ஊற்றங்கரையில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை காப்பு பிரச்சார பொதுக்கூட்டம்
பிப் 7 ஊற்றங்கரை ,ஊற்றங்கரை திராவிடர் கழகம் சார்பில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை காப்பு பிரச்சார பொதுக்கூட்டம் மிக எழுச்சிகரமாக நடைப்பெற்றது . ஊற்றங்கரை அறிவாசான் தந்தை பெரியார் சிலை அருகில் சுயமரியாதை சுடரொளிகள் பழனியப்பன் ,சிதம்பரம் ,பொன்னுசாமி நினைவரங்கத்தில் நடைப்பெற்றது.இந் நிகழ்ச்சிக்கு ஒன்றிய திக பொறுப்பாளர் நிருபர் .கீ.ஆ .கோபாலன் தலைமை தாங்க நகர திக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி ,ஒன்றிய பக பொறுப்பாளர் சு.சுவாமிநாதன் ,நகர செயாளர் முனி.வெங்கடேசன் ,ஒன்றிய அமைப்பாளர் செ.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர திமுக செயலாளர் இர.பாபு சிவக்குமார் ,மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளர் தணிகை ஜி.கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டனர் . முன்னதாக பிரச்சார பயணம் ஊற்றங்கரை வந்த உடன் கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் .துரை.சந்திரசேகரன் அவர்கள் அய்யா சிலைக்கு மாலை அணிவித்தார் .ஒன்றிய கழகத் தலைவர் மா.ரவிச்சந்திரன் வரவேற்ப்புரை ஆற்ற மக்கள் பலரும் ரசிக்கும் வண்ணம் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியினை ஈட்டி .கணேசன் நடத்தினார் .அதன் பின் தலைமை கழக சொற்பொழிவாளர் முத்து..கதிரவன் காலத் தாமதமாகும் ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் குறித்தும் காவரி நீர் தரப்படாமல் தமிழகம் வஞ்சிக்கபடுவது குறித்தும் மிக சிறப்பானதொரு உரையாற்றினார் .பிரச்சார பயணத்தை வாழ்த்தி நகர திமுக செயலாளர் இர .பாபு சிவக்குமார் உரையாற்றினார் .பின்னர் கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் .துரை.சந்திரசேகரன் அவர்கள் நீண்ட மிக சிறப்பான உரையாற்றி நிறைவாக தருமபுரி மாவட்டம் மற்றும் ஊற்றங்கரைக்கு அருகில் இருக்கும் சில ஊர்களில் நடத்தப்படும் காட்டேரி வதந்தி குறித்தும் விளக்கினார்
இந் நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் இர.அன்பு ,ஒன்றிய பக பொறுப்பாளர் சித.அருள் மாவட்டசெயலாளர் வி.ஜி.இளங்கோ ,மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் , மண்டல மாணவரணி செயலாளர் சிற்றரசன் க,துரை, தா.சந்திரசே கரன், செ.பொன்முடி, தமிழ்குடிமகன், சி.தண்டபாணி, செ.சிவராசு,கு, இரு.கிருட்டிணன்,மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்குடிமகன் அன்பழகன், பெரு மாள், பழனி, பொன். கவுதமன் ,ஒன்றிய திக பொறுப்பபாளர் சி.சாமிநாதன்,மாரம்பட்டி ரவி ,ஆசிரியர் இர.பழனி , மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் இந்திராகாந்தி ,ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் வசந்தமல்லி ,நகர கழகத் தலைவர் இர.வேங்கடம் ,கவிஞர் சுப்புலட்சுமி ,திருப்பத்தூர் பொறுப்பாளர் காளிதாஸ் ,பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் ,இன உணர்வாளர்களும் கலந்து கொண்டனர் .நிகழ்வினை ஒன்றிய இளைஞ்சரணி பொறுப்பாளர் சிவராசு ஒருகிணைத்தார் .நகர கழக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் நன்றி உரையாற்ற நிகழ்ச்சி மிகச் சிறப்புடன் முடிந்தது