாளர் இர .பாபு சிவக்குமார் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
திமுக நகர செயலர் தலைமையில் தமிழ்குயில் உணவகத்தில் |
ஊற்றங்கரை கல்லாவி சாலையில் உள்ள தமிழ்குயில் விரைவு உணவகத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு பெரியாரணி பயிற்ருனர் முனி.வெங்கடேசன் முன்னிலை வகிக்க திமுக நகர செயலாளர் இர .பாபு சிவக்குமார் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பெரியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் சீனி.திருமால்முருகன் மாலை அணிவித்து மரியாதை |
ஊற்றங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த
தந்தை பெரியார் அவர்களின்
உருவப்படத்திற்கு பள்ளியின்
ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின்
சிண்டிகேட் உறுப்பினரும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான சீனி.திருமால் முருகன் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு
மத்தியில் மாலை அணிவித்தார்
ஊற்றங்கரை காய்கறி மார்கெட்டில் அய்யா பிறந்த நாள் விழா |
ஊற்றங்கரை காய்கறி மார்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார்
அவர்களின் உருவப்படத்திற்கு நகர
செயலர் த.சந்திரசேகரன் அவர்கள் தலைமை
தாங்க அதியமான் டுட்டோரியல் நிறுவனத்தின்பொறுப்பாளர் அண்ணாமலை முன்னிலை வகிக்க
வழக்கறிஞர் ஜெயசீலன் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை
அணிவித்தார்
தமிழ்குடிலில் தந்தை பெரியாருக்கு விழா |
ஊற்றங்கரை நகர திராவிடர் கழகத்தலைவர் இரா.வேங்கடம் அவர்களின் இல்லமான
தமிழ்குடிலில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு ஆசிரியை சொர்ணம் அவர்கள் மாலை
அணிவித்து இனிப்புகள் வழங்கினார்
ஊற்றங்கரை வட்டாட்சியர்
அலுவலக சாலையில் தணிகை டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் அருகே வைக்கப்பட்டிருந்த தந்தை
பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு
திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளர் தணிகை ஜி கருணாநிதி
அவர்கள் தலைமை தாங்க மேனாள் இணை இயக்குனர் வெ.தேவராசு அவர்கள் அவர்கள் கழகத்
தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற ஊற்றங்கரை நகரின் சிறந்த பள்ளிகளுள்
ஒன்றான வித்யா மந்திர் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு பள்ளியின் ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ள பெரியார்
பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான கல்விவள்ளல் வே.சந்திரசேகரன் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு
மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

ஊற்றங்கரை காமராஜர் நகரில் அமைந்துள்ள மண்டலத்தலைவர் பழ.வெங்கடாசலம்
அவர்கள் இல்லம் அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு ஊற்றங்கரை அரசினர் மாணவர்
விடுதியின் காப்பாளர் சம்பத் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
எல் ஐ சி அலுவலகம் அருகே அய்யா படத்திற்கு மாலை |
ஊற்றங்கரை காமராஜ் நகர் எல் .ஐ .சி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை
பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு
பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற வே.முருகேசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்
இன எழுச்சி இல்லத்தில் அய்யா பிறந்த நாள் விழா |
சுயமாரியாதை சுடரொளி அ.பழனியப்பன் அவர்களின் இன எழுச்சி இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த
தந்தை பெரியார் அவர்களின்
உருவப்படத்திற்கு திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவின் அமைப்பாளர்
பா.அமானுல்லா தோழர்களின் ஒலி
முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பெரியார் நகர் குடியிருப்பில் அய்யா விழா |
ஊற்றங்கரை பெரியார் நகர் குடியிருப்போர் சார்பில் தந்தை பெரியார்
அவர்களின் உருவப்படத்திற்கு
பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற வே.முருகேசன் அவர்கள் தலைமை தாங்க பகுத்தறிவாளர்
கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சித.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்
ஊற்றங்கரை கடலூர் மெயின் ரோடு கவின் மருத்துவமனை அருகே
அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ படத்திற்கு மேனாள் இணை
இயக்குனரும்,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணை தலைவருமான மரு.தேவராசு அவர்கள்
மாலை அணிவித்து தோழர்களுக்கு இனிப்புக்களை வழங்கி அய்யா பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்தார்
தேசிய நல்லாசிரியர் வரதராசன் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை |
அப்பி நாயக்கன் பட்டியில் உயரப்பறக்கும் கழக கொடி |
அப்பிநாயக்கன்பட்டியில் தந்தை பெரியார் அவர்களின் 138 வது பிறந்த நாளையொட்டி பெரியார் படம் வைக்கப்பட்டு சிறப்பாக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.வழக்கறிஞர் ஜெயசீலன் கழகக்கொடியை ஏற்றி வைத்தார் தேசிய
நல்லாசிரியர் விருது பெற்ற வரதராசன் அவர்கள் அய்யா அவர்களின் திருஉருவ படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந் நிகழ்ச்சியில் ஊற்றங்கரை ஒன்றிய
திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட
பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் சித.வீரமணி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
செ.சிவராஜ் ,ஊற்றங்கரை நகர தலைவர் இரா.வேங்கடம் ,நகர செயலர் த.சந்திரசேகரன் ,மேனாள்
மாவட்ட செயலர் பழ.பிரபு ,மாவட்ட திமுக கலை ,இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின்
அமைப்பாளர் தணிகை .ஜி.கருணாநிதி ,விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் சி.சாமிநாதன்
,மேனாள் இணை இயக்குனர் மரு.வெ.தேவராசு ,வழக்கறிஞர் ஜெயசீலன் ,மேனாள் ஒன்றிய
பொறுப்பாளர் பொன்முடி ,மேனாள் நகர செயலர் முனி.வெங்கடேசன் ,பெரியார் பெருந்தொண்டர்
போரப்பா ,வே .முருகேசன் ,க.துரை ,ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உலகநாதன் ,நகர மகளிரணி
அமைப்பாளர் ம.வித்யா ,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வசந்தமல்லி இளைஞரணி தோழர்கள்
க.திருப்பதி ,ச.அலூத் ,அருண், ஆசிரியர் முருகன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 138வது பிறந்தநாள் விழா ஊற்றங்கரை திருமண கூடத்தில் கொண்டாடப்பட்டது .முன்னதாக தந்தை பெரியார்
அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் திமுக ஒன்றிய செயலர் வ.சுவாமிநாதன்
அவர்கள் தலைமையில் ‘’பெரியார் பிறந்த நாள் கேக் ‘’ வெட்டி கொண்டாடப்பட்டது.வருகிற
அக்டோபர் 12 ஆம் தேதி தனது 84 ஆம்
பிறந்தநாளை கொண்டாடும் பெரியார் பெருந்தொண்டர் சி.சுவாமிநாதன் அவர்கள் 138 என்கிற எண்ணை கொண்ட மெழுகுவர்த்தியை அனைத்து கேக் வெட்டி அனைத்து
தோழர்களுக்கும் வழங்கினார்


![]() |
நேரலை ஒளிபரப்பு![]() |


அதனை தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் நடைபெற்று கொண்டிருந்த
பெரியார் பிறந்த நாள் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பபட்டது .மாணவர் கருத்தரங்கம் ,அதனை
தொடர்ந்து நடைபெற்ற மணவிழா வழக்கறிஞர் அருள்மொழி ,மேனாள் அமைச்சர் ஆ.இராசா
,பேராசிரியர் சுபவீ ,பழ.கருப்பையா ,கவிஞர் கலி.பூங்குன்றன் ,தமிழர் தலைவர் வீரமணி
ஆகியோர்களின் உரைகளை கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தனர் .இந்த நிகழ்வல் ஏராளமான
திராவிடர் கழக தோழர்களும் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்ட
தோழர்களும் ,திமுக ,விடுதலை சிறுத்தை தோழர்களும் கலந்து கொண்டனர் விழாவின்
அனைவருக்கும் புலால் உணவு விருந்து அளிக்கப்பட்டது .அதனை தொடர்ந்து திருப்பத்தூர்
மாவட்ட கழகம் சார்பில் 3.3௦ மணியளவில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து
கொண்டு அய்யா பிறந்த நாள் விழா ஊற்றங்கரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது