
திருப்பத்தூர், ஆக. 29- திருப் பத்தூர்
மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் 24.08.2013 சனிக் கிழமை மாலை 5 மணிக்கு
மாவட்ட தலைவர் கே.சி.எழில ரசன் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில மகளிர்
பாசறை பொருளாளர் எ.அகிலா தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ,மாநில
ப.க.துணை தலைவர் அண்ணா. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மண்டல
செயலாளர் பழ. வெங்கடாசலம் அவர்கள் கருத் துரை ஆற்றினார். மாவட்ட துணை
செயலாளர் எம்.கே. எஸ்.இளங்கோவன் வரவேற் புரை ஆற்ற, கழக தோழர் களும்,
பொறுப்பாளர்களும் தந்தை பிறந்தநாள் விழாவினை வெகு சிறப்பாக கொண்டாடு
வதற்கான வழிமுறைகளை எடுத்து கூறினார்கள்.
இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1. திராவிட இனத்தின் தலை வராம் உலக
மனிதநேய மாண் பாளர் தந்தை பெரியார் அவர் களின் 135ஆவது பிறந்தநாள் விழாவினை
வெகு சிறப்பாக கொண்டாடுவது என்றும், கழக தோழர்கள் தங்கள் இல்லங் களில்
கொடி ஏற்றியும் உற்றார் உறவினர்களுக்கு இனிப்பு வழங் கியும் பெரியார்
படத்திற்கு மாலைகள்அணிவித்தும் ஊர் தோறும் இல்லந்தோறும் சிறப் பாக
கொண்டாடுவது என தீர் மானிக்கப்படுகிறது.
2. தந்தை பெரியாரின் பிறந்த நாள்
விழாவிற்கு திருப்பத்தூர் வருகை தரும் நமது கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்
களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று சோலையார் பேட் டையிலிருந்து இருசக்கர,
நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கொடி அணிவகுப்பு டன் வரவேற்று(17.09.2013)
சிறப் பிப்பது என்று தீர்மானிக்கப்படு கிறது. அன்று மாலை நடை பெறும்
பெரியார் பிறந்தநாள் விழாவில் நலிந்தோர்க்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது
எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
3.ஆகஸ்ட் 31 மற்றும் செப் 1இல்
திருப்பத்தூர் கழக மாவட் டத்தின் சார்பில் நடைபெற உள்ள பெரியார் 1000
நிகழ்ச்சியில் குறைந்தது 1000 மாணவர்களை பங்கேற்க செய்து சிறப்பாக
நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.
4.மாநில அளவிலான மகளிர் பயிற்சிப்
பட்டறையை ஏலகிரி யில் தலைமை அறிவிக்கின்ற நாளில் மகளிரணி சார்பில் சிறப்பாக
நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
5.மண்ணின் மைந்தர் ஊற் றங்கரை மாண்புமிகு
நீதியரசர் பானுமதி அவர்கள் ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக
பதவி ஏற்க உள் ளதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று, பாராட்டி இக் கமிட்டி
மகிழ்கிறது.
6.மராட்டிய மாநிலத்தில்
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பகுத்தறிவாளர் நரேந்திரதபோல்கர்
அவர்களை கொலை செய்த மதவெறி கும் பலை இக்கமிட்டி வன்மையாக கண்டிப்பதுடன்,
அவருக்கு வீர வணக்கத்தை தெவித்துக்கொள் கிறது.
இந்த கலந்துரையாடல் கூட் டத்தில்
100-க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்து கொண் டனர். இறுதியில் மண்டல
மாணவரணி செயலாளர் K.C.E சிற்றரசன் நன்றி கூறினார்.
Please support for திருப்பத்தூர் மாவட்டம் http://www.facebook.com/TirupatturDistrict
பதிலளிநீக்கு