திங்கள், 5 ஆகஸ்ட், 2019

அரசர்கள் நடத்திய இனமான கொள்கை குடும்பங்களின் இணைப்பு விழா !



மணவிழா மேடையில் குடும்பத்தினர் 


இரத்த உறவுகளை காட்டிலும் கொள்கை உறவு நெருக்கமானது என்பதற்கு உதாரணமாக  செல்வங்கள் மங்கையர்க்கரசி –அமுதன்  மணவிழா சென்னையில் கடந்த ஞாயிறு அன்று இராயப்பேட்டை ஒய் .எம்.சி ஏ மைதானத்தில் நடைபெற்றது . ஜாதி பார்த்து ,நாள் பார்த்து ,ஜாதகம் பார்த்து நடைபெற்ற மணவிழா அல்ல அது .  கொள்கையால் இணைந்த இரண்டு நண்பர்கள் உறவுகளாய் இணைந்த கொள்கை குடும்பங்களின் இணைப்பு விழா அது !
 
இடமிருந்து காமராஜ் ,சவுரி ராஜன் ,பேரறிவாளன் குமரகுருபன் ,மின்னல் ஆகியோர் பெரியார் சமூக காப்பணியில் 

        சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் இராணுவ சீருடை அணிந்து முதல் அணியாக பெரியார் சமூக காப்பணியில் களமிறங்கிய இரண்டு இளைஞர்கள் வலம் இடம் , வலம் இடம் என்று பூட்ஸ் கால்கள் தேய அணிவகுப்பிபில் நடக்கும்போது ஒருவருக்கொருவர் ஆறுதலாய் பேசி ,பழகி நண்பர்களாக மாறினர். இருவரிடத்திலும் ஜாதி ,ஊர் ,தொழில் சார்ந்து எந்த ஒற்றுமையும் இல்லை இருந்த ஒரே ஒற்றுமை பெரியார் ! 


அந்த இரு நண்பர்களில் ஒருவர் எழிலரசன் மற்றொவர் சவுரிராசன்.இருவர் பெயரிலும் உள்ள மற்றொரு ஒற்றுமை அரசன் என்பது . பிரிக்கப்படாத வடார்க்காடு மாவட்டத்தில் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆகியோரின் முரட்டு பக்தனாக வலம் வந்தவர் கே.கே சின்னராஜ் அவர்கள் .தனது இறுதி மூச்சு வரை தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் கட்டுபாடுமிக்க தளகர்த்தராக வாழ்ந்தவர் .அவர் குடும்பத்தில் கொள்கை வாரிசாக திராவிட இயக்கத்திற்கு கிடைத்தவர் தான் நண்பர் கே.சி எழிலரசன் அவர்கள் .பகுத்தறிவு ,இனநலம் ,தமிழீழம் ,ஜாதி ஒழிப்பு ,ரோட்டரி என பல்வேறு களங்களில் அவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்கா .
அதே போல் தான் சவுரிராசன் .உலகத்தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர தமிழ் சான்றோர் பேரவையை நிறுவிய தமிழ் வள்ளல் ஆனா ரூனா என்றழைக்கப்பட்ட தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தின் பொறுப்பாளராய் இருந்த  அருணாசலம் அவர்களின் புதல்வர் .இன்றைக்கு ஆல் போல் பரந்து விரிந்த நிறுவனமாய் விளங்கும் அடையாறு மாணவர் நகலகத்தின் உரிமையாளர் .திராவிடர் கழகத்தில் தொடங்கிய அவரின் பொதுவாழ்க்கை  மதிமுக ,மக்கள் நீதி மையம் என அரசியலில் நீட்சி பெற்றிருந்தாலும் தமிழ் ,தமிழ் இனம் என்கிற மையத்தில் இருந்து செலாற்றி வருகிறவர் 

மணமகிழ்ச்சி  விழாவில் செல்வங்களை பாராட்டிய தமிழர் தலைவர்


பெரியார் சமூக காப்பணியில் தொடங்கிய இந்த இரண்டு நண்பர்களின் நட்பு கால ஓட்டத்தில் சற்று விடுபட்டிருந்த நிலையில் நண்பர் எழிலரசன் -அகிலா ஆகியோரின் 25  ஆம் ஆண்டு மணவிழாவையொட்டி நடத்தபட்ட “மணமகிழ்ச்சி விழா” மீண்டும் நெருக்கமான நட்பை இருவருக்குள் ஏற்படுத்தி இருந்தது.பெற்றோரின் 25  ஆம் ஆண்டு மணவிழாவை பிள்ளைகள் பொறுப்புடன் நடத்திய விதமும் ,அன்பு செல்வி மங்கையர்க்கரசி ஆற்றிய நன்றிஉரையும் எவராலும் மறக்க  முடியாது . நான் உணர்ந்தவரை அந்த நிகழ்வே இந்த மணவிழாவிற்கு அடித்தளமாய் அமைந்திருக்கலாம் .
அன்புச் செல்வி மங்கையர்க்கரசியை குழந்தையாய் மடியில் வைத்து  .திராவிடர் கழக ஊர்வலங்களில் முழக்கமிட்டு வரும்போது, திராவிட மாணவர் கழகத்தில் மருத்துவ மாணவியாக  தலைமை தாங்கிய போது என ஒவ்வொரு அங்குல வளர்ச்சியையும்  வியந்து ரசித்து பார்த்திருக்கிறேன்  . புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெண் குழந்தை தாலாட்டில் சோலை மலரே ! சுவர்ணத்தின் வார்படமே! என்று கூறும் கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் மங்கையர்க்கரசி


செல்வன் அமுதன் குறித்து நான் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றாலும் “மண நாள் சொல்லும் மகிழ்ச்சி விழா”வில் விடுதலை.இராசேந்திரன் அவர்கள்  அமுதனின் தத்துவ ,அரசியல் அறிவு குறித்து கூறியபோது வியந்தேன் .ஆனா ரூனா கட்டி எழுப்பிய தொழில் சாம்ராஜியத்தை இன்றைக்கு  நிர்வாகிக்கும் ஆளுமையை அவரது நிறுவன ஊழியர்கள் கூறியபோது ஆச்சரியமடைந்தேன்
மங்கையின் மருத்துவ மேல் படிப்பிற்கு எவ்வித தடையும் இருக்காது .ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கையிலும் எவ்வித சமரசமும் செய்ய வேண்டியதில்லை என்பதினால் நட்பை அடுத்த  கட்டத்திற்கு எடுத்து சென்ற நண்பர்கள் தங்கள் பிள்ளைகளின் மனமொத்த சம்மதித்தினால் உறவினர்களாக மாறினர் .இந்த உறவு இணைப்பால்  இந்த இரண்டு குடும்பங்களை விட அதிகம் மகிழ்ந்தவர்கள் நட்பு வட்டத்தினரே !
சோலை மலரே !சுவர்ணத்தின் வார்படமே!


இரண்டு அரசர்கள் நடத்தும்  விழாவாயிற்றே அதுவும் கொள்கை அரசர்கள் .பொது விழாக்களேயே  பார்த்து பார்த்து திட்டமிட்டு செய்பவர்கள் தங்களின் பிள்ளைகளின் விழாவென்றால் எந்த அளவிற்கு திட்டமிட்டு செதுக்கி இருப்பார்கள் என்பதை விழாவை கண்டவர்கள் உணர்ந்திருப்பார்கள் . இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஒரு மணவிழா மாளிகையே உருவாக்கி இருந்தார்கள் .
அரங்கின் முகப்பில் இருபுறமும் பெரியார் நின்றிருக்க பக்கத்தில் ஒரு பனை மரம் வைக்கப்பட்டிருந்தது .அந்த பனை மரத்தில் அழகான இரண்டு குருவி கூடுகள் .பனைமரம் தமிழீழத்தையும் ஈழப் போராட்டத்தில் வஞ்சிக்கப்பட்டோருக்கான அடைக்கலமாக இருந்த மாணவர் நகலகம் குருவி கூடுவாகவும் எனக்கு தெரிந்தது அந்த பனை மரம் ஒரு குறியீடாகவே உணர்ந்தேன் .

ஆடி மாதத்தில் ஆசானின் பறையிசை நிகழ்வுடன் மணவிழா தொடங்கியது .அரங்கம் கொள்கை இன உணர்வாளர்களால் நிரம்பி வழிய எந்த கொள்கைக்காக தங்களின் தந்தையார் வாழ்ந்து மறைந்தார்களோ, எந்த கொள்கை இவர்களை  இணைத்ததோ அந்த கொள்கையின்  தலைவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்  தலைமையேற்று ஜாதி மறுத்து ,தாலி மறுத்து தந்தை பெரியார் சுயமரியாதை சுடரொளி கே.கே.சி ,வள்ளல் அருணாசலம் ஆகியோரின் படங்களை தாங்கிய மேடையில் மணவிழாவை நடத்தி வைத்தார்


மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் உரையாற்றும்போது திராவிடர் கழக பாசறையில் வளர்ந்த தோழர்களின் குடும்பங்கள் இணைந்துள்ள நிகழ்வை பாராட்டியதுடன் அந்த குடும்பங்களுக்கும் இயக்கத்திற்குமான பிணைப்பை தனது நினைவலைகளில் இருந்து நினைவு கூர்ந்தார். பெரியார் என்னும் நாற்றங்காளிலே விளைந்த நாற்றுக்கள் தான் பல இயக்கங்களில் பயிராகி நிற்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டி அருமையான பகுத்தறிவு பேருரையை நிகழ்த்தினார் .
வருகை தந்த வைகோ அவர்களுக்கு சிறப்பு செய்யும் மணவீட்டார்
       வாழ்த்துரை வழங்கிய மறுமலர்ச்சி திமுக பொது செயலர் வைகோ அவர்கள் மதிமுக தொடங்கிய காலத்தில் சவுரிராசன் ஆற்றிய பணிகளையும் அதே போல் 1994 ஆம் ஆண்டு கன்னியாகுமாரி முதல் சென்னை வரை நடைபெற்ற நடைபயணத்தில் தொண்டர் படையை சவுரிராசன்  வழிநடத்திய ஆற்றலையும் விவரித்து மணமக்களை வாழ்த்தினார் .மணவிழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் இந்த மேடை ஒரு மருத்துவ மேடை என தொடங்கி இத்தகைய மணவிழாக்களை பார்வையாளனாக இருந்து கண்ட நான் இன்றைக்கு மணவிழா மேடையில் இருப்பதற்க்கு காரணமான சவுரிராசன் அவர்களுக்கு நன்றி என வாழ்த்துரையாற்றினார் .
மணவிழா மகிழ்வாக எழிலரசன் –அகிலா வாழ்விணையர்களின்  குடும்பத்தின் சார்பில் ஈ.வெ.ரா மணியம்மை பவுண்டேஷன்” நிதியாக இரண்டாவது தவணையாக ரூ 50,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
ஈ.வெ.ரா மணியம்மை பவுண்டேஷன்” நிதியாக இரண்டாவது தவணையாக ரூ 50,000

மணவிழாவில் அய்யா நல்லக்கண்ணு ,அய்யா பழ .நெடுமாறன் வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன் ,தொல்.திருமாவளவன் , பேராசிரியர் சுபவீ ,  கோவை இராமகிருட்டிணன், தி.வேல்முருகன்  நடிகர் நாசர் , நடிகை ஸ்ரீ பிரியா, தயாரிப்பாளர் தாணு,பாவலர் அறிவுமதி ,அரசு அதிகாரிகள் ,இன உணர்வாளர்கள் உள்ளிட்ட பல அரசியல் ,தமிழ் ,திரை ஆளுமைகளால் அரங்கம் நிரம்பி இருந்தது. வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான புலால் விருந்து அளிக்கப்பட்டது



ஆசிரியருடன் அய்யா நல்லகண்ணு 


 
மணவிழாவில் கோவை இராமகிருட்டிணன் தி வேல்முருகன்







நிரம்பி வழிந்த அரங்கம் ,சுவையான விருந்து ,ஆடம்பரமான ஏற்பாடுகள் ,தமிழகத்தில் பெரும் அரசியல் ஆளுமைகள் என பல இருந்தாலும் மணவிழாவின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் அது காரணமல்ல . அரங்கு நிறைந்த தமிழர் கூட்டம் ஒவ்வொருவரும் அமுதனையும் மங்கையையும் தங்கள் பிள்ளைகளாகவே கருதி வாழ்த்தி மகிழ்ந்தார்களே அது தான் மணவிழாவின் வெற்றி !அது தான் கொள்கையின் வெற்றியும் கூட !!
மணமகிழ்ச்சிநாள் விழாவில் நன்றியுரை ஆற்றிய மங்கை


செல்வங்களே ! உங்களால் இரண்டு கொள்கை குடும்பங்கள் இணைந்தன .உங்களால் பல கொள்கை குடும்பங்கள் மகிழ்வில் திளைத்தன .சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்று உங்கள் வாழ்வை தொடங்குங்கள் .வாழ்க்கை சிறக்கட்டும் ! வாழ்க மணமக்கள் !
வாழ்க மணமக்கள் !

வியாழன், 22 செப்டம்பர், 2016

திரும்பிய திசையெங்கும் பெரியார் ! உற்சாக வெள்ளம் கரைபுரள கொள்கை பிரச்சார விழாவான ஊற்றங்கரையில் தந்தை பெரியார் 138 வது பிறந்த நாள் விழா மாட்சிகள்



ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகம் ,பகுத்தறிவாளர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 138 வது பிறந்த நாள் மிகுந்த உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது .ஊற்றங்கரை நகரில் அமைந்துள்ள இரண்டு அய்யா சிலைகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அய்யா பிறந்த நாள் வாழ்த்து பதாகைகள் கட்டப்பட்டு துணிக்கொடிகள்,காகிதக்கொடிகள் கட்டப்பட்டு பார்ப்போரை கவரும் விதத்தில் அமையப்பட்டிருந்தது 

                  

  ஊற்றங்கரையின் நான்கு முனை சந்திப்பின் மையப்பகுதி முழுவதும் அய்யா உருவப்படங்கள் பல வண்ணப்பதாகைகளாக கட்டப்பட்டிருந்தது .நகரில் எத்திசை நோக்கினும் அய்யா உருவப்படங்களே காட்சி அளித்தன .துணிக்கொடிகளாலும் ,காகிதக்கொடிகளாலும் நான்கு முனை சந்திப்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது
                                                     
அய்யா அவர்களின் பிறந்த நாளையொட்டி ஊற்றங்கரை ,கல்லாவி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள அய்யா சிலைகளுக்கும் ,நகரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அய்யா உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து வாழ்த்துக்களை பகிர்வது என திட்டமிட்டு 2 நான்கு சக்கர வாகனங்களிலும் 1௦ க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களிலும் கழகக்கொடியுடன் பயணிப்பது என முடிவு செய்யப்பட்டு ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் சித.வீரமணி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ.சிவராஜ் ,ஊற்றங்கரை நகர தலைவர் இரா.வேங்கடம் ,நகர செயலர் த.சந்திரசேகரன் ,மேனாள் மாவட்ட செயலர் பழ.பிரபு ,மாவட்ட திமுக கலை ,இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் அமைப்பாளர் தணிகை .ஜி.கருணாநிதி ,விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் சி.சாமிநாதன் ,மேனாள் இணை இயக்குனர் மரு.வெ.தேவராசு ,வழக்கறிஞர் ஜெயசீலன் ,மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி ,மேனாள் நகர செயலர் முனி.வெங்கடேசன் ,பெரியார் பெருந்தொண்டர் போரப்பா ,வே .முருகேசன் ,க.துரை ,ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உலகநாதன் ,நகர மகளிரணி அமைப்பாளர் ம.வித்யா இளைஞரணி தோழர்கள் க.திருப்பதி ,ச.அலூத் ,அருண்,ஆசிரியர் முருகன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்

காலை 7 மணியளவில் தந்தை பெரியார் பிறந்த நாளன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பெரியார் பிஞ்சு இன்னிசை அய்யா சிலையருகே தோழர்கள் அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார் .பெரியார் பிஞ்சு இன்னிசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் கழக்கொடி கட்டிய இரு சக்கர வாகனங்கள் ஒன்றான் பின் ஒன்றாக அதை தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்கள் தொடர கல்லாவி நோக்கி குழு பயணப்பட்டது
சிலைக்கு மாலை அணிவிக்கும் தோழர்கள் 
கல்லாவி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தோழர்கள்
                           
காலை 7.3௦ மணியளவில் கல்லாவி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த அறிவாசான் தந்தை பெரியார் சிலைக்கு ஊற்றங்கரை ஒன்றிய அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தலைமையில் மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி அவர்கள் மாலை அணிவித்தார் ஆரியத்தை மாய்க்க வந்த தந்தை பெரியார் வாழ்க !திராவிடத்தந்தை எங்கள் அய்யா வாழ்க ! என்கிற ஒலி முழக்கங்கள் ஒலிக்க அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
இந்திரா நகரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 
                              
காலை சிற்றுண்டிக்கு பின்னர் ஊற்றங்கரை இந்திரா நகரில் முதுபெரும் பெரியார் தொண்டர் சி.சாமிநாதன் அவர்கள் தலைமையில்  அய்யா அவர்களின் உருவப்படத்திற்கு முனிரத்தினம் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்தார்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அய்யா பிறந்த நாள் விழா 
                 
ஊற்றங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ள தலைமை ஆசிரியர் பொ.பொன்னுசாமி அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்தார்



எஸ்.வி.டி திருமண மண்டபத்தின் உரிமையாளர் தியாகராஜன் அவர்கள் தலைமையில் அய்யா பிறந்தநாள் 
              

   கல்லாவி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு மதிமுக நகர பொறுப்பாளர் ராஜி அவர்களும் மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் இர.திருநாவுக்கரசு அவர்களும் முன்னிலை வகிக்க தொழில் அதிபரும் எஸ்.வி.டி திருமண மண்டபத்தின் உரிமையாளர் தியாகராஜன் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்தார்



திமுக நகர செயலர் தலைமையில் தமிழ்குயில் உணவகத்தில் 
           
ஊற்றங்கரை கல்லாவி சாலையில் உள்ள தமிழ்குயில் விரைவு உணவகத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு பெரியாரணி பயிற்ருனர் முனி.வெங்கடேசன் முன்னிலை வகிக்க திமுக நகர செயலாளர் இர .பாபு சிவக்குமார் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


பெரியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் சீனி.திருமால்முருகன் மாலை அணிவித்து மரியாதை 
அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  அய்யா விழா


                            
ஊற்றங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு பள்ளியின்  ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும் அதியமான் கல்வி நிறுவனங்களின்  நிறுவனருமான சீனி.திருமால் முருகன்  அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்தார்
ஊற்றங்கரை காய்கறி மார்கெட்டில் அய்யா பிறந்த நாள் விழா 
                 

ஊற்றங்கரை காய்கறி மார்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு நகர செயலர்  த.சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்க அதியமான் டுட்டோரியல் நிறுவனத்தின்பொறுப்பாளர் அண்ணாமலை முன்னிலை வகிக்க வழக்கறிஞர் ஜெயசீலன் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்தார்


தமிழ்குடிலில் தந்தை பெரியாருக்கு விழா 
           

ஊற்றங்கரை நகர திராவிடர் கழகத்தலைவர் இரா.வேங்கடம் அவர்களின் இல்லமான தமிழ்குடிலில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு ஆசிரியை சொர்ணம் அவர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்

வட்டாட்சியர் அலுவலக சாலையில் அய்யா விழா 
                       
 ஊற்றங்கரை வட்டாட்சியர் அலுவலக சாலையில் தணிகை டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் அருகே வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளர் தணிகை ஜி கருணாநிதி அவர்கள் தலைமை தாங்க மேனாள் இணை இயக்குனர் வெ.தேவராசு அவர்கள் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
வித்யா மந்திர் நிறுவனர் கல்வியாளர் வே.சந்திரசேகரன் அய்யா படத்திற்கு மாலை 
                  
தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற ஊற்றங்கரை நகரின் சிறந்த பள்ளிகளுள் ஒன்றான வித்யா மந்திர்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு பள்ளியின்  ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும் வித்யா மந்திர்  கல்வி நிறுவனங்களின்  நிறுவனருமான கல்விவள்ளல் வே.சந்திரசேகரன்  அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

              

ஊற்றங்கரை காமராஜர் நகரில் அமைந்துள்ள மண்டலத்தலைவர் பழ.வெங்கடாசலம் அவர்கள் இல்லம் அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு ஊற்றங்கரை அரசினர் மாணவர் விடுதியின் காப்பாளர் சம்பத் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
எல் ஐ சி அலுவலகம் அருகே அய்யா படத்திற்கு மாலை 
             
  

ஊற்றங்கரை காமராஜ் நகர் எல் .ஐ .சி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற வே.முருகேசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இன எழுச்சி இல்லத்தில் அய்யா பிறந்த நாள் விழா 
           

சுயமாரியாதை சுடரொளி அ.பழனியப்பன் அவர்களின் இன எழுச்சி இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவின் அமைப்பாளர் பா.அமானுல்லா  தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பெரியார் நகர் குடியிருப்பில் அய்யா விழா 



ஊற்றங்கரை பெரியார் நகர் குடியிருப்போர் சார்பில் தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற வே.முருகேசன் அவர்கள் தலைமை தாங்க பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சித.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்
கவின் மருத்துவமனையில் அய்யா விழா 
                               
ஊற்றங்கரை கடலூர் மெயின் ரோடு கவின் மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ படத்திற்கு மேனாள் இணை இயக்குனரும்,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணை தலைவருமான மரு.தேவராசு அவர்கள் மாலை அணிவித்து தோழர்களுக்கு இனிப்புக்களை வழங்கி அய்யா பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்
                          

அய்யா சிலைகளுக்கு அனைதுகட்சியினர் மரியாதை 
                             

தேசிய நல்லாசிரியர் வரதராசன் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை 
ஊற்றங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு திராவிடர் கழகம் ,பகுத்தறிவாளர் கழகம் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ,திராவிட முன்னேற்ற கழகம் ,விடுதலை சிறுத்தைகள் ,அனைத்து வணிகர்கள் சங்கம் ,உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சார்ந்தவர்கள் ,பெரியார் பற்றாளர்கள் மாலை அணிவித்து இனிப்புக்களை வழங்கி அய்யா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்     
அப்பி நாயக்கன் பட்டியில் உயரப்பறக்கும் கழக கொடி

அப்பிநாயக்கன்பட்டியில் தந்தை பெரியார் அவர்களின் 138 வது பிறந்த நாளையொட்டி பெரியார் படம் வைக்கப்பட்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வழக்கறிஞர் ஜெயசீலன் கழகக்கொடியை ஏற்றி வைத்தார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற வரதராசன் அவர்கள் அய்யா அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந் நிகழ்ச்சியில் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் சித.வீரமணி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ.சிவராஜ் ,ஊற்றங்கரை நகர தலைவர் இரா.வேங்கடம் ,நகர செயலர் த.சந்திரசேகரன் ,மேனாள் மாவட்ட செயலர் பழ.பிரபு ,மாவட்ட திமுக கலை ,இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் அமைப்பாளர் தணிகை .ஜி.கருணாநிதி ,விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் சி.சாமிநாதன் ,மேனாள் இணை இயக்குனர் மரு.வெ.தேவராசு ,வழக்கறிஞர் ஜெயசீலன் ,மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி ,மேனாள் நகர செயலர் முனி.வெங்கடேசன் ,பெரியார் பெருந்தொண்டர் போரப்பா ,வே .முருகேசன் ,க.துரை ,ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உலகநாதன் ,நகர மகளிரணி அமைப்பாளர் ம.வித்யா ,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வசந்தமல்லி இளைஞரணி தோழர்கள் க.திருப்பதி ,ச.அலூத் ,அருண், ஆசிரியர் முருகன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்

காலை 11 மணி


             


            

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 138வது பிறந்தநாள் விழா ஊற்றங்கரை திருமண கூடத்தில்  கொண்டாடப்பட்டது .முன்னதாக தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் திமுக ஒன்றிய செயலர் வ.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் ‘’பெரியார் பிறந்த நாள் கேக் ‘’ வெட்டி கொண்டாடப்பட்டது.வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி தனது 84 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் பெரியார் பெருந்தொண்டர் சி.சுவாமிநாதன் அவர்கள் 138 என்கிற எண்ணை கொண்ட மெழுகுவர்த்தியை அனைத்து கேக் வெட்டி அனைத்து தோழர்களுக்கும் வழங்கினார்
நேரலை ஒளிபரப்பு
                         

           

    அதனை தொடர்ந்து  சென்னை பெரியார் திடலில் நடைபெற்று கொண்டிருந்த பெரியார் பிறந்த நாள் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பபட்டது .மாணவர் கருத்தரங்கம் ,அதனை தொடர்ந்து நடைபெற்ற மணவிழா வழக்கறிஞர் அருள்மொழி ,மேனாள் அமைச்சர் ஆ.இராசா ,பேராசிரியர் சுபவீ ,பழ.கருப்பையா ,கவிஞர் கலி.பூங்குன்றன் ,தமிழர் தலைவர் வீரமணி ஆகியோர்களின் உரைகளை கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தனர் .இந்த நிகழ்வல் ஏராளமான திராவிடர் கழக தோழர்களும் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்ட தோழர்களும் ,திமுக ,விடுதலை சிறுத்தை தோழர்களும் கலந்து கொண்டனர் விழாவின் அனைவருக்கும் புலால் உணவு விருந்து அளிக்கப்பட்டது .அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் 3.3௦ மணியளவில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து கொண்டு அய்யா பிறந்த நாள் விழா ஊற்றங்கரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது