ஊற்றங்கரை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்-முனியம்மாள் கனியமுதன் ஆகியோரை ஆதரித்து தமிழர் தலைவர் கி.வீரமணி சூறாவளி பிரச்சாரம் செய்தார் அதன் விவரம் வருமாறு:
5.4.2011 இரவு 8 மணியளவில், ஊற்றங்கரை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முனியம்மாள் கனியமுதன் அவர்களை ஆதரித்து, திராவிடர் கழகம் சார்பில், ஊற்றங்கரை தந்தை பெரியார் சிலை அருகில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில், ஊற்றங்கரை ஒன்றிய தி.க தலைவர் மா.இரவிச்சந்திரன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.
திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.கே.சி. எழிலரசன் தலைமை வகித்தார். வேலூர் மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தா.திருப்பதி, செயலாளர் கோ.திராவிடமணி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ, சேலம் மண்டல செயலாளர் மு.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வீதி நாடகம்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், வீதி நாடக இயக்குநர் தெற்குநத்தம் பி.பெரியார்நேசன் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு உரை நிகழ்த்தினார்.
தமிழர் தலைவருக்கு சிறப்பு
தமிழர் தலைவர் அவர்களுக்கு வேட்பாளர் முனியம்மாள் கனியமுதன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே..க.சி.எழிலரசன், திராவிடர் கழக, தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் அதிகஅளவில் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.
ஊற்றங்கரை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முனியம்மாள் கனியமுதன் தனக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
இறுதியாக, தமிழர்தலைவர்கி.வீரமணி அவர்கள் ஊற்றங்கரை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முனியம்மாள் கனியமுதன் அவர்களை ஆதரித்து, அவருக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் மாநில தி.க மகளிரணி பொருளாளர் எ.அகிலா, மாநில ப.க துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வி.சி செயலாளர் கி.கோவிந்தன், கொங்குநாடு முன் னேற்றக் கழக மா.செயலாளர் எம்.செல்வராஜ், முன்னாள் பா.ம.க மாவட்ட செயலாளர் க.வெங் கடாசலபதி, ஒன்றிய தி.மு.க செயலாளர் எக்கூர் த.செல்வம், ஊராட்சி குழு தலைவர் இ.காங்கிரஸ் ஜெ.எஸ்.ஆறுமுகம், நகர தி.மு.க. செயலாளர் இரா.பாபுசிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் மா.துணைச் செயலாளர் த.அசோகன், கொங்குநாடு முன்னேற்றக் கழக ஒன்றிய தலைவர் கே.பூபதி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ஜி.கருணாநிதி, மாவட்ட மகளிரணி செயலாளர் ம.கவிதா, மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அரங்க.இரவி உள்ளிட்ட திராவிடர் கழக, திராவிட முன்னேற்ற கழக, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர், பொறுப் பாளர்கள், மகளிர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக, ஊற்றங்கரை ஒன்றிய தி.க. பொறுப்பாளர் அண்ணா.அப்பாசாமி நன்றி கூறினார்.
நம் திருப்பத்தூர் பேஜ்'கு லைக் போடுங்க
பதிலளிநீக்குhttp://www.facebook.com/TirupatturDistrict