திருப்பம் தந்த திருப்பத்தூர் !முதல் தவணையாக ரூ 10 இலட்சம் !
கழக பொது செயலாளர் .கலி .பூங்குன்றன் அவர்களிடம் வழங்கப்பட்டது
*தமிழர் தலைவரின் 79 ஆவது பிறந்த நாளையொட்டி 79 விடுதலை ஆயுள் சந்தாக்கள் !
*தமிழர் தலைவரின் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணி நிறைவையொட்டி 500 ஆண்டு சந்தாக்கள் !
திருப்பத்தூர் 21
விடுதலை ஆசிரியராக 50 ஆம் ஆண்டில் முத்திரை பதித்த நமது கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி காட்டும் வகையில் 50000 சந்தாக்களை பரிசாக வழங்குவது என பொதுக் குழுவில் எடுத்த முடிவின் படி திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் திரட்டப்பட்ட விடுதலை சந்தாக்களை ஒப்படைக்கும் கூட்டம் திசம்பர் திங்கள் 21 ஆம் தேதி புதன் கிழமை மாலை 6 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் நடைப்பெற்றது
திராவிடர் கழக பொதுச்செயலாளர்.கவிஞர் .கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி.எழிலரசன் ,வேலூர் மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி ,மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் ,மாவட்ட செயலாளர் வி.ஜி .இளங்கோ,மாநில மகளிரணி பொருளாளர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
திருப்பத்தூர் ஒன்றிய கழகம்
திருப்பத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் திருப்பத்தூர் நகரின் வணிக பெருமக்கள் ,கழக ஆதரவாளர்கள் ,கிருத்துவ அமைப்பினை சார்ந்த நண்பர்கள் ,ரோட்டரி அமைப்பினை சார்ந்த நண்பர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது .திருப்பத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக 49 ஆயுள் சந்தாக்களும் 123 ஆண்டு சந்தாக்களும் சேகரித்து அதற்க்காக தொகை ரூபாய் 5,௦௦,௦௦௦த்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ,மாவட்ட இளைஞ்சரணி துணை செயலாளர் பழனிச்சாமி ,புலவர் அண்ணாமலை ,ஆட்டோ பாண்டியன் ,அன்பழகன் ,இரா கனகராஜ் ,அக்ரி.அரவிந்தன் ,திருப்பத்தூர் நகர தலைவர் காளிதாஸ் கே.கே.சி கமலா அம்மாள் ,மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா,நீலாயதாட்சினி ஆகியோர் அளித்தனர்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
கடந்த ஓராண்டாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ,அதன் பொறுப்பாளர்கள் அனைவரும் மனமகிழ்ந்து ஆயுள் சந்தா அளித்தனர் .மேலும் ஊற்றங்கரையில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் விடுதலைக்கு சந்தா அளித்தன வணிக பெருமக்கள் தமிழ் சங்க உறுப்பினர்கள் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது.ஊற்றங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் சார்பில் 2 ஆயுள் சந்தாவும் ,அதியமான் கல்வி நிறுவனத்தின் சார்பில் 3 ஆயுள் சந்தாவும் சென்னைசங்கர் IAS அகாடமி சார்பில் 1 ஆயுள் சந்தாவும் பெறப்பட்டது .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் முதற்கட்டமாக 12 ஆயுள் சந்தாவினையும் 106 ஆண்டு சந்தாவினையும் சேகரித்து அதற்க்கான தொகை ரூபாய் 2 ,08 ,600 ய் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி,வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு .அமைப்பாளர் பழ .வெங்கடாசலம் வழங்கினர்
மத்தூர் ஒன்றிய கழகம்
மத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் அரசு ஊழியர்கள்,ஆசிரிய பெருமக்கள் ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது.மகளிரணி சார்பில் சிறப்பாக சந்தா பெற்றுத் தந்த மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் இந்திரா காந்தி பாராட்டப்பட்டார் மத்தூர் ஒன்றிய கழக சார்பில் முதற்கட்டமாக 6ஆயுள் சந்தாவும் ,80 ஆண்டு சந்தா வும் சேகரிக்கப் பட்டு அதற்குரிய தொகையாக ரூபாய் 1 ,80 ,௦௦௦ மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மகளிர் பாசறை பொறுப்பாளர் இந்திரா காந்தி, மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன்,கே.டி.மணி , திருப்பதி ஆகியோர் வழங்கினர்
சோலையார்பேட்டை ஒன்றிய கழகம்
சோலையார் பேட்டை ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக 12 ஆயுள் சந்தாவும் 70 ஆண்டு சந்தாவும் , அரசு ஊழியர்கள்,ஆசிரிய பெருமக்கள் ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் சேகரிக்கப்பட்டு அதற்க்கான தொகையாக ரூபாய் 2 ,௦௦,௦௦௦ த்தையும் ஆம்பூர் ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 1 ஆயுள் 5 ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூபாய் 16000 த்தையும் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மாவட்ட பக தலைவர் சி.தமிழ்ச்செல்வன் ,சோலையார்பேட்டை பெரியார் தாசன் ,தங்க .அசோகன் ,இராசேந்திரன் ,க.மதியழகன் ஆகியோர் வழங்கினர்
,குவிந்த சந்தாக்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களும் போட்டி போட்டுக் கொண்டு சந்தா சேகரிப்பில் ஈடுபட்டன .அனைத்து ஒன்றியங்களில் இருந்து திரட்டப்பட்ட ஆண்டு ,ஆயுள் சந்தாக்களை பட்டியலிட்டு முதற்கட்டமாக மொத்தம் 79 ஆயுள் சந்தா 384 ஆண்டு சந்தாவிற்கான முகவரி பட்டியலையும் அதற்க்கான காசோலை ரூபாய் 10 ,௦௦,000 த்தை முதற்கட்டமாக கழக பொதுச் செயலாளர் கவிஞர் .கலி .பூங்குன்றன் அவர்களிடம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் .கே.சி எழிலரசன் வழங்கினார் .மேலும் அய்யா நினைவு நாள் அன்று விழா மேடையில் இப்போது அளித்த சந்தாவினையும் சேர்த்து தமிழர் தலைவர் அவர்களின் 79 ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 79 ஆயுள் சந்தாவினையும் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணி நிறைவை குறிப்பிடும் வகையில் 500 ஆண்டு சந்தாவினை அளிப்பதாக உறுதி அளித்தார்