திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்
போர்க் குற்றவாளி ராஜபக்சேவை உலக குற்றவாளிக் கூண்டில் ஏற்றக் கோரியும் ஈழத் தமிழர் மீட்சியை வலியுறுத்தியும்
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் !
200 க்கும் மேற்ப்பட்ட கழக தோழர்கள் கழக கொடிகளை ஏந்தி உணர்ச்சி முழக்கமிட்டபடி பங்கேற்றனர் .
ஏப்பிரல் 28திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் போர்க் குற்றவாளி ராஜபக்சேவை உலக குற்றவாளிக் கூண்டில் ஏற்றக் கோரியும் ஈழத் தமிழர் மீட்சியை வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடைபெற்றது .இவ் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார் . 200 க்கும் மேற்ப்பட்ட தோழர்களும் 100 க்கும் மேற்ப்பட்ட மகளிரணியினரும் 100 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்
ஆர்பாட்ட விளக்க உரை
ஆர்பாட்டத்தினை விளக்கி சுந்திரம்பள்ளி பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி ,திருப்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் ,புலவர் அண்ணாமலை ,மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் சிறப்புரையாற்றினர் இறுதியாக மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன் அவர்கள் ஆர்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றி முழக்கமிட்டார்
பங்கேற்றோர்
இந் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ , மாவட்ட இணை செயலாளர் அரங்க .ரவி ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ,மாநில மகிளிரணி பொருளாளர் அகிலா,மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா ,கே.கே.சி.கமலாஅம்மாள் ,ஆசிரியை அழகுமணி ,இந்திராகாந்தி ,சுப்புலட்சுமி ,மாவட்ட ப.க.தலைவர் தமிழ்ச்செல்வன் ,மாவட்ட ப.க,பொறுப்பாளர் சித.வீரமணி மாவட்ட மாணவரணி தலைவர் கமல் ,ஆனந்தன் ,மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிடராசன் இலஞ்சரணி பொறுப்பாளர் வண்டி .ஆறுமுகம் ,பொதுக்குழு உறுப்பினர் வசந்தி கணேசன் ,கட்டரசம்பட்டி குமார் ,ராமச்சந்திரன் ,காவேரி ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,சித.அருள் ,காளிதாஸ்,கனகராஜ் ,,திருப்பதி,வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,, சாமி. அரசிளங்கோ,சி.சாமிநாதன் ,அண்ணா,அப்பாசாமி,நிருபர்.கோபால் துரை,தமிழ்குடிமகன் ,உள்ளிட்ட ஏராளமான திருப்பத்தூர் ,ஜோலார்பேட்டை ,கந்திலி ,ஊற்றங்கரை ,மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர்
திணறிய காவல் துறை
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பத்தூர் சாலையில் காவல்துறை எதிர்பார்பிற்கும் அதிகமாக தோழர்கள் குவிந்ததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை திணறியது .கழக தோழர்களின் உணர்சிகரமான முழக்கங்களையும் ,கட்டுபாடுடன் ஆர்பாட்டத்தை நடத்தும் பாங்கினையும் பொது மக்கள் பாராட்டினர்புகைப்படங்கள் ,விடியோ காண
ஆர்பாட்டத்தின் புகைப்படங்கள் விடியோக்களை மாவட்ட திராவிடர் கழகத்தின் வலைபூதளம் http://tirupatturdk.blogspot.com/ பகுதியில் காணலாம் புகைப்படங்கள் வேண்டுவோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக